Home /News /spiritual /

ராகு கேது பெயர்ச்சி 2022: மகர ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

ராகு கேது பெயர்ச்சி 2022: மகர ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

மகரம்

மகரம்

rahu ketu Peyarchi 2022 | ராகு கேது பெயர்ச்சியானது மார்ச் மாதம் 21 ஆம் தேதி, மதியம் 3:13 மணி அளவில் நடைபெறுகிறது. ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறை நடக்கக்கூடிய இந்த ராகு கேது பெயர்ச்சி எந்தெந்த ராசிகளுக்கு பலனை தரப்போகிறது, யாரெல்லாம் பரிகாரத்தை செய்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி ஜோதிடர் காழியூர் நாராயணன் கணித்து அளித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  மகர ராசி அன்பர்களே! ராகு உங்கள்‌ ராசிக்கு 5-ம்‌ இடமான ரிஷபத்தில்‌ இருக்கிறார்‌. இது சிறப்பான இடம்‌ அல்ல. அவர்‌ இன்னல்களையும்‌, இடையூறுகளையும்‌ தரலாம்‌. குழப்பத்தை உருவாக்கலாம்‌. மனதில்‌ ஏனோ இனம்புரியாத வேதனை ஆட்டிப்படைக்கலாம்‌. ஆனால்‌ அவரது பின்னோக்கிய 7-ம்‌ இடத்துப்‌ பார்வை உங்கள்‌ ராசிக்கு 11-ம்‌ இடமான விருச்சிகத்தில்‌ விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும்‌. மார்ச்‌ 21-ந்‌ தேதி அன்று ராகு 4-ம்‌ இடமான மேஷத்திற்கு வருகிறார்‌. இந்த இடமும்‌ ராகுவுக்கு சாதகமானது அல்ல என்பதால்‌ அலைச்சலையும்‌, சிற்சில பிரச்சனையையும்‌ உருவாக்கலாம்‌. ஆனால்‌ அவரது பின்னோக்கிய 11-ம்‌ இடத்துப்‌ பார்வை உங்கள்‌ ராசிக்கு 6-ம்‌ இடமான மிதுனத்தில்‌ விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும்‌. இதன்மூலம்‌ முயற்சி. “களில்‌ வெற்றியை தருவார்‌. உங்கள்‌ ஆற்றல்‌ மேம்படும்‌. பகைவர்களின்‌ சதியை முறியடிக்கும்‌ வல்லமையை பெறுவீர்கள்‌. கேது உங்கள்‌ ராசிக்கு 11-ம்‌ இடமான விருச்சிக ராசியில்‌ இருக்கிறார்‌. இது சிறப்பான இடம்‌. வசகிகள்‌ பெருகும்‌. மகிழ்ச்சியும்‌, ஆனந்தமும்‌ இருக்கும்‌. அவர்‌ மார்ச்‌ 21-ந்‌ தேதி அன்று 10-ம்‌ இடமான துலாம்‌ ராசிக்கு செல்கிறார்‌. இது சிறப்பானது என்று சொல்ல முடியாது. இங்கு அவர்‌ உடல்‌ உபாதைகளை தரலாம்‌. எதிரிகளின்‌ தொல்லை ஏற்படும்‌. சிலரது வீட்டில்‌ பொருட்கள்‌ களவு போக வாய்ப்பு உண்டு. பயணத்தின்‌ போது கவனம்‌ தேவை. ஆனால்‌ கேது பிற்பகுதியில்‌ காரிய அனுகூலத்தைப்‌ கொடுப்பார்‌.

  குரு,கேது சாதகமாக இருக்கும்‌. நிலையில்‌ இந்த ஆண்டு மலர்கிறது. கேது 11-ம்‌ இடமான விருச்சிகத்தில்‌ இருந்து நல்ல வளத்தையும்‌, நல்ல ஆரோக்கியத்தையும்‌ கொடுப்பார்‌. குடும்பத்தில்‌ மேன்மையை கொடுப்பார்‌. எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும்‌ ஆற்றலையும்‌ அவர்‌ கொடுப்பார்‌. குரு பகவான்‌ 2-ம்‌ இடமான கும்ப ராசியில்‌ இருக்கிறார்‌.இது சிறப்பான அம்சம்‌. இதனால்‌ இடர்பாடுகள்‌ அனைத்தும்‌ இருக்குமிடம்‌ தெரியாமல்‌ மறையும்‌. குடும்பத்தில்‌ நிலவி வந்த குழப்பத்திற்கு விடுதலை கிடைக்கும்‌. மந்த. நிலை மாறும்‌. துணிச்சல்‌ பிறக்கும்‌. பணவரவு கூடும்‌. தேவையான பொருட்களை வாங்கலாம்‌.

