அத்திவரதரை தரிசனம் செய்தார் ரஜினிகாந்த்

அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் இதுவரை ரூ.6.81 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளனர்

அத்திவரதரை தரிசனம் செய்தார் ரஜினிகாந்த்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில்லுக்கு நள்ளிரவில் சென்று அத்திவரதரை தரிசனம் செய்தார் நடிகர் ரஜினிகாந்த்
  • News18
  • Last Updated: August 14, 2019, 7:45 AM IST
  • Share this:
அத்தி வரதரை நள்ளிரவு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் ஆகியோர் தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் அனந்தசரஸ் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் சிலை எடுக்கப்பட்டு 48 நாட்கள் தரிசனத்துக்கு வைக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருவது வழக்கம். அதேபோல 40 ஆண்டுகளுக்கு பின் கடந்த ஜூலை 1-ம் தேதி குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை பக்தர்கள் தரிசனத்துக்கு வைக்கப்பட்டது. இந்நிலையில் 48-வது நாளான ஆகஸ்ட் 17-ல் அத்திவரதர் சிலை மீண்டும் குளத்தில் வைக்கப்பட உள்ளது. நாளை மறுதினம் (16-ம் தேதி) வரை மட்டுமே பக்தர் தரிசனத்துக்கு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்காக பக்தர்கள தினமும் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த 44 நாட்களாக நடைபெற்று வரும் காஞ்சிபுரம் அத்திவரதர் வைபத்தில் இதுவரை ரூ. 6 கோடியே 81 லட்ச ரூபாய் ரொக்க பணமும், 87 கிராம் தங்கமும், 2507 கிராம் வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள்


செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில் நள்ளிரவு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் ஆகியோர் தரிசனம் செய்தனர்

அத்திவரதரை தரிசனம் செய்ய குடும்பத்தாருடன் வந்த நடிகர் ரஜினிகாந்த்
Also watch

First published: August 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading