ராகுவும் கேதுவும் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குச் செல்லும் காலகட்டத்தைதான் நாம் ராகு - கேது பெயர்ச்சி என்கிறோம். 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ராகு பகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கும் கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகிறார். இதனால் விருச்சிகம் ராசியினருக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்...
விருச்சிகம்: கேது 7 ஆம் பாவத்தில் ராகு இருந்த நிலை மாறி இனி விரைய ஸ்தானமான 12 ஆம் பாவத்தில் கேது 6ஆம் பாவத்தில் ராகு வருகிறது. ஏழரை சனியால் அவதிப்பட்டு பின்னர் விடுபட்டாலும் ஜென்ம கேது மனதில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதுநாள் வரை யாருக்கோ போக வேண்டிய பிரச்சனைகள் உங்களை வாட்டி வதைத்தது. இனி பிரச்சினைகள் தீரப்போகிறது. திருமணம் கை கூடி வரும். நீண்ட நாள் பட்ட கடன்களும் அடைப்படும். உடலில் இருந்து வந்த சோம்பலும் , மனச்சோர்வும் நீங்கும். சித்தர் சமாதிகளின் தரிசனம் உண்டாகும். தெய்வீக கனவுகள் வரும்.
ராகு, கேது பெயர்ச்சி நேரம்:
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி பிலவ வருடம், பங்குனி மாத 29ம் தேதி 12.04.2022 மதியம் 1.38 மணியளவில் ராகு மேஷ ராசிக்கும், கேது துலாம் ராசிக்கும் பெயர்ச்சியாகின்றனர். வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 21.03.2022, பங்குனி 7ம் தேதி திங்கள் கிழமை மதியம் 3.02 மணிக்கு பெயர்ச்சியாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.