முகப்பு /செய்தி /ஆன்மிகம் / ராகு கேது பெயர்ச்சி 2022: விருச்சிக ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

ராகு கேது பெயர்ச்சி 2022: விருச்சிக ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

விருச்சிகம்

விருச்சிகம்

rahu ketu Peyarchi 2022 | ராகு கேது பெயர்ச்சியானது மார்ச் மாதம் 21 ஆம் தேதி, மதியம் 3:13 மணி அளவில் நடைபெறுகிறது. ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறை நடக்கக்கூடிய இந்த ராகு கேது பெயர்ச்சி எந்தெந்த ராசிகளுக்கு பலனை தரப்போகிறது, யாரெல்லாம் பரிகாரத்தை செய்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி ஜோதிடர் காழியூர் நாராயணன் கணித்து அளித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3-MIN READ
  • Last Updated :

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த ராகு-கேது பெயர்ச்சி முன்னேற்றங்களை தரும்‌. தற்போது ராகு 7-ம்‌ இடமான ரிஷபத்தில்‌ இருக்கிறார்‌. இது சிறப்பான இடம்‌ என்று சொல்ல முடியாது. இங்கு அவரால்‌ இடப்பெயர்ச்சியையும்‌, அவப்பெயரையும்‌ சந்திக்க நேரலாம்‌. சிலர்‌ கெட்டவர்களோடு சேரும்‌ சூழ்நிலை உருவாகும்‌. யாரிடமும்‌ கவனமாக பழகவேண்டும்‌. அவர்‌ மார்ச்‌ 21-ந்‌ தேதி அன்று 6-ம்‌ இடமான மேஷத்திற்கு மாறுகிறார்‌. இது சிறப்பான இடம்‌. இனி மேற்கண்ட இடர்பாடுகள்‌ வராது. அவர்‌ உங்களை தீயோர்‌ சேர்க்கையில்‌ இருந்து விடுவித்து முன்னேற்றத்துக்கு வழிவகுப்பார்‌. காரிய அனுகூலத்தை கொடுப்பார்‌. மேலும்‌ அவரது பின்னோக்கிய 4-ம்‌ இடத்துப்‌ பார்வை உங்கள்‌ ராசிக்கு 3-இடமான மகரத்தில்‌ விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும்‌. இதன் மூலமும்‌ நன்மைகள்‌ கிடைக்கும்‌. அவரது பார்வையால்‌ பொருளாதார வளத்தையும்‌ குடும்பத்தில்‌ மகிழ்ச்சியையும்‌ தொழில்‌ விருத்தியையும்‌ தருவார்‌.

கேது தற்போது உங்கள்‌ ராசியில்‌ இருக்கிறார்‌. இது சிறப்பான இடம்‌ அல்ல. அவர்‌ காரிய தடையையும்‌, உடல்‌ உபாதையையும்‌ தரலாம்‌. ஆனால்‌ அவரின்‌ பின்னோக்கிய 11-ம்‌ இடத்துப்‌ பார்வையால்‌ எந்த பிரச்சினையையும்‌ முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம்‌. தெய்வ அனுகூலம்‌ கிடைக்கும்‌. பொருளாதார வளம்‌ மேம்படும்‌. அவர்‌ மார்ச்‌ 21-ந்‌ தேதி அன்று உங்கள்‌ ராசிக்கு 12-ம்‌ இடத்திற்கு போகிறார்‌. இதுவும்‌ சிறப்பான இடம்‌ அல்ல. இவரால்‌ பொருள்‌ விரயம்‌ ஏற்படலாம்‌. அதற்காக கவலை கொள்ள வேண்டாம்‌. காரணம்‌ கேதுவின்‌ பின்னோக்கிய 7-ம்‌ இடத்துப்பார்வை உங்கள்‌ ராசிக்கு 6-ம்‌ இடமான மேஷத்தில்‌ விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும்‌. இதனால்‌ உங்களுக்கு அபார ஆற்றல்‌ பிறக்கும்‌.

பொருளாதார வளம்‌ அதிகரிக்கும்‌. பகைவர்களின்‌ சதி உங்களிடம்‌ எடுபடாது. அவர்கள்‌ சரண்‌ அடையும்‌ நிலை ஏற்படும்‌. நகை ஆபரணங்கள்‌ வாங்கலாம்‌. சனிபகவான்‌ ஆண்டு முழுவதும்‌ நன்மை தருவார்‌. அவர்‌ உங்கள்‌ ராசிக்கு 3-ம்‌ இடமான மகரத்தில்‌ இருப்பது மிகச்சிறப்பானதாகும்‌. அவர்‌ உங்களுடைய முயற்சிகள்‌ அனைத்தையும்‌ வெற்றி அடைய செய்வார்‌. பொருளாதார வளத்தை மேம்படுத்துவார்‌. தொழிலில்‌ சிறந்தோங்க செய்வார்‌. 2023 மார்ச்‌ 29-ந தேதி உங்கள்‌ ராசிக்கு 4-ம்‌ இடமான கும்பத்திற்கு செல்கிறார்‌. இது சிறப்பான இடம்‌ அல்ல. ஆனால்‌ அவரின்‌ 3-ம்‌ இடத்துப்‌ பார்வையால்‌ நற்பலனை தருவார்‌.

