முகப்பு /செய்தி /ஆன்மிகம் / ராகு கேது பெயர்ச்சி 2022: சிம்மம் ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

ராகு கேது பெயர்ச்சி 2022: சிம்மம் ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

சிம்மம்

சிம்மம்

rahu ketu Peyarchi 2022 | ராகு கேது பெயர்ச்சியானது மார்ச் மாதம் 21 ஆம் தேதி, மதியம் 3:13 மணி அளவில் நடைபெறுகிறது. ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறை நடக்கக்கூடிய இந்த ராகு கேது பெயர்ச்சி எந்தெந்த ராசிகளுக்கு பலனை தரப்போகிறது, யாரெல்லாம் பரிகாரத்தை செய்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி ஜோதிடர் காழியூர் நாராயணன் கணித்து அளித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3-MIN READ
  • Last Updated :

சிம்ம ராசி அன்பர்களே! இந்த ராகு-கேது பெயர்ச்சி மிக சிறப்பாக அமையும்‌. கேது தற்போது 4- ம்‌ இடமான விருச்சிக ராசியில்‌ இருக்கிறார்‌. இந்த இடத்தில்‌ இருக்கும்‌ போது அவரால்‌ தீயோர்‌ சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம்‌. உடல்‌ நலம்‌ பாதிப்பு வரலாம்‌. வயிறு பிரச்சனை வரும்‌. ஆனால்‌ கேதுவின்‌ பின்னோக்கிய 11-ம்‌ இடத்துப்பார்வை உங்கள்‌ ராசிக்கு6-இடமான மகரத்தில்‌ விழுகிறது. இதனால்‌ இது சிறப்பான அம்சமாகும்‌. இதன்மூலம்‌ உங்களுக்கு அபார ஆற்றல்‌ பிறக்கும்‌. பொருளா - தாரவளம்‌ அதிகரிக்கும்‌. எந்த பிரச்சினையையும்‌ முறியடிக்கும்‌ வல்லமையை பெறலாம்‌. அவர்‌ மார்ச்‌ 21-ந்‌ தேதி அன்று 3-ம்‌ இடமான துலாம்‌ ராசிக்கு வருகிறார்‌. இது சிறப்பான இடம்‌. அங்கு அவர்‌ நற்பலனை தருவார்‌. அவர்‌ இறை அருளையும்‌, பொருள்‌ உதவியையும்‌ கொடுப்பார்‌. மேலும்‌ உடல்‌ உபாதைகளை குணமாக்குவார்‌.

ராகு தற்போது உங்கள்‌ ராசிக்கு 10-ம்‌ இடமான ரிஷபத்தில்‌ இருப்பது சிறப்பான இடம்‌ இல்லை. அவரால்‌ சிலர்‌ பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம்‌. பெண்கள்‌ வகையில்‌ இடையூறுகள்‌ வரலாம்‌. அவர்‌ மார்ச்‌ 21-ந்‌ தேதி அன்று 9-ம்‌ இடமான மேஷ ராசிக்கு மாறுகிறார்‌. இதுவும்‌ சிறப்பான இடம்‌ என்று சொல்ல முடியாது. ஆனால்‌ பலாபலன்கள்‌ மாறுபடும்‌.உங்கள்‌ திறமையில்‌ இருந்த பின்தங்கிய நிலை இனி இருக்காது. அவரால்‌ காரியத்தில்‌ சிற்சில தடைகளை உருவாக்கலாம்‌. எதிரிகளின்‌ இடையூறு தலைதூக்கும்‌. பிறருக்கு கட்டுப்பட்டு போகும்‌ நிலை உருவாகும்‌. அதற்காக கவலை-கொள்ள தேவை இல்லை. காரணம்‌ அவரின்‌ 4,7 மற்றும்‌ 11-ம்‌ இடத்துப்‌ பின்னோக்கிய பார்வைகள்‌ சிறப்பாக அமைந்து உள்ளது. அதன்மூலம்‌ எந்த பிரச்சினையையும்‌ முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம்‌.

சனிபகவான்‌ இந்த ஆண்டு முழுவதும்‌ நன்மை தருவார்‌. அவர்‌ உங்கள்‌ ராசிக்கு 6-ம்‌ இடமான மகரத்தில்‌ இருப்பது மிகச்சிறப்பான இடம்‌ ஆகும்‌. நல்ல பணப்புழக்கத்தையும்‌, காரியத்தில்‌ வெற்றியையும்‌ கொடுப்பார்‌. அபார ஆற்றல்‌ பிறக்கும்‌. எதிரிகளை இருக்கும்‌ இடம்‌ தெரியாமல்‌ ஆக்குவீர்‌.

