மேஷ ராசியினரே நிழல்கிரகமான ராகு 2-ம் இடமான ரிஷபத்தில் உள்ளார். இது சிறப்பான இடம் இல்லை. இங்கு அவர் குடும்பத்தில் சிற்சில பிரச்சினையையும், தூரதேச பயணத்தையும் ஏற்படுத்துவார். பொருட்களை களவு கொடுக்க நேரிடும். பொருளாதார இழப்பு ஏற்படும். அதற்காக கவலைகொள்ள தேவை இல்லை. காரணம் ராகுவின் பின்னோக்கிய 4-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 11-ம் இடமான கும்பத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். ராகு மார்ச் 21-ந் தேதி அன்று உங்கள் ராசிக்கு மாறுகிறார். இதுவும் சுமாரான நிலைதான். இங்கு அவரால் வீண் அலைச்சல் ஏற்படலாம். உங்கள் முயற்சிக்கு பலன் இல்லாமல் போகலாம். ஆனால் அவரது பின்னோக்கிய 11-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 3-இடமான மிதுனத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும்.
இதன்மூலம் அவர் காரிய அனுகூலத்தையும், பொருளாதார வளத்தையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும், தொழில் விருத்தியையும் தருவார். கேது 8-ம் இடமான விருச்சிக ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம் இல்லை. இங்கு கேதுவால் விபத்து பயம், செயல்முடக்கம், உடல் நலக்குறைவு முதலியன வரலாம். உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் வரலாம். அவர் மார்ச் 21-ந் தேதி அன்று 7-ம் இடத்திற்கு மாறுகிறார். இதுவும் உகந்த இடம் என்று சொல்ல முடியாது. ஆனாலும் எட்டாமிடத்தில் இருந்ததுபோல் கெடு பலன்கள் நடக்காது. 7-ல் கேது இருக்கும் போது மனைவி வகையில் பிரச்சினையை -யும், அலைச்சலையும் தரலாம். வீண்மனவேதனை உருவாகலாம். எதிரிகளால் பிரச்சினை வரலாம்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் 11-ம் இடமான கும்ப ராசியில் இருக்கிறார். இது மிகவும் சிறப்பான இடம் ஆகும். அவர் பலவிதத்தில் வெற்றியை தந்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணச்செய்வார். மேலும் அவரின் 7 மற்றும் 9-ம் இடத்துப் பார்வைகள் சிறப்பாக. அமைந்துள்ளது. அதன் மூலமும் பல்வேறு நன்மைகள் பெறலாம். ஆனால் அவர் ஏப்ரல் 14-ந் தேதி அன்று பெயர்ச்சி அடைந்து 12-ம் இடமானமீன ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் இல்லை. அவரால் பொருள் நாசம் ஏற்படும். பல்வேறு தொல்லைகள் உருவாகும். மனதில் நீங்காத வருத்தம் உருவாகும். வீண் அலைச்சல் ஏற்படும். இதை கண்டு நீங்கள் அச்சம் கொள்ள வேண்டாம். காரணம் ஜுன்20-ந் தேதி முதல் நவம்பர் 16-ந்தேதி வரை வக்கிரம் அடைகிறார். அவர் வகிக்ரம் அடைந்தாலும் மீன ராசியிலேதான் இருக்கிறார். எந்த கிரகமும் வக்கிரத்தில் சிக்கும் போது அவரால் சிறப்பாக செயல்பட முடியாது.
சனிபகவான் 10-ம் இடத்தில் உள்ளார். இதனால் தொழிலில் சிறுசிறு பின்னடைவுகள் ஏற்படலாம். உடல் உபாதைகள் லேசாக நோக செய்யலாம். இதை கண்டு நீங்கள் அச்சம் கொள்ள வேண்டாம். காரணம் மே 25-ந் தேதி முதல் அக்டோபர் 9-ந் தேதி வரை வக்கிரம் அடைகிறார். அவர் வகிக்ரம் அடைந்தாலும் மகர ராசியிலேதான் இருக்கிறார். எந்த கிரகமும் வக்கிரத்தில் சிக்கும் போது அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. அந்த வகையில் சாதகமற்ற நிலையில் இருக்கும் சனிபகவான் வக்கிரம் அடைந்தால் உங்களுக்கு கெடுபலன்கள் நடக்காது அல்லவா ? இன்னும் சொல்லப்போனால் அவரால் நன்மையேகிடைக்கும்.