குருபகவான்‌ 4-ம்‌ இடமான கும்ப ராசியில்‌ இருக்கிறார்‌. இந்த இடம்‌ அவ்வளவு சிறப்பானது என்று சொல்ல முடியாது. பொதுவாக குருபகவான்‌ 4-ல்‌ இருக்கும்‌ போது மனஉளச்சலையும்‌, உறவினர்‌ வகையில்‌ வீண்பகையையும்‌ உருவாக்குவார்‌. ஆனால்‌அதைகண்டு கவலை கொள்ள வேண்டாம்‌. மேலும்‌ இங்கு குரு நீண்டநாட்கள்‌ இருக்க மாட்டார்‌. அவர்‌ ஏப்ரல்‌14-ந்‌ தேதி அன்று பெயர்ச்சி அடைந்து 5-ம்‌ இடமான மீன ராசிக்கு மாறுகிறார்‌.இது சிறப்பான இடம்‌. அவர்‌ குடும்பத்தில்‌ குதூகலத்தை கொடுப்பார்‌.

திருமணம்‌ போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார்‌. பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார்‌. பெண்களால்‌ மேன்மை கிடைக்கும்‌. குழந்தை பாக்கியம்‌ கிடைக்கும்‌. மேலும்‌ அப்போது அவரது 5,7-ம்‌ இடத்துப்பார்வைகள்‌ சிறப்பாக அமைந்து உள்ளது. அதன்மூலமும்‌ நற்பலன்‌ கிடைக்க பெறுவீர்கள்‌.

இனி விரிவான பலனை காணலாம்‌

இந்த காலத்தில்‌ குருவும்‌, ராகுவும்‌ பல்வேறு முன்னேற்றங்களை தருவார்கள்‌. இதனால்‌ நன்மைகள்‌ அதிகரிக்கும்‌. பணப்புழக்கம்‌ சிறப்படையும்‌. பொருளாதாரத்தில்‌ ஒருபடி மேலோங்கலாம்‌. தடைகள்‌ அனைத்தும்‌ விலகும்‌. வாகன சுகம்‌ கிடைக்கும்‌. குருவால்‌ சுபநிகழ்ச்சிகள்‌ நடக்கும்‌. சகோதரிகள்‌ உறுதுணையாக இருப்பர்‌. குழந்தை பாக்கியம்‌ கிட்டும்‌. செல்வாக்கு அதிகரிக்கும்‌.

உத்தியோகத்தில்‌ சக ஊழியாகள உதவிகரமாக இருப்பார். மேலஅதிகாரிகள அனுசரணையாக இருப்பார். சக பெண்‌ ஊழியர்கள்‌ உதவிகரமாக இருப்பர்‌. விரும்பிய இடத்துக்கு மாற்றம்‌ பெறலாம்‌. போலீஸ்‌, ராணுவத்தில்‌ பணிபுரிபவர்களுக்கு வேலையில்‌ எந்தவித தொய்வும்‌ இருக்காது.

வியாபாரிகளுக்கு கடந்தகாலத்தில்‌ எதிரிகளின்‌ இடையூறுகள்‌ உங்களை அவ்வப்போது பாடாய்‌படுத்தி இருக்கும்‌. இனி அந்த நிலையில்‌ இருந்து விடுபடுவீர்கள்‌. தடையின்றி முன்னேறலாம்‌. தீயோர்‌ சேர்க்கையால்‌ அவதிப்பட்டு வந்தர்கள்‌ அவர்கள்‌ பிடியில்‌ இருந்து விடுபடுவர்‌. இதனால்‌ வீண்‌ விரையம்‌ தடைபடும்‌. இரும்பு, அச்சு தொடர்பான தொழில்களும்‌, தரகு, பழைய பொருட்களை வாங்கி விற்பது போன்ற தொழில்களும்‌ சிறந்து விளங்கும்‌. தங்கம்‌, வெள்ளி, வைர நகைகள்‌ வியாபாரம்‌ செய்பவர்கள்‌ நல்ல வருமானத்தைப்‌ பெறுவர்‌. 2023 மார்ச்‌ மாதத்திற்கு பிறகு சனியின்‌3-ம்‌ இடத்துப்‌ பார்வையால்‌ உங்கள்‌ ஆற்றல்‌ மேம்படும்‌. முயற்சிகளில்‌ வெற்றியை தருவார்‌. பகைவர்களின்‌ சதியை முறியடிக்கும்‌ வல்லமையை பெற்று இருக்கிறீர்கள்‌.

