ராகுவும் கேதுவும் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குச் செல்லும் காலகட்டத்தைதான் நாம் ராகு - கேது பெயர்ச்சி என்கிறோம். 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ராகு பகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கும் கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகிறார். இதனால் மகரம் ராசியினருக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்...
மகரம்: ராகு,கேது. இனி சுக ஸ்தானமான நான்காம் இடத்திற்கும்,10ஆம் இடத்திற்கும் மாறுகிறார்கள். இதுவரை திணறடித்த பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். 4ஆம் பாவம் தாயார்,சுகம்,வாகனம் கல்வி,நிலபுலன்கள் ஆகியவற்றை குறிக்கும் இந்த 4ஆம் பாவத்திற்க்கு ராகு வருகிறார். இது வரை தடைப்பட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பதற்கு உதவுவார்கள். தாயார் வழியில் சில தேவைற்ற செலவுகள் உண்டாகலாம்.பூமி வீடு வாகனம் வாங்கும் யோகத்தை கொடுப்பார். மாமியாருடன் கருத்து வேறுபாடு உண்டாகும். நண்பர்களிடம் நிலவிய கருத்து வேறுபாடு நீங்கும். உங்கள் விருப்பங்கள் இனி தடையின்றி நிறவேறும். வீட்டுக்கு பழுது நீக்கி செப்பனிடும் செலவுகள் உண்டு. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வயிறு சம்பந்தமான நோய்கள் விலகும்.
ராகு, கேது பெயர்ச்சி நேரம்:
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி பிலவ வருடம், பங்குனி மாத 29ம் தேதி 12.04.2022 மதியம் 1.38 மணியளவில் ராகு மேஷ ராசிக்கும், கேது துலாம் ராசிக்கும் பெயர்ச்சியாகின்றனர். வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 21.03.2022, பங்குனி 7ம் தேதி திங்கள் கிழமை மதியம் 3.02 மணிக்கு பெயர்ச்சியாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது...
மேலும் படிக்க...
Zodiac Signs: ராகுவின் இடமாற்றதால் இந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்தான்...
Astrology: ராகுவின் பெயர்ச்சியால் இந்த 4 ராசியினருக்கு பணவரவு அதிகமாகும்...
கால சர்ப்ப தோஷத்தினால் ஏற்படும் பாதிப்புகளும் பரிகாரங்களும்..
ராகு பலன்: மேஷ ராசிக்கு வரும் ராகுவால் இந்த 4 ராசியினருக்கு எல்லா வகையிலும் லாபம்தான்...
கேது பலன் : துலாம் ராசிக்கு வரும் கேதுவால் இந்த ராசியினருக்கு பிரச்சனைதான்...
ராகு, கேது பெயர்ச்சி 2022: இனி இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல யோகம்தான்!
ராகு கேது பெயர்ச்சி 2022 : 12 ராசியினருக்கான பலன்கள் என்னென்ன?
ராகு, கேது பெயர்ச்சி 2022 எப்போது? தேதி, நேரம் குறித்த தகவல்கள்...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rahu Ketu Peyarchi