ராகு பலன்: மேஷ ராசிக்கு வரும் ராகுவால் இந்த 4 ராசியினருக்கு எல்லா வகையிலும் லாபம்தான்...
ராகு பலன்: மேஷ ராசிக்கு வரும் ராகுவால் இந்த 4 ராசியினருக்கு எல்லா வகையிலும் லாபம்தான்...
ராகு பகவான்
Rahu Palan 2022 | ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். பிறந்த ஜாதகத்தில் ராகு- கேது மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய வீடுகளில் இருந்தால் வலுவான யோகம் உண்டு... இவை தவிர நல்ல யோகம் பெற போகும் ராசியினர் யார் யார் தெரியுமா?
திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பங்குனி மாதம் 29ஆம் தேதி ஏப்ரல் 12ஆம் தேதி ராகு பகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். அதே போல கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த இடப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
ஜோதிடத்தில் நிழல் கிரகமான ராகுவுக்கு தனி இடம் உண்டு. ராகு என்ற பெயரைக் கேட்டாலே பலரும் பயப்படுவார்கள். இந்த கிரகத்தால் ஏற்படும் தீய தாக்கம் அதிகமாக இருக்கும் என்பது நம்பிக்கை. ஆனால் சில சமயம் நல்லது கூட நடக்கும். மிக மெதுவாக நகரும் ராகு 18 மாதங்களுக்குப் பிறகு மற்றொரு ராசிக்குள் நுழைகிறார். அவர் ஏப்ரல் 12, 2022 அன்று தனது ராசியை மாற்றப் போகிறார். இந்த ராகு சஞ்சாரம் மேஷம் முதல் மீனம் வரை பாதிக்கிறது. குறிப்பாக 4 ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும்.
மிதுனம்
மிதுன ராசியில் இருப்பவர்களுக்கு ராகு பெயர்ச்சியின் போது உழைப்பின் பலன் கிடைக்கும். சமூகத்தில் நற்பெயர் அதிகரிக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தை அடைவார்கள்... பண வரவு அதிகரிக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்ய இதுவே நல்ல நேரம்.
கடகம்
கடகம் ராசியில் இருப்பவர்களுக்கு, அவர்களின் நிதி நிலையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவீர்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் வருமானம் நன்றாக இருக்கும். அலுவலகத்தில் பாராட்டுகள் கிடைக்கும். மிக மெதுவாக வளர்ந்து வரும் வணிகம் வேகம் பெறும். வியாபாரத்தில் லாபம் நன்றாக வரும். பங்குச் சந்தையில் முதலீடு செய்வதால் பலன் கிடைக்கும்.
விருச்சிக ராசியில் ராகு சஞ்சரிப்பது அவர்களுக்கு நன்மை பயக்கும். இந்த நேரத்தில் நீங்கள் பணத்தை குவித்து எல்லாவற்றிலும் வெற்றி பெறுவீர்கள். புதிய தொழில் தொடங்க இது நல்ல நேரம். பங்குச்சந்தையில் திடீர் பண ஆதாயத்திற்கான அறிகுறிகள் தென்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்பு கிடைக்கும்.
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் ராகு அவர்களுக்கு சுப பலன்களைத் தர போகிறார். இந்த காலகட்டத்தில் பொருளாதார நிலை மேம்படும். சனி சம்பந்தமான எண்ணெய், இரும்பு போன்றவற்றை வைத்து வேலை செய்பவர்களுக்கு இது நல்ல நேரம். பணம் குவிப்பதில் வெற்றிதான். ராகு மற்றும் சனி கிரகங்களுக்கு இடையே நட்பு உணர்வு உள்ளது. எனவே பங்குச் சந்தையில் திடீர் பண ஆதாயங்களையும் பெறலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.