ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

திருப்பதியில் ரதசப்தமி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்...!

திருப்பதியில் ரதசப்தமி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்...!

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்

tirupati | வைஷ்ணவ ஆலயங்களை போல் திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலிலும் ரதசப்தமி உற்சவம் அன்றைய தினம் நடைபெறும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirupati, India

திருப்பதியில் ரதசப்தமியை முன்னிட்டு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று நடத்தப்பட்டது. இம்மாதம் 28ஆம் தேதி ரத சப்தமி உற்சவம். அதாவது சூரியன் தன்னுடைய பயணத்தை தட்சிணாயனத்திலிருந்து உத்திராயணம் நோக்கி திருப்பும் நாள். அன்றைய தினத்தை சூரிய ஜெயந்தி தினம் என்றும் கொண்டாடுவார்கள்.எனவே வைஷ்ணவ கோவில்களில் சூரிய ஜெயந்தி தினத்தை ரத சப்தமி உற்சவ தினமாக கொண்டாடுவதும் வழக்கம். அதன் அடிப்படையில் அன்றைய தினம் ரதசப்தமி உற்சவம் என்ற பெயரில் ஒரே நாளில் இறைவனின் ஏழு வாகன வீதி உலா சேவைகள் நடைபெறும்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் இந்த வழக்கம் உள்ளது. ஆனால் வைஷ்ணவ ஆலயங்களை போல் திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலிலும் ரதசப்தமி உற்சவம் அன்றைய தினம் நடைபெறும்.பத்மாவதி தாயார் காலை ஐந்து மணி அளவில் சூரிய பிரபை வாகனத்தில் துவங்கி இரவு வரை ஏழு வெவ்வேறு வாகனங்களில் எழுந்துருளி கோவில் மாட வீதிகளில் ஊர்வலம் கண்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்க இருக்கிறார்.

இதனை முன்னிட்டு பத்மாவதி தாயார் கோவிலை கழுவி சுத்தம் செய்யும் நிகழ்ச்சியான கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று நடைபெற்றது.அப்போது கோவில் கருவறை முதல் பிரசாத தயாரிப்பு கூடங்கள், துணை கோவில்கள் ஆகியவை உள்ளிட்ட கோவிலின் அனைத்து பகுதிகளும் கழுவி சுத்தம் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து கோவில் சுவர்களுக்கு நறுமண கலவை பூசப்பட்டது.தொடர்ந்து மூலவருக்கு நடத்தப்பட்ட நைவேத்தியத்திற்கு பின் மதியத்திற்கு மேல் பக்தர்கள் தாயாரை வழிபட அனுமதி அளிக்கப்பட்டது.

First published:

Tags: Tirumala Tirupati, Tirupati