ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

கிரக தோஷத்தை நீக்கும் ரத சப்தமி 2023 விரதம் எப்போது?

கிரக தோஷத்தை நீக்கும் ரத சப்தமி 2023 விரதம் எப்போது?

ரத சப்தமி

ரத சப்தமி

Ratha Saptami 2023 | ரத சப்தமி இந்து சமயத்தவர்களால் தை அமாவாசை நாளை அடுத்த ஏழாவது நாளில் கொண்டாடப்படுவதாகும். இந்த விரதத்தை மேற்கொண்டால் கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகில் உயிரினங்கள் வாழ சூரியனே காரணம். அந்த சூரியனின் அருள் பெற உகந்த நாளாக ரத சப்தமி நாள் அமைகிறது. தை அமாவாசைக்கு அடுத்த ஏழாவது நாளே ரத சப்தமி கொண்டாடும் நாள் ஆகும். உத்தராயண புண்ணிய காலம் என்று அழைக்கப்படும் சூரியனின் வடக்கு நோக்கிய பயண காலத்தில் மிகச் சரியாக வடக்கு நோக்கி பயணம் ஆரம்பிக்கும் நாள் ரத சப்தமி நாள் ஆகும். இந்த ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி அன்று ரத சப்தமி நாள் வருகிறது. ரத சப்தமி ஜனவரி 27ஆம் தேதி காலை 9:09 மணிக்கு ஆரம்பித்து 

அடுத்த நாள் ஜனவரி 28ஆம் தேதி காலை 8:42 மணிக்கு முடிவடைகிறது.

ஏழு குதிரைகள் பூட்டிய தேரை சூரியன் வடக்கு நோக்கி திருப்புவதாக ஐதீகம். ரத சப்தமி சூரிய சப்தமி என்றும் ஆரோக்கிய சப்தமி என்றும் அழைக்கப்படுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த நாளாக அது கருதப்படுகிறது. அன்று சூரியனை வழிபடுவதன் மூலம் நோய்கள் அகலும் என்ற நம்பிக்கை நிலவுகின்றது.

ரத சப்தமி அன்று விடியற்காலையில் எழுந்து சூரிய உதய சமயத்திற்கு பிறகு நீராட வேண்டும். குறிப்பாக நீர் நிலைகளில் நீராடுவது சிறப்பு. கிழக்கு நோக்கி நின்று நீராட வேண்டும். ஏழு எருக்க இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆண்கள் அதில் அட்சதை மற்றும் விபூதியையும் பெண்கள் அட்சதை மற்றும் மஞ்சளையும் வைத்துக் கொள்ள வேண்டும். மூன்று இலைகளை தலை மீதும் இரண்டு இலைகளை வலது தோள்பட்டை மீதும் இரண்டு இலைகளை இடது தோள்பட்டை மீதும் வைத்து நீராட வேண்டும். பிறகு சூரிய பகவானை நோக்கி வணங்கி வழிபட வேண்டும்.

பூஜை அறையில் ஒரு மனைப் பலகை மீது ஒரு சக்கரம் கொண்ட தேரும் அதன் நடுவில் சூரியனும் வரைந்து விளக்கேற்ற வேண்டும். மஞ்சள், குங்குமம், அட்சதை சார்த்தி சூரியனை வழிபட வேண்டும். பிறகு தூப தீபம் காட்டி வணங்க வேண்டும். சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்ய வேண்டும். வியாதிகள் குணமாக அன்று ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்ய வேண்டும். அன்ன தானம் செய்வது சிறப்பு.

மேலும் ரத சப்தமி நாளில் சூரிய பகவானின் பெயரில் தானம் செய்யவது நல்லது. ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் ஏழு வகையான பாவங்களைச் செய்கிறான் என்று கூறப்படுகிறது. இவை வேண்டுமென்றே, தற்செயலாக, வாய் வார்த்தையாலும், உடல் செயலாலும், மனதாலும், முற்பிறவியிலும் செய்த பாவங்கள். ரத சப்தமி அன்று சூரிய பகவானை வழிபடுவதால் இந்த பாவங்களில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

First published:

Tags: Sun, Thai Month