ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

ராகு, கேது பெயர்ச்சி 2022: இனி இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல யோகம்தான்!

ராகு, கேது பெயர்ச்சி 2022: இனி இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல யோகம்தான்!

ராகு, கேது பெயர்ச்சி

ராகு, கேது பெயர்ச்சி

rahu ketu peyarchi 2022 | பஞ்சாங்கத்தின்படி பிலவ வருடம், பங்குனி மாத 29ம் தேதி (12.04.2022) மதியம் 1.38 மணியளவில் ராகு மேஷ ராசிக்கும், கேது துலாம் ராசிக்கும் பெயர்ச்சியாகின்றனர். வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 21.03.2022, பங்குனி 7ம் தேதி திங்கள் கிழமை மதியம் 3.02 மணிக்கு பெயர்ச்சியாகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பங்குனி மாதம் 29ஆம் தேதி ஏப்ரல் 12ஆம் தேதி ராகு பகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். அதே போல கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த இடப்பெயர்ச்சியால் தனுசு, மகரம், கும்பம், மீன ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம். ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். பிறந்த ஜாதகத்தில் ராகு- கேது மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய வீடுகளில் இருந்தால் வலுவான யோகம் உண்டு... இவை தவிர நல்ல யோகம் பெற போகும் ராசியினர் யார் யார் தெரியுமா?

காலனான ராகுவுக்கும், சர்ப்பமான கேதுவுக்கும் இடையில் கிரகங்கள் இருப்பது கால சர்ப்ப தோஷம் எனப்படும். கால சர்ப்ப தோஷம் என்பது ராகு, கேது ஆகிய இருபாம்புக்களுக்கிடையே மற்ற ஏழு கிரகங்களும் அடைபட்டு இருப்பதாகும். இது ஜாதகத்தில் உள்ள நல்ல யோகங்களை நசுக்கி கெடு பலன்களை தரும் என்று ஐதீகம். இது தவிர சில ராசியினருக்கு நன்மையும் பயக்கும் என்பது குறிப்பிடத்தக்கது... அவைகளான,

தனுசு

இது வரை 6ஆம் வீட்டில் இருந்த ராகு 5ஆம் இடத்திற்கும் 12ஆம் வீட்டில் இருந்த கேது 11ஆம் இடத்திற்கும் வருகிறார்கள். எற்கனவே ராகு இருந்த இடம் நல்ல இடமாக இருந்தாலும் 12ல் இருந்த கேது நோய் நொடிகளுக்கு வைத்திய செலவுகளை செய்ய வைத்து கடன் சுமையை எற்படுத்தினார். ஆனால் இனி ராகு கேது பெயர்ச்சி நிம்மதியை தரும். 18 வருஷத்துக்கு பிறகு 5ம் இடத்திற்கு ராகு வருவதால் முன்னோர் வகையில் உள்ள தோஷம் நீங்கி சுகம் பெறலாம். கேது லாப ஸ்தானத்தில் வருவதால் தொட்டது துலங்கும். தேவையற்ற செலவுகள் குறையும் தடைப்பட்ட காரியத்தை செவ்வன செய்து முடிப்பீர்கள்.ராகு கேது பெயர்ச்சி நிலையான தொழில் யோகத்தையும் வலிமையான சம்பாதித்யத்தையும் கொடுக்கும்.

மேலும் படிக்க...  ராகு, கேது பெயர்ச்சி 2022 எப்போது? தேதி, நேரம் குறித்த தகவல்கள்...

கும்பம்:

சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட உங்களுக்கு இது வரை 4ஆம் இடத்தில் இருந்த ராகு 3ஆம் இடத்திலும் 10 இடத்தில் இருந்த கேது 9ம் இடத்திற்கும் வருகிறார்கள். 3ஆம் இடம் என்பது இளைய சகோதரம், தைரியம், வீரம் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானங்களில் ராகு வருகிறார். ராகு இப்பொழுது யோகத்தை வாரி வழங்க போகிறார். இனி தைரியத்துடன் புது தெம்புடன் செழிப்பான வாழ்க்கை அமையும். புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும்.உங்களுடைய நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். தொழில், உத்யோகத்தில் தடைகள் நீங்கும். தந்தையுடன் கருத்துவேறுபாடுகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் கிடைக்கவேண்டிய உதவிகள் கிடைக்காது. உற்றார் உறவினர் பகை மறந்து வீடு தேடி வருவார்கள்.

மீனம்:

திடீர் பணவருமானம் வரும் திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். அதே நேரத்தில் சேமிக்க முடியவில்லையே என்ற வருத்தம் ஏற்படும் அளவிற்கு செலவுகளும் வரும். கண் தொடர்பான பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும். வேலை செய்யும் இடத்தில் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். உங்க கோபம், உணர்வுகளை கட்டுப்படுத்துவது அவசியம். கணவன் அல்லது மனைவி மூலம் வரும் பண வரவுகள் தடைப்படும். மூல வியாதி, கண் நோய், பல் வலி போன்ற வியாதிகள் எட்டிப்பார்க்கும். தந்தையுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கும். மனோ தைரியும் உண்டாகும். பயணத்தடைகள் நீங்கும். தடைப்பட்ட தெய்வ காரியங்கள் நிறைவேறும். ராகு காலத்தில் ராகு கேதுவிற்கு அர்ச்சனை செய்யுங்கள் நல்லதே நடக்கும்.

மேலும் படிக்க... ராகு கேது பெயர்ச்சி 2022 : 12 ராசியினருக்கான பலன்கள் என்னென்ன?

ராகு, கேது பெயர்ச்சி நேரம்:

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி பிலவ வருடம், பங்குனி மாத 29ம் தேதி 12.04.2022 மதியம் 1.38 மணியளவில் ராகு மேஷ ராசிக்கும், கேது துலாம் ராசிக்கும் பெயர்ச்சியாகின்றனர். வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 21.03.2022, பங்குனி 7ம் தேதி திங்கள் கிழமை மதியம் 3.02 மணிக்கு பெயர்ச்சியாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது...

First published:

Tags: Rahu Ketu Peyarchi