  உங்களுக்கு தொல்லை கொடுத்தவர்கள்‌. தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக இருப்பர்‌.ஆனால்‌ அவர்‌ ஏப்ரல்‌14-ந்‌ தேதி 3-ம்‌ இடமான மீன ராசிக்கு மாறுகிறார்‌. இது சிறப்பான இடம்‌ இல்லை. அவரால்‌ முயற்சியில்‌ தடை ஏற்படும்‌. உங்கள்‌ நிலையில்‌ மாற்றம்‌ ஏற்படும்‌. எதிர்பார்த்த. பதவி உயர்வு கிடைக்காது. ஆனால்‌ இந்த காலக்கட்டத்தில்‌ அவரது அனைத்து பார்வைகளும்‌ சிறப்பாக அமைந்து உள்ளதால்‌ பணவரவு இருக்கும்‌. தேவைகள்‌ பூர்த்தி ஆகும்‌.

  தம்பதியினர்‌ இடையே ஒற்றுமை மேம்படும்‌. உறவினர்கள்‌ உதவிகரமாக இருப்பர்‌. உங்களை அறிந்து கொள்ளாமல்‌ இருந்தவர்கள்‌ உங்கள்‌ மேன்மையை அறிந்து சரணடையும்‌ நிலை வரலாம்‌. தடைபட்டு வந்த திருமணம்‌ நடக்க வாய்ப்பு உண்டு. சனிபகவான்‌ உங்கள் ராசியில்‌ இருக்கிறார்‌. உடல்நலம்‌ பாதிக்கப்படலாம்‌. நெருப்பு தொடர்பான வேலையில்‌ இருப்பவர்கள்‌ சற்று கவனமாக இருக்க வேண்டும்‌. உறவினர்கள்‌ வகையில்‌ வீண்‌ மனக்கசப்பு வரலாம்‌. வெளியூர்‌ வாசம்‌ இருக்கும்‌ என்று ஜோதிடம்‌ கூறுகிறது. அதைக்‌ கண்டு அஞ்ச வேண்டாம்‌.

  காரணம்‌ சனிபகவான்‌ தான்‌ நிற்கும்‌ இடத்தில்‌ இருந்து 3,7,10-ம்‌ இடங்களைப்‌ பார்ப்பார்‌. அந்த வகையில்‌ அவரது 3-ம்‌ இடத்துப்‌ பார்வை சிறப்பாக அமைந்துள்ளது. இந்த பார்வையால்‌ எந்த பிரச்சினையையும்‌ முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம்‌. மேலும்‌ சனிபகவான்‌ மே 25-ந்‌ தேதி முதல்‌ அக்டோபர்‌ 9-ந்‌ தேதி வரை வக்கிரம்‌ அடைகிறார்‌. இந்த காலத்தில்‌ அவர்‌ கெடு பலன்களை தரமாட்டார்‌.

  இனி விரிவான பலனை காணலாம்

  குடும்பத்தில்‌ ஒருவருக்‌ கொருவர்‌ விட்டுக்‌ கொடுத்து போகவும்‌. புதிய வீடு, மனை வாங்க அதிக முயற்சி மேற்கொள்ள வேண்டியதிருக்கும்‌. குருபார்வையால்‌ மனமகிழ்ச்சி அதிகரிக்கும்‌. தேவைகள்‌ பூர்த்தி ஆகும்‌. சுபநிகழ்ச்சிகளில்‌ கலந்து கொள்வீர்கள்‌. 2023 மார்ச்‌ மாதத்திற்கு பிறகு சனியின்‌ 10- ம்‌ இடத்துப்‌ பார்வையால்‌ பொன்‌, பொருள்‌ கிடைக்கும்‌. மகிழ்ச்சியும்‌, ஆனந்தமும்‌ அதிகரிக்கும்‌. பெண்கள்‌ உறுதுணையாக இருப்பர்‌.

  உத்தியோகம்‌ வேலையில்‌ கவனமாக இருக்கவும்‌. வழக்கமான பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றுக்கு தடையில்லை. குருபார்வையால்‌. மேல்‌ அதிகாரிகளின்‌ அனுசரணை கிடைக்கும்‌.

  வியாபாரிகளுக்கு எதிரிகளின்‌ இடையூறு அவ்வப்போது தலைதூக்கலாம்‌. எப்போதும்‌ அவர்கள்‌ வகையில்‌ ஒரு கண்‌ இருப்பது நல்லது. ஆனாலும்‌ உங்கள்‌ புத்தியால்‌ அதை முறியடித்து வெற்றி காணலாம்‌. குடும்ப பிரச்சினையை தொழிலில்‌ காட்டாமல்‌ இருந்தால்‌ நல்ல முன்னேறம்‌ அடையலாம்‌. பணப்புழக்கம்‌ நன்றாக இருக்கும்‌. 2023 மார்ச்‌ மாதத்திற்கு பிறகு சனியின்‌10-ம்‌ இடத்துப்‌ பார்வையால்‌ பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்‌ நல்ல முன்னேற்றம்‌ அடையும்‌.