மேலும் சனியின்‌10-ம்‌ இடத்துப்பார்வையும்‌ சிறப்பாக அமைந்து உள்ளது. அதன்மூலம்‌ அவர்‌ பொருளாதார வளத்தையும்‌,காரிய அனுகூலத்தையும்‌ தருவார்‌. தொழிலில்‌ நல்ல முன்னேற்றத்தை கொடுப்பார்‌. குரு பகவான்‌ உங்கள்‌ ராசிக்கு 7-ம்‌ இடத்தில்‌ இருக்கிறார்‌. இது சிறப்பான இடம்‌. மேலும்‌ குருவின்‌ 5-ம்‌ இடத்துப்‌ பார்வையும்‌ சிறப்பாக உள்ளது. எனவே குரு குடும்பத்தில்‌ மகிழ்ச்சியை அதிகரித்து சுபநிகழ்ச்சியை தருவார்‌. செல்வாக்கு மேம்படும்‌. பணப்புழக்கம்‌ அதிகரிக்கும்‌. தேவைகள்‌ பூர்த்தியாகும்‌.

உத்தியோகத்தில்‌ உயர்வை தருவார்‌. அவர்‌ ஏப்ரல்‌ 14-ந்‌ தேதி அன்று பெயர்ச்சி அடைந்து 8-ம்‌ இடமான மீன ராசிக்கு மாறுகிறார்‌. இது சிறப்பான இடம்‌ இல்லை. அப்போது குரு மனவேத -னையும்‌, நிலையற்ற தன்மையைம்‌ கொடுப்பார்‌. பொருளாதார சரிவை ஏற்படுத்துவார்‌. வீண்‌ விரோதத்தை உருவாக்குவார்‌. அதற்காக கவலைகொள்ள தேவை இல்லை காரணம்‌ அவரின்‌ 7-ம்‌ இடத்துப் பார்வை சிறப்பாக அமைந்து உள்ளது.

இனி விரிவான பலனை காணலாம்‌

கடவுளின்‌ கருணை உங்களுக்கு கிடைக்கும்‌. குடும்பத்தில்‌ கடந்த காலத்தைவிட மகிழ்ச்சி அதிகரிக்கும்‌. பெண்கள்‌ மிகவும்‌ ஆதரவுடன்‌ இருப்பர்‌. குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்‌. புதிய வீடு-மனை வாகனம்‌ வாங்கலாம்‌.2023 மார்ச்‌ மாதத்திற்கு பிறகு திருமணம்‌ போன்ற சுபநிகழ்ச்சிகளில்‌ கலந்து கொள்வீர்கள்‌ கணவன்‌-மனைவி இடையே அன்பு, பாசம்‌ இருக்கும்‌.போலீஸ்‌, ராணுவத்தில்‌ பணிபுரிபவர்கள்‌ உயர்ந்த நிலையை அடைவர்‌. புதிய பதவி கிடைக்கும்‌. தனியார்‌ துறையில்‌ பார்ப்பவர்களுக்கு அலைச்சல்‌ இருக்கும்‌. இருப்பினும்‌ குருவின்‌ 7-ம்‌ இடத்துப்‌ பார்வையால்‌ நன்மைகள்‌ கிடைக்க பெறலாம்‌. சக ஊழியர்கள்‌ ஆதரவுடன்‌ இருப்பர்‌.

2023 மார்ச்‌ மாதத்திற்கு பிறகு வேலைப்பளு குறையும்‌. விரும்பிய இடத்திற்கு மாற்றம்‌ கிடைக்கும்‌. ஏதோ காரணத்தால்‌ வேலையை இழந்தவர்கள்‌ மீண்டும்‌ வேலை கிடைக்கப் பெறுவர்‌.வேலையின்றி இருப்பவர்‌களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.

வியாபாரிகளுக்கு பொருளாதார வளம்‌ அதிகரிக்கும்‌. ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும்‌ பூஜை பொருட்கள்‌ வியாபாரம்‌ செய்பவர்கள்‌ அதிக லாபத்தை பெறுவர்‌. பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்‌ நல்ல முன்னேற்றம்‌ அடையும்‌. புதிய வியாபாரம்‌ அனுகூலத்தை கொடுக்கும்‌. இரும்பு, அச்சு தொடர்பான தொழில்களும்‌, தரகு, பழைய பொருட்களை வாங்கி விற்பது போன்ற தொழில்களும்‌ சிறந்து விளங்கும்‌.

