ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

ராகு கேது பெயர்ச்சி 2022: மீனம் ராசியினருக்கு மனோ தைரியும் உண்டாகும்

ராகு கேது பெயர்ச்சி 2022: மீனம் ராசியினருக்கு மனோ தைரியும் உண்டாகும்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

    ராகுவும் கேதுவும் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குச் செல்லும் காலகட்டத்தைதான் நாம் ராகு - கேது பெயர்ச்சி என்கிறோம். 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ராகு பகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கும் கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகிறார். இதனால் மீனம் ராசியினருக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்...

    மீனம்: திடீர் பணவருமானம் வரும் திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். அதே நேரத்தில் சேமிக்க முடியவில்லையே என்ற வருத்தம் ஏற்படும் அளவிற்கு செலவுகளும் வரும். கண் தொடர்பான பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும்.வேலை செய்யும் இடத்தில் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். உங்க கோபம், உணர்வுகளை கட்டுப்படுத்துவது அவசியம். கணவன் அல்லது மனைவி மூலம் வரும் பண வரவுகள் தடைப்படும். மூல வியாதி, கண் நோய், பல் வலி போன்ற வியாதிகள் எட்டிப்பார்க்கும். தந்தையுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கும். மனோ தைரியும் உண்டாகும். பயணத்தடைகள் நீங்கும். தடைப்பட்ட தெய்வ காரியங்கள் நிறைவேறும். ராகு காலத்தில் ராகு கேதுவிற்கு அர்ச்சனை செய்யுங்கள் நல்லதே நடக்கும்.

    ராகு, கேது பெயர்ச்சி நேரம்:

    திருக்கணித பஞ்சாங்கத்தின்படி பிலவ வருடம், பங்குனி மாத 29ம் தேதி 12.04.2022 மதியம் 1.38 மணியளவில் ராகு மேஷ ராசிக்கும், கேது துலாம் ராசிக்கும் பெயர்ச்சியாகின்றனர். வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 21.03.2022, பங்குனி 7ம் தேதி திங்கள் கிழமை மதியம் 3.02 மணிக்கு பெயர்ச்சியாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது...

    மேலும் படிக்க... 

    Zodiac Signs: ராகுவின் இடமாற்றதால் இந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்தான்...

    Astrology: ராகுவின் பெயர்ச்சியால் இந்த 4 ராசியினருக்கு பணவரவு அதிகமாகும்...

    கால சர்ப்ப தோஷத்தினால் ஏற்படும் பாதிப்புகளும் பரிகாரங்களும்..

    ராகு பலன்: மேஷ ராசிக்கு வரும் ராகுவால் இந்த 4 ராசியினருக்கு எல்லா வகையிலும் லாபம்தான்...

    கேது பலன் : துலாம் ராசிக்கு வரும் கேதுவால் இந்த ராசியினருக்கு பிரச்சனைதான்...

    ராகு, கேது பெயர்ச்சி 2022: இனி இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல யோகம்தான்!

    ராகு கேது பெயர்ச்சி 2022 : 12 ராசியினருக்கான பலன்கள் என்னென்ன?

    ராகு, கேது பெயர்ச்சி 2022 எப்போது? தேதி, நேரம் குறித்த தகவல்கள்...

    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Rahu Ketu Peyarchi