ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புண்ணியத்தலங்களில் ஒன்றாக விளங்கும் உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் இன்று (டிச.19ம் தேதி) ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி துவங்கியது. காலை 7:45 மணிக்கு மரகத நடராஜருக்கு சந்தனக்காப்பு களைதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மரகத நடராஜருக்கு சந்தனாதி தைலம், கஸ்தூரி தைலம் உள்ளிட்ட 32 வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
இன்று பகல் 11 மணி முதல் இரவு வரை மட்டுமே சந்தனம் இல்லாமல் பச்சை மரகத நடராஜரைத் தரிசிக்க முடியும். இது ஒரு அபூர்வ தரிசனம் ஆகும் . நாளை 20-ந்தேதி அதிகாலை ஆருத்ரா மகா அபிஷேகத்திற்கு பின், அதிகாலை 2 மணிக்கு மேல் மீண்டும் சந்தனக்காப்பு சாத்தப்படும்.
மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம் என்ற சிறப்புகளை கொண்டுள்ள இத்திருக்கோவில். இலந்தை மரத்தின் அடியில் சுயம்புவாய் தோன்றியவர் மங்களநாதர். இங்குள்ள மங்களநாயகி அம்மன் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் தருபவளாக அருள்கிறாள்.
நடராஜப் பெருமாள் சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடியதாகவும் மதுரையில் கால் மாறி ஆடியதாகவும், திருஉத்தரகோசமங்கையில் அறையில் ஆடியதாகவும் வரலாறு. மற்ற கோயில்களில் நடராஜரின் கற்சிலைகள் பஞ்சலோக சிலைகளையே காண முடியும். ஆனால் இங்கோ பச்சை மரகதக்கல்லால் உருவாக்கப்பட்ட நடராஜர் சிலை இருக்கிறது. மாணிக்கவாசகரால் பாடல் பெற்றது இத்தலம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க... ஆருத்ரா தரிசன திருவிழா: சிதம்பரத்தில் கோலாகமாக நடந்த தேரோட்டம்...
இது ஆறு அடி உயரம் உடையது. இந்தச் சிலையின் வீரியத்தை பக்தர்கள் தாங்க முடியாது என்பதால் ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டிருக்கும். மார்கழி ஆருத்ரா தரிசனத்தன்று மட்டும் திருமேனி (சிலை) மீது சாத்தப்பட்ட சந்தனக்காப்பு களையப்படும்.
நடராஜரிடம் இருந்து களைந்த சந்தனத்தை நீரில் கரைத்து உட்கொண்டால் நோய் நீங்கும். புத்திரபாக்கியம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆகவே இந்த சந்தனத்தை பெற்று தரிசனம் செய்ய, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
மேலும் பாடிக்க... ஆருத்ரா தரிசன விழா... சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேரோட்டம் நடத்த அனுமதி...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.