  கலைஞர்கள்‌ சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும்‌. போட்டியாளர்கள்‌ வகையில்‌ இடையூறுகள்‌ வரலாம்‌. பொதுநல சேவகர்கள்‌ எதிர்பார்த்த பலனை பெற முடியாது. பிரதிபலனை எதிர்பராமல்‌ உழைக்க வேண்டியதிருக்கும்‌. மனக்குழப்பம்‌ ஏற்படலாம்‌. அரசியல்வாதிகள்‌ எந்த விஷயத்திலும்‌ முன்னெச்சரிக்கையுடன்‌ நடந்து கொள்வது சிறப்பு. முக்கிய முடிவு எடுப்பதை தள்ளி போடுங்கள்‌.

  மாணவர்கள்‌ அசாதாரணமாக இருக்க வேண்டாம்‌. குருவின்‌ பார்வையால்‌ மேல்படிப்பில்‌ விரும்பிய பாடம்‌ கிடைக்கும்‌. நல்ல மதிப்பெண்‌ கிடைக்கும்‌. விளையாட்டு போட்டிகளில்‌ வெற்றி பெறலாம்‌. விவசாயிகள்‌ அதிக முதலீடு போடும்‌ விவசாய பயிரை தவிர்க்கவும்‌. அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்‌. ஆனால்‌ அதற்கு ஏற்ப வருமானம்‌ கிடைக்காமல்‌ போகாது. புதிய சொத்து வாங்கும்‌ எண்ணம்‌ தள்ளிபோகும்‌. புதிய வழக்கு எதிலும்‌ சிக்க வேண்டாம்‌.

  பெண்கள்‌ வக்கம்‌ பக்கக்கினர்களின்‌ கொல்லை ஏற்படும்‌. சிலராகு வீட்டில்‌ பொருட்கள்‌ களவு போக வாய்ப்பு உண்டு. கவனம்‌ தேவை. வீட்டினுள்‌ இருந்த சிற்சில பிரச்சினை, உறவினர்கள்‌ வகையில்‌ ஏற்பட்ட மனக்கிலேசம்‌ பொருள்‌ இழப்பு முதலியன குருவின்‌ பார்வையால்‌ மறையும்‌. குடும்பத்தில்‌ குதூகலத்தை கொடுப்பார்‌. திருமணம்‌ போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார்‌. சகோதரிகளால்‌ மேன்மை கிடைக்கும்‌. குழந்தை பாக்கியம்‌ கிடைக்கும்‌. வேலைக்கு செல்லும்‌ பெண்களுக்கு கோரிக்கை நிறைவேறும்‌. உடல்‌ நலம்‌ சுமாராக இருக்கும்‌. உஷ்ணம்‌, தோல்‌, தொடர்பான நோய்‌ வரலாம்‌. பயணத்தின்‌ போது கவனம்‌ தேவை.

  பரிகாரம்‌: சனிபகவானுக்கு நன்லெண்ணை தீபம்‌ ஏற்றுங்கள்‌. அஞ்சநேயர்‌ வழிபாடு உங்கள்‌ வாழ்வின்‌ தடையை அகற்றி முன்னேற்றத்தை கொடுக்கும்‌. பைரவர்‌ வழிபாடு சிறப்பைக்‌ தரும்‌. சனிக்கிழமை பெருமானையும்‌ வியாழக்கிழமை சிவனையும்‌ வழிபடுங்கள்‌. செவ்வாய்‌ வெள்ளி கிழமைகளில் முருகனை வழிபட்டு வாருங்கள்‌.

  மேலும் படிக்க... 

  ராகு கேது பெயர்ச்சி 2022: மேஷம் ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

  ராகு கேது பெயர்ச்சி 2022: ரிஷப ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

  ராகு கேது பெயர்ச்சி 2022: மிதுனம் ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

  ராகு கேது பெயர்ச்சி 2022: கடகம் ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

  ராகு கேது பெயர்ச்சி 2022: சிம்மம் ராசிக்கான பலன்கள்,பரிகாரங்கள்

  ராகு கேது பெயர்ச்சி 2022: கன்னி ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

  ராகு கேது பெயர்ச்சி 2022: விருச்சிக ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

  ராகு கேது பெயர்ச்சி 2022: துலாம்‌ ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

  ராகு கேது பெயர்ச்சி 2022: தனுசு ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

  ராகு கேது பெயர்ச்சி 2022: மகர ராசிக்கான பலன்கள்,பரிகாரங்கள்

  ராகு கேது பெயர்ச்சி 2022: கும்ப ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

  ராகு கேது பெயர்ச்சி 2022: மீனம் ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்
  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Rahu Ketu Peyarchi

  அடுத்த செய்தி