• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • சபரிமலையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு... தடுப்பூசி சான்றிதழ் அவசியம்...

சபரிமலையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு... தடுப்பூசி சான்றிதழ் அவசியம்...

சபரிமலை

சபரிமலை

மண்டலகால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்பட்டது. நாளை அதிகாலை 4:00 மணிக்கு மண்டலகாலம் ஆரம்பமாகிறது.

  • Share this:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் புனித நீராட தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை விட ஒரு நாள் முன்னதாக கேரளாவில் கார்த்திகை ஒன்றாம் தேதி வருவதால் இன்று மாலை 5:00 மணிக்கு சபரிமலை நடை திறக்கப்பட்டது. இதுபோல நாளை அதிகாலை 4:00 மணிக்கு புதிய மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றியதும் இந்த ஆண்டுக்கான மண்டலகாலம் தொடங்கும். இந்த சீசனில் தினமும் 30000 பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

இவர்கள் இரண்டு தடுப்பூசி அல்லது 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழ் மற்றும் ஆதார் ஒரிஜினல் கார்டுடன் வரவேண்டும். பம்பை கணபதி கோவில் அருகே உள்ள கவுண்டரில் கூப்பன் சரிபார்க்கப்பட்ட பின்னர் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். முன்பதிவு செய்யாதவர்களுக்கு நிலக்கல்லில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி செய்யப்பட்டுள்ளது.

பத்தணந்திட்டை மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. சபரிமலையில் பெய்த கனமழையால் இறுதி கட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பம்பை ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டு உள்ளது. போலீசார், தீயணைப்பு வீரர்கள், டாக்டர்கள், சுகாதார ஊழியர்கள் இங்கு வந்து பொறுப்பேற்றுள்ளனர்.

மேலும் படிக்க... திருவண்ணாமலையில் மகா தீபம் எப்போது? தேதி, நேரம் குறித்த தகவல்கள்...

மேலும் தற்போதுள்ள நிலையில் சபரிமலை தரிசனத்திற்கு கட்டுப்பாடு விதிக்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற 18-ந் தேதி வியாழக்கிழமை வரை முன்பதிவு செய்த பக்தர்களுக்கு வேறு தேதியில் தரிசனம் செய்ய அனுமதிப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் தற்காலிக அவசர முன்பதிவு தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க... மாங்காடு ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: