Home /News /spiritual /

ராகு கேது பெயர்ச்சி 2022: ரிஷப ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

ராகு கேது பெயர்ச்சி 2022: ரிஷப ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

ரிஷபம்

ரிஷபம்

rahu ketu Peyarchi 2022 | ராகு கேது பெயர்ச்சியானது மார்ச் மாதம் 21 ஆம் தேதி, மதியம் 3:13 மணி அளவில் நடைபெறுகிறது. ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறை நடக்கக்கூடிய இந்த ராகு கேது பெயர்ச்சி எந்தெந்த ராசிகளுக்கு பலனை தரப்போகிறது, யாரெல்லாம் பரிகாரத்தை செய்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி ஜோதிடர் காழியூர் நாராயணன் கணித்து அளித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  ரிஷப ராசி அன்பர்களே! இப்போது இந்த ராகு-கேது பெயர்ச்சி மூலம்‌ நன்மை கிடைக்க உள்ளது. கேது தற்போது 7-ம்‌ இடத்தில்‌ இருப்பதால்‌ மனைவி வகையில்‌ பிரச்சினையையும்‌, அலைச்சலையும்‌ தரலாம்‌. வீண்மன வேதனை உருவாகலாம்‌. எதிரிகளால்‌ பிரச்சினை வரலாம்‌. மார்ச்‌ 21-ந்‌ தேதி அன்று அவர்‌ 6-ம்‌ இடமான துலாம்‌ ராசிக்கு வருவதன்‌ மூலம்‌ அந்த பின்தங்கிய நிலை அடியோடு மறையும்‌. பொன்னும்‌,பொருளும்‌ தாராளமாக கிடைக்கும்‌. காரிய அுனுகூலம்‌ ஏற்படும்‌. மேலும்‌ அவரது பின்னோக்கிய 4-ம்‌ இடத்துப்பார்வை சாதகமாக இருப்பதால்‌ பக்தி உயர்வு மேம்படும்‌. எடுத்த பொருளாதார வளம்‌ மேம்படும்‌. மேலும்‌ நகை- ஆபரணங்கள்‌ வாங்கலாம்‌. நினைத்த காரியம்‌ நிறைவேறும்‌.

  ராகு உங்கள்‌ ராசியில்‌ இருக்கிறார்‌. இது சிறப்பான இடம்‌ இல்லை. இங்கு அவரால்‌ வீண்‌ அலைச்சல்‌ ஏற்படலாம்‌. உங்கள்‌ முயற்சிக்கு பலன்‌ இல்லாமல்‌ போகலாம்‌. ஆனால்‌ ராகுவின்‌ பின்னோக்கிய 11-ம்‌ இடத்துப்பார்வை உங்கள்‌ ராசிக்கு 3-இடமான கடகத்தில்‌ விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும்‌. இதன்மூலம்‌ அவர்‌ காரிய அனுகூலத்தையும்‌, பொருளாதார வளத்தையும்‌, குடும்பத்தில்‌ மகிழ்ச்சியையும்‌, தொழில்‌ விருத்தியையும்‌ தருவார்‌. அவர்‌ மார்ச்‌ 21-ந்‌ தேதி அன்று உங்கள்‌ ராசிக்கு 12-ம்‌ இடமான மேஷத்திற்கு செல்கிறார்‌. இதுவும்‌ சுமாரான நிலைதான்‌.

  இங்கு அவரால்‌ நற்பலனை தரஇயலாது. பொருள்‌ விரயத்தையும்‌, தூரதேச பயணத்தையும்‌ கொடுப்பார்‌. ஆனால்‌ அவரது பின்னோக்கிய 7-ம்‌ இடத்துப்‌பார்வை உங்கள்‌ ராசிக்கு 6-இடமான துலாம்‌ ராசியில்‌ விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும்‌. இதன்‌ மூலம்‌ உங்கள்‌ ஆற்றல்‌ மேம்படும்‌. முயற்சிகளில்‌ வெற்றியை தருவார்‌. பகைவர்களின்‌ சதியை முறியடிக்கும்‌ வல்லமையை பெறுவீர்கள்‌.

  இந்த ஆண்டின்‌ தொடக்கத்தில்‌ குருபகவான்‌ 10-ம்‌ இடமான கும்ப ராசியில்‌ இருக்கிறார்‌. அவரால்‌ நல்ல பலன்களை அள்ளிதர முடியாது. பொதுவாக 10-ம்‌ இடத்தில்‌ இருக்கும்‌ குருபகவான்‌ பொருள்‌ நஷ்டத்தையும்‌, மனசஞ்சலத்தையும்‌ ஏற்படுத்துவார்‌. குருசாதகமற்ற நிலையில்‌ இருந்தாலும்‌ அவரது 5- ம்‌ இடத்துப்பார்வை மிக சிறப்பாக இருக்கிறது. அதன்‌ மூலம்‌ எந்த இடையூறையும்‌ உடைத்தெறிந்து முன்னேற்றம்‌ காணலாம்‌. அவர்‌ ஏப்ரல்‌ 14-ந்‌ தேதி அன்று பெயர்ச்சி அடைந்து 11-ம்‌ இடமான மீனராசிக்கு மாறுகிறார்‌. இது சிறப்பான இடம்‌. அப்போது அவரால்‌ பொருளாதார வளம்‌ மேம்படும்‌.

  உத்தியோகம்‌

  சிறப்படையும்‌. மேலும்‌ அவரின்‌? மற்றும்‌ 9-ம்‌ இடத்து பார்வைகள்‌ மூலமும்‌ நற்பலனை தருவார்‌. சனிபகவான தற்போது 9-ம்‌ இடத்தில்‌ இருக்கிறா. இது சிறப்பான இடம்‌ அல்ல. அவரால உங்கள்‌ முயற்சிகளில்‌ தடைகள்‌ வரலாம்‌, எதிரிகளால்‌ பிரச்சினை வரலாம்‌. பிறருக்கு கட்டுப்பட்டு போகும்‌ நிலை உருவாகும்‌. சனிபகவான்‌ சாதகமற்ற இடத்தில்‌ இருந்தாலும்‌ அவரது பார்வையால்‌ நன்மை கிடைக்கும்‌.

  மேலும்‌ மே 25-ந்‌ தேதி முதல்‌ அக்டோபர்‌ 9-ந்‌ தேதி வரை வக்கிரம்‌ அடைகிறார்‌. அவர்‌ வகிக்ரம்‌ அடைந்தாலும்‌ மகர ராசியிலேதான்‌ இருக்கிறார்‌. எந்த கிரகமும்‌ வக்கிரத்தில்‌ சிக்கும்‌ போது அவரால்‌ சிறப்பாக செயல்பட முடியாது. அந்த வகையில்‌ சாதகமற்ற நிலையில்‌ இருக்கும்‌ சனிபகவான்‌ வக்கிரம்‌ அடைந்தால்‌ உங்களுக்கு கெடுபலன்கள்‌ நடக்காது அல்லவா? இன்னும்‌ சொல்லப்போனால்‌ அவரால்‌ நன்மையே கிடைக்கும்‌.

  இனி விரிவான பலனை காணலாம்‌

  குடும்பத்தில்‌ இருந்து வந்த பின்னடைவுகள்‌ மறையும்‌. தம்பதியினர்‌ இடையே ஒற்றுமை மேம்படும்‌.புத்தாடை- அணிகலன்கள்‌ வாங்கலாம்‌. அக்கம்‌ பக்கத்தினர்‌ அனுசரணையுடன்‌ இருப்பர்‌. காரிய அனுகூலம்‌. எளிதாகும்‌. புதிய வீடு-மனை வாகனம்‌ வாங்க அனுகூலம்‌ உண்டு.குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்குசென்று வருவீர்கள்‌.

  உத்தியோகத்தில்‌ முன்னேற்றம்‌ இருக்கும்‌. மேல்‌ அதிகாரிகளின்‌ அனுசரணை கிடைக்கும்‌. சிலருக்கு இடமாற்றம்‌ வரலாம்‌. வேலை இன்றி இருப்பவர்கள்‌ வேலை கிடைக்கப்‌ பெறலாம்‌. பாதுகாப்பு தொடர்பான வேலையில்‌ இருப்பவர்கள்‌ சிறப்பான முன்னேற்றத்தைக்‌ காணலாம்‌. அவர்கள்‌ தங்கள்‌ கோரிக்கைகளை கேட்டு பெற்று கொள்ளவும்‌. எழுத்தாளர்கள்‌, பத்திரிகையாளர்கள்‌, ஆசிரியர்‌ பணியில்‌ இருப்பவர்களுக்கு இந்த காலம்‌ உன்னதமாக இருக்கும்‌.

  வியாபாரம்‌ வளர்முகமாக இருக்கும்‌. பணப்புழக்கம்‌ மிகஅதிகமாக இருக்கும்‌. உங்களிடம்‌ வேலை பார்ப்பவர்கள்‌ நன்றி கடனுடன்‌ இருப்பர்‌. வாடிக்கையாளர்‌ மத்தியில்‌ நற்பெயர்‌ கிடைக்கும்‌. தங்கம்‌, வெள்ளி, வைர நகைகள்‌ வியாபாரம்‌ செய்பவர்கள்‌ அதிக லாபத்தைப்‌ பெறுவர்‌. உங்கள்‌ வளர்ச்சிக்கு

  ஒரு பெண்‌ பின்னணியாக இருப்பார்‌. வாடிக்கையாளர்‌ மத்தியில்‌ நற்பெயர்‌ கிடைக்கும்‌. பங்கு வர்த்தகம்‌ நல்ல லாபத்தைத்‌ தரும்‌. கோவில்‌ மற்றும்‌ புண்ணிய காரியங்களுக்கான தொழில்‌ சிறந்து விளங்கும்‌. கலைஞர்கள்‌ சிறப்படைவர்‌. புதிய ஒப்பந்தங்கள்‌ கிடைக்கும்‌. அரசியல்வாதிகள்‌, சமூகநல சேவகர்கள்‌சிறப்பு பெறுவர்‌. முக்கிய பொறுப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

