தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில் நகரங்கள் உள்ளன. அதில், காஞ்சிபுரம், மதுரை மற்றும் கும்பகோணம் ஆகியவை பெயர் பெற்றவை. ஏனென்றால், இந்த நகரங்களில் அதிக கோயில்கள் உள்ளன. அதிலும், கும்பகோணம் தோஷத்தை நீக்கும் ஸ்தலங்களுக்கு பெயர் பெற்றது. எனவே, தான் இதை கோவில் நகரம் என்று அழைக்கிறார்கள்.
இங்கே வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு தரும் ஸ்தலங்கள் உள்ளன. நேரில் சென்று இந்த கோயில்களில் பரிகாரம் செய்தால், பிரச்னை நீங்கி வாழ்க்கை வளம் பெறும் என கூறப்படுகிறது. அந்தவகையில், கும்பகோணத்தில் உள்ள பரிகார ஸ்தலங்கள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம். அதே போல, எந்த பிரச்சனை தீர எந்த கோவிலை வழிபட வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.
நோயற்ற வாழ்வை அருளும் சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில் : ஒருவரது வாழ்க்கையில் அறம், பொருள், இன்பம், செல்வம் ஆகியவற்றை போல நோயற்ற வாழ்க்கையும் முக்கியம். ஏனென்றால், நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பல மொழி உள்ளது. வாழ்க்கையில் உள்ள அனைத்து புரச்சனைகளையும் நீக்கி நோயற்ற வாழ்வை அருளும் சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில் கும்பகோணத்தில் உள்ள பரிகார தலங்களில் ஒன்று.
திருமணஞ்சேரி கோவில் : திருமணஞ்சேரி என்றால் திருமணம் நடைபெறும் இடம் என்று பொருள். திருமணஞ்சேரி கோவிலுக்கு சென்று வந்தால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த கோயிலில் திருமணக் கோலத்தில் சிவனும் அம்பிகையும் இருப்பதுதான் இதன் சிறப்பு.
திருமணம் தடைபட்டவர்கள், கோயிலில் உள்ள சப்தகிரி தீர்த்தத்தில் குளித்து விட்டு மூலவரை தரிசித்து அர்ச்சனை செய்ய வேண்டும். பின்னர், 5 நெய் விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நல்ல வரன் கிடைக்கும் என்றும் திருமணம் கைகூடும் என்றும் கூறப்படுகிறது.
Also Read | மிதுனத்தில் செவ்வாய்: அடுத்த 69 நாட்களுக்கு இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!
கும்பகோணத்தில் இருக்கும் பரிகார தலங்கள் :
பல்வேறு விதமான பிரச்னைகள் மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படுகிறது. என்னதான் பிரச்னைகள் தவிர்க்க நாம் பாடுபட்டாலும் ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சனைகள் வந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கெல்லாம் தீர்வாக பரிகார தலங்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டால் அவை எல்லாம் தீரும் என்பது அனைவரின் நம்பிக்கை. அந்தவகையில், உங்கள் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க மேலே குறிப்பிட்டுள்ள கோயில்களுக்கு சென்று இறை வழிபாடு செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Astrology, Hindu Temple, Tamil Nadu