தீயோர்‌ சேர்க்கையால்‌ பணத்தை விரயமாக்கியவர்கள்‌ அவர்கள்‌ பிடியில்‌ இருந்து விடுபடுவர்‌. மேலும்‌ குரு.ராகுவின்‌ பார்வையால்‌ பணவரவு கூடும்‌. உங்களுக்கு தொல்லை கொடுத்தவர்கள்‌. தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக இருப்பர்‌.

கலைஞர்கள்‌ புதிய ஒப்பந்தம்‌ பெற தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும்‌. புகழ்‌ கவுரவத்திற்கு பங்கம்‌ வராது. அரசியல்வாதிகள்‌, பொதுநல தொண்டர்கள்‌ சிறப்பான பலனைக்‌ காண்பர்‌. முக்கிய பொறுப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மாணவர்கள்‌: சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. குருவின்பார்வையால்‌ கல்வியில்‌ சிறப்பு கிடைக்கும்‌. மேல்படிப்பில்‌ விரும்பியபாடம்‌ கிடைக்கும்‌. ஆசிரியர்களின்‌ உதவி பயன்‌ உள்ளதாக அமையும்‌.

விவசாயம்‌: எள்‌, சோளம்‌, கேழ்வரகு, தக்காளி போன்ற பயிர்கள்‌ மூலம்‌ அதிக லாபத்தை காண்பர்‌. புதிய சொத்து வாங்கும்‌ எண்ணம்‌ கைகூடும்‌. வழக்கு விவகாரங்கள்‌ சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு. கோழி,ஆடு வளர்ப்பில்‌ நல்ல வருமானத்தைப்‌ பெறுவர்‌.

பெண்கள்‌ நகை ஆபரணங்கள வாஙகலாம. அககம பககததினாகளின சதொல்லையில இருந்து விடுபடுவர்‌. உற்சாகமான நிலையை அடைவீர்கள்‌. உங்களுக்கு அபார ஆற்றல்‌ பிறக்கும்‌. வேலைக்கு செல்லும்‌ பெண்களுக்கு சக ஊழியர்கள்‌ உதவிகரமாக இருப்பர்‌. பெண்‌ காவலர்கள்‌ சிறப்பான பலனை பெறுவர்‌. தங்கள்‌ கோரிக்கைகளை கேட்டு பெற்று கொள்ளவும்‌. பூ வியாபாரம்‌ செய்யும்‌ பெண்கள்‌ நல்ல வருமானத்தை பெறுவர்‌.

உடல்நலம்‌: சிறப்பாகஇருக்கும்‌.வாயு தொடர்பான உபாதை பூரண குணம்‌ அடையும்‌.

பரிகாரம்‌: காளியின்‌ அருள் கிடைக்க அர்ச்சனை செய்யுங்கள்‌. அதிகாலையில்‌ விளக்கு ஏற்றுங்கள்‌. ஏழைகளுக்கு ஆடைதானம் செய்யுங்கள்‌. குறிப்பாக நீவம்‌ மற்றும்‌ பல வண்ண நிற துணிகளை கொடுத்து வாருங்கள்‌. ஏப்ரல்‌ 13ஆம்  தேதிக்கு பிறகு வியாழக்கிழமை தட்சிணா மூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்‌ மாலை அணிவித்து வழிபாடு நடத்துங்கள்‌.

மேலும் படிக்க... 

ராகு கேது பெயர்ச்சி 2022: மேஷம் ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

ராகு கேது பெயர்ச்சி 2022: ரிஷப ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

ராகு கேது பெயர்ச்சி 2022: மிதுனம் ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

ராகு கேது பெயர்ச்சி 2022: கடகம் ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

ராகு கேது பெயர்ச்சி 2022: சிம்மம் ராசிக்கான பலன்கள்,பரிகாரங்கள்

ராகு கேது பெயர்ச்சி 2022: கன்னி ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

ராகு கேது பெயர்ச்சி 2022: விருச்சிக ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

ராகு கேது பெயர்ச்சி 2022: துலாம்‌ ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

ராகு கேது பெயர்ச்சி 2022: தனுசு ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

ராகு கேது பெயர்ச்சி 2022: மகர ராசிக்கான பலன்கள்,பரிகாரங்கள்

ராகு கேது பெயர்ச்சி 2022: கும்ப ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

ராகு கேது பெயர்ச்சி 2022: மீனம் ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

First published:

Tags: Rahu Ketu Peyarchi