  மாணவர்களுக்கு குரு சாதகமாக இருப்பதால்‌ அனுகூலமான காற்று வீசும்‌. சிறப்பான நிலையை காணலாம்‌. நல்ல மதிப்பெண்‌ கிடைக்கும்‌. மேல்‌ படிப்பில்‌ விரும்பிய பாடம்‌ கிடைக்கும்‌. விளையாட்டு போட்டிகளில்‌ வெற்றி பெறலாம்‌. காலர்ஷிப்‌ போன்றவை கிடைக்கும்‌. விவசாயிகளுக்கு பாசிபயறு, நெல்‌, மஞ்சள்‌, கொண்டைக்கடலை,கொள்ளு,துவரை, பழவகைகள்‌

  நல்ல வருவாயைக்‌ கொடுக்கும்‌. கால்நடை செல்வம்‌ பெருகும்‌.கோழி,ஆடு வளர்ப்பில்நல்ல வருமானத்தை பெறுவர்‌. பால்பண்ணை மூலமும்‌ நல்ல வருவாய்‌ கிடைக்கும்‌.புதிய்சொத்து வாங்க அனுகூலம்‌ உண்டு. பக்கத்து நிலகாரர்கள்‌ வகையில்‌ இருந்து வந்த தொல்லைகள்‌ மறையும்‌. அவர்கள்‌ உங்களுக்கு உதவிகரமாக இருப்பர்‌. வழக்கு, விவகாரங்கள்‌ சிறப்பாக இருக்கும்‌.

  பெண்களுக்கு தெய்வ அனுகூலம்‌ கிடைக்கும்‌. உற்சாகம்‌ பிறக்கும்‌. நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம்‌. சுபநிகழ்ச்சி- களில்‌ கலந்துகொள்வர்‌. உறவினர்கள்‌ உதவிகரமாக இருப்பர்‌.உங்களை புரிந்து கொள்ளாமல்‌ இருந்தவர்‌ கள்‌ உங்கள்‌ மேன்மையை அறிந்து சரணடையும்‌ நிலை வரலாம்‌. தடைபட்டு வந்த திருமணம்‌ நடக்க வாய்ப்பு உண்டு. புத்தாடை, அணிகலன்கள்‌ வாங்கி குவிப்பர்‌. பிறந்த வீட்டில்‌ இருந்து உதவிகள்‌ வரும்‌. அண்டை வீட்டார்கள்‌ உதவிகரமாக இருப்பர்‌. பெண்‌ காவலர்கள்‌ சிறப்பான பலனைப்‌ பெறுவர்‌. வேலையில்‌ நிம்மதியும்‌, திருப்தியும்‌ கிடைக்கும்‌.

  சுய தொழில்‌ செய்து வரும்‌ பெண்களுக்கு லாபம்‌ சிறப்பாக இருக்கும்‌. பூ வியாபாரம்‌ செய்யும்‌ பெண்கள்‌ நல்ல வருமானத்தை பெறுவர்‌. உஷ்ணம்‌,தோல்‌,தொடர்பான நோய்‌ முதலியன பூரண குணம்‌ அடையும்‌.

  பரிகாரம்‌

  திருநாகேசுவரம்‌-திருபெரும்பன்னம்‌ அல்லது காளகஸ்தி அகிய தலங்களுக்குச்‌ சென்று வரலாம்‌. தாக தேவதையை வணங்கி வாருங்கள்‌. சனிபகவானுக்கு நல்லெண்ணை தீபம்‌ ஏற்றுங்கள்‌. ஏப்ரல்‌ 14-ந்‌ தேதி வரை குரு பகவானுக்கு முல்லைமலர்‌ மாலை அணிவித்து வணங்குங்கள்‌.

  மேலும் படிக்க... 

  ராகு கேது பெயர்ச்சி 2022: மேஷம் ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

  ராகு கேது பெயர்ச்சி 2022: ரிஷப ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

  ராகு கேது பெயர்ச்சி 2022: மிதுனம் ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

  ராகு கேது பெயர்ச்சி 2022: கடகம் ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

  ராகு கேது பெயர்ச்சி 2022: சிம்மம் ராசிக்கான பலன்கள்,பரிகாரங்கள்

  ராகு கேது பெயர்ச்சி 2022: கன்னி ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

  ராகு கேது பெயர்ச்சி 2022: விருச்சிக ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

  ராகு கேது பெயர்ச்சி 2022: துலாம்‌ ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

  ராகு கேது பெயர்ச்சி 2022: தனுசு ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

  ராகு கேது பெயர்ச்சி 2022: மகர ராசிக்கான பலன்கள்,பரிகாரங்கள்

  ராகு கேது பெயர்ச்சி 2022: கும்ப ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

  ராகு கேது பெயர்ச்சி 2022: மீனம் ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்
  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Rahu Ketu Peyarchi

  அடுத்த செய்தி