கலைஞர்கள்‌ திருப்திகரமான பலனைக்‌ காணபர்‌. அரசியல்வாதிகள்‌ எதிர்பார்த்த பதவி கிடைக்கும்‌. உங்கள்செல்வாக்கு மக்கள்‌ மத்தியில்‌ அதிகரிக்கும்‌. பொதுநல சேவகர்கள்‌ நல்லபெயர்‌ எடுப்பர்‌.

மாணவர்கள்‌: கெட்ட மாணவர்களின்‌ சகவாசத்தினால்‌ அலைக்‌ கழிந்தவர்கள்‌ இனி நல்ல புத்தியோடு சிறப்பான நிலைக்குச்‌ செல்வர்‌. குரு சாதகமாக இருப்பதால்‌ ஆசிரியர்களின்‌ அறிவுரை கைகொடுக்கும்‌. போட்டிகளில்‌ வெற்றி பெற்று பரிசு கிடைக்க பெறலாம்‌. காலர்ஷிப்‌ போன்றவை கிடைக்கும்‌.

விவசாயிகள்‌ எள்‌, கரும்பு, உளுந்து மற்றும்‌ மானாவாரி பயிர்கள்‌ மூலம்‌ நல்ல. வருமானத்தைப்‌ பெறலாம்‌. நவீன இயந்திரங்கள்‌ வாங்க வாய்ப்பு உண்டு. ஆடு, கோழி, பசு, கால்நடை வகையில்‌ எதிர்பார்த்த பலனை பெறலாம்‌.புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம்‌ உண்டு பக்கத்து நிலகாரர்கள்‌ வகையில்‌ இருந்து வந்த தொல்லைகள்‌ மறையும்‌. வழக்கு விவகாரங்கள்‌ திருப்திகரமாக இருக்கும்‌.

பெண்கள்‌ முன்னேற்றம்‌ அடைவர்‌. குரு குதூகலத்தைக்‌ கொடுப்பார்‌. திருமணம்‌ போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார்‌. குழந்தை பாக்கியம்‌ கிடைக்கும்‌. புத்தாடை, அணிகலன்கள்‌ வாங்கி குவிப்பர்‌. பிறந்த வீட்டில்‌ இருந்து உதவிகள்‌ வரும்‌. அண்டை வீட்டார்கள்‌ உதவிகரமாக இருப்பர்‌. உங்கள்‌ முயற்சிகளில்‌ இருந்து வந்த தடைகள்‌ அனைத்தும்‌ படிபடியாக மறையும்‌. தம்பதியினர்‌ இடையே ஒற்றுமை மேம்படும்‌. வியாபாரம்‌ செய்யும்‌ பெண்கள்‌ நல்ல வருமானத்தை பெறுவர்‌. வேலைக்குச்‌ செல்லும்‌ பெண்களுக்கு கோரிக்கைகள்‌ நிறைவேறும்‌. மேல்‌ அதிகாரிகளின்‌ ஆதரவு கிடைக்கும்‌. பதவி உயர்வு தானாக வந்து சேரும்‌. கேதுவால்‌ பித்தம்‌, மயக்கம்‌ போன்ற சிற்சில உபாதைள்‌ வரலாம்‌.

பரிகாரம்‌:

பவுர்ணமி நாளில்‌ வீட்டில்‌ விளக்கு ஏற்றி  சித்திரபுத்திர நாயனாரை வணங்கவும்‌. கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள்‌. ஏழைகளுக்கு கொள்ளு தானம்‌ செய்யுங்கள்‌: மார்ச்‌ 21-ந்‌ தேதி வரை ஏழைகள்‌ படிக்க உதவுங்கள்‌. ஞானிகளை சந்திக்து காணிக்கை செலுத்தி அசி பெறலாம்‌.

மேலும் படிக்க... 

ராகு கேது பெயர்ச்சி 2022: மேஷம் ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

ராகு கேது பெயர்ச்சி 2022: ரிஷப ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

ராகு கேது பெயர்ச்சி 2022: மிதுனம் ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

ராகு கேது பெயர்ச்சி 2022: கடகம் ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

ராகு கேது பெயர்ச்சி 2022: சிம்மம் ராசிக்கான பலன்கள்,பரிகாரங்கள்

ராகு கேது பெயர்ச்சி 2022: கன்னி ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

ராகு கேது பெயர்ச்சி 2022: விருச்சிக ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

ராகு கேது பெயர்ச்சி 2022: துலாம்‌ ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

ராகு கேது பெயர்ச்சி 2022: தனுசு ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

ராகு கேது பெயர்ச்சி 2022: மகர ராசிக்கான பலன்கள்,பரிகாரங்கள்

ராகு கேது பெயர்ச்சி 2022: கும்ப ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

ராகு கேது பெயர்ச்சி 2022: மீனம் ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

First published:

Tags: Rahu Ketu Peyarchi