இனி விரிவான பலனை காணலாம்
செலவு அதிகரிக்கும். கணவன்-மனைவி ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். உறவினர் வகையிலும் அவ்வளவு அனுகூலம் காணப்படவில்லை. உறவினர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். 2023மார்ச் மாதத்திற்கு பிறகு குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள். அது சிறப்பாக முடியும். பொன்,பொருள் கிடைக்கும். சகோதரிகள் மிக உறுதுணையாக இருப்பர். செல்வாக்கு அதிகரிக்கும். புதிய வீடு-மனை, வாகனம் வாங்க அனுகூலம் உண்டு.
உத்தியோகம்: இடமாற்றம் வர வாய்ப்பு உண்டு. வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. உங்கள் பொறுப்புகளை தட்டிகழிக்காமல் செய்யவும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். அதிகமாக போராடியே கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். வக்கீல்களுக்கு 2023 மார்ச் மாதத்திற்கு பிறகு வழக்கு, விவகாரங்கள் சிறப்பாக இருக்கும்.
வியாபாரம்: பொருள் விரையம் ஏற்படும். வாடிககையாளரை அதிக முயாசசி எடுத்து தக்கவைக்க வேண்டியது இருக்கும். சிலர் ஊர்விட்டு செல்லும் நிலை உருவாகும். இருப்பிடமாற்றம் ஏற்படலாம். குடும்ப பிரச்சினையை தொழிலில் காட்டாமல் இருந்தால் நல்ல முன்னேற்றம் அடையலாம். இருப்பினும் இந்தகால கட்டத்தில் ராகுவின் பின்னோக்கிய 11-ம் இடத்துப் பார்வை உங்கள் ராசிக்கு 3-இடத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். 2023மார்ச் மாதத்திற்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் சென்றவர்கள் வீடு திரும்புவர். எதிரிகளால் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். பொருளாதார வளம் கூடும்.
கலைஞர்கள்: புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்களுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்க வாய்ப்பு இல்லை. சிலர் மனஉழைச்சலுடன் காணப்படுவர்.
மாணவர்கள்: ஆசிரியர்கள் ஆலோனைபடி நடந்தால் முன்னேற்றம் கிடைக்கும்.
விவசாயிகள்: உழைப்புக்கேற்ற வருமானத்தை பெறலாம். கால்நடை வகையில் எதிர்பார்த்த பலனை பெற இயலாது. வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம். 2023 மார்ச் மாதத்திற்கு பிறகு வழக்கு, விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். சுய தொழில் செய்து வ ரும் பெண்களுக்கு லாபத்தில் குறை இருக்காது. வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும்.
2023 மார்ச் மாதத்திற்கு பிறகு உற்சாகம் பிறக்கும். மகிழ்ச்சியுடன் காணப்படுவர். பணப் புழக்கம் அதிகரிக்கும். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பண வரவு இருக்கும்.
உடல்நலம்: ஒருவித பயம் ஆட்கொள்ளும். வயிறு தொடர்பான உபாதை வரலாம்.
பரிகாரம்: வெள்ளி செவ்வாய் கிழமைகளில் பத்திரகாளி அம்மனை வழிபடுங்கள். மேலும் விநாயகர் மற்றும் அஞ்சநேயர் வழிபாடு உறுதுணையாக இருக்கும்.
மேலும் படிக்க...
ராகு கேது பெயர்ச்சி 2022: மேஷம் ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்
ராகு கேது பெயர்ச்சி 2022: ரிஷப ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்
ராகு கேது பெயர்ச்சி 2022: மிதுனம் ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்
ராகு கேது பெயர்ச்சி 2022: கடகம் ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்
ராகு கேது பெயர்ச்சி 2022: சிம்மம் ராசிக்கான பலன்கள்,பரிகாரங்கள்
ராகு கேது பெயர்ச்சி 2022: கன்னி ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்
ராகு கேது பெயர்ச்சி 2022: விருச்சிக ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்
ராகு கேது பெயர்ச்சி 2022: துலாம் ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்
ராகு கேது பெயர்ச்சி 2022: தனுசு ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்
ராகு கேது பெயர்ச்சி 2022: மகர ராசிக்கான பலன்கள்,பரிகாரங்கள்
ராகு கேது பெயர்ச்சி 2022: கும்ப ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்
ராகு கேது பெயர்ச்சி 2022: மீனம் ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rahu Ketu Peyarchi