Home /News /spiritual /

ராகு கேது பெயர்ச்சி 2022: கும்ப ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

ராகு கேது பெயர்ச்சி 2022: கும்ப ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

கும்பம்

கும்பம்

Rahu Ketu Peyarchi 2022 | கும்ப ராசி அன்பர்களே! கேது 10-ம்‌ இடமான விருச்சிக ராசியில்‌ இருக்கிறார்‌. இது சிறப்பானது என்று சொல்ல முடியாது. இங்கு அவர்‌ உடல்‌ உபாதைகளை தரலாம்‌. இங்கு கோச்சார படி, ஜோதிடர் - காழியூர் நாராயணன் கும்ப ராசிக்கு என்ன பலன் கிடைக்கும்? என்னென்ன பரிகாரம் செய்ய வேண்டும்? என்பது குறித்து இந்த பதிவில் விளக்கியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    கும்ப ராசி அன்பர்களே! ராகு 4-ம்‌ இடமான ரிஷபத்தில்‌ இருக்கிறார்‌. இந்த இடம்‌ ராகுவுக்கு சாதகமானது அல்ல என்பதால்‌ அலைச்சலையும்‌, சிற்சில பிரச்சினையையும்‌ உருவாக்கலாம்‌. ஆனால்‌ ராகுவின்‌ பின்னோக்கிய 11-ம்‌ இடத்துப்‌ பார்வை உங்கள்‌ ராசிக்கு 6-ம்‌ இடமான கடகத்தில்‌ விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும்‌. அவர்‌ மார்ச்‌ 21-ந்‌ தேதி அன்று இடம்‌ பெயர்ந்து 3-ம்‌ இடமான மேஷத்திற்கு வந்து பல்வேறு நன்மைகளை தர உள்ளார்‌. குறிப்பாக காரியதுனுகூலத்‌தையும்‌, நற்சுகத்தையும்‌, பொருளாதார வளத்தையும்‌ தருவார்‌. குடும்பத்தில்‌ மகிழ்ச்சியையும்‌, தொழில்‌ விருத்தியையும்‌ கொடுப்பார்‌.

    கேது 10-ம்‌ இடமான விருச்சிக ராசியில்‌ இருக்கிறார்‌. இது சிறப்பானது என்று சொல்ல முடியாது. இங்கு அவர்‌ உடல்‌ உபாதைகளை தரலாம்‌. எதிரிகளின்‌ தொல்லை ஏற்படும்‌. சிலரது வீட்டில்‌ பொருட்கள்‌ களவு போக வாய்ப்பு உண்டு. பயணத்தின்‌ போது கவனம்‌ தேவை.அவர்‌ மார்ச்‌ 21-ந்‌ தேதி அன்று 9- ம்‌ இடமான துலாம்‌ ராசிக்கு போகிறார்‌. அதுவும்‌ சிறப்பான இடம்‌ அல்லதான்‌. ஆனால்‌ அவரால்‌ இருந்து வந்த உடல்‌ உபாதைகள்‌ குணம்‌ அடையும்‌. அதே நேரம்‌ கேதுவால்‌ பொருள்‌ இழப்பையும்‌, காரியதோல்வியையும்‌ காணலாம்‌. அவரால்‌ பொருள்‌ நஷ்டம்‌ வரலாம்‌. பயணத்தின்‌ போது சற்று கவனம்‌ தேவை. ஆனால்‌ அவரது பின்னோக்கிய 4,7,11-ம்‌ இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்து உள்ளதால்‌ எந்த பிரச்சினையையும்‌ முறியடித்து வெற்றிக்கு வழி காணலாம்‌.

    இதன்மூலம்‌ தெய்வ அனுகூலம்‌ கிடைக்கும்‌. உங்களுக்கு அபார ஆற்றல்‌ பிறக்கும்‌.நகை-ஆபரணங்கள்‌ வாங்கலாம்‌. குரு தற்போது உங்கள்‌ ராசியில்‌ இருக்கிறார்‌ இது சுமாரான நிலையே. குரு 1-ம்‌ இடத்தில்‌ இருக்கும்‌ போது கலகம்‌ விரோதம்‌ வரும்‌ என்றும்‌ மந்தநிலை ஏற்படும்‌ என்றும்‌ பொதுவாக கூறப்படுவது உண்டு.

    ஆனாலும்‌ கவலைப்பட வேண்டாம்‌. குருபகவான்‌ சாதகமற்ற நிலையில்‌ இருந்தாலும்‌ அவரது அனைத்துப்‌ பார்வைகளும்‌ சிறப்பாக உள்ளது. குருவின்‌ பார்வைக்கு கோடி நன்மை உண்டு. மேலும்‌ அதிக நாட்கள்‌ அவர்‌ இங்கு இருக்க மாட்டார்‌. அவர்‌ ஏப்ரல்‌ 14-ந்‌ தேதி பெயர்ச்சி அடைந்து 2-ம்‌ இடமான மீனராசிக்கு மாறுகிறார்‌. இது சிறப்பான இடம்‌. அவரால்‌ உங்களது ஆற்றல்‌ மேம்படும்‌. இதுவரை இருந்த மந்த நிலை மாறும்‌. துணிச்சல்‌ பிறக்கும்‌. பணவரவு கூடும்‌. தேவையான பொருட்களை வாங்கலாம்‌. உங்களுக்கு தொல்லை கொடுத்தவர்கள்‌. தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக இருப்பர்‌.

    சனிபகவான்‌ தற்போது 12-ம்‌ இடமான மகர ராசியில்‌ இருக்கிறார்‌. அவரால்‌ பொருளாதார இழப்பு வரலாம்‌. வெளியூர்‌ பயணம்‌ ஏற்படும்‌. எதிரிகளின்‌ இடையூறு அவ்வப்போது வரலாம்‌ என்பது ஜோதிட வாக்கு. இதனால்‌ நீங்கள்‌ அஞ்ச வேண்டாம்‌. காரணம்‌ சனி சாதகமற்ற நிலையில்‌ இருந்தாலும்‌ சனியின்‌ 7-ம்‌ இடத்துப்பார்வை கடகத்தில்‌ விழுகிறது. இது சிறப்பான இடம்‌. இதன்‌ மூலம்‌ அவர்‌ நல்ல பொருளாதார வளத்தை கொடுப்பார்‌. பகைவர்களை எதிர்‌ கொள்ளும்‌ ஆற்றல்‌ கிடைக்கும்‌. முயற்சிகளில்‌

    வெற்றியை தருவார்‌. உங்கள்‌ ஆற்றல்‌ மேபடும்‌. மகர ராசியில்‌ இருக்கும்‌ சனிபகவான்‌ மே 25-ந்‌ தேதி முதல்‌ அக்டோபர்‌ 9-ந்‌ தேதி வரை வக்கிரம்‌ அடைகிறார்‌. அவர்‌ வக்கிரம்‌ அடைந்தாலும்‌ மகர ராசிக்குள்‌ளேயே இருக்கிறார்‌. இந்த காலத்தில்‌ அவர்‌ கெடுபலன்களை தரமாட்டார்‌.

    இனி விரிவான பலனை காணலாம்‌

    ராகு, குருவால்‌ சிறப்பான நிலையை காணலாம்‌. திருமணம்‌ போன்ற சுபகாரியங்கள்‌ கைகூடும்‌. கணவன்‌- மனைவி இடையே அன்னியோன்யமான சூழ்நிலை இருக்கும்‌. பிள்ளைகளால்‌ பெருமை காணலாம்‌. பொருளாதார வளம்‌ சிறப்படையும்‌. தேவைகள்‌ பூர்த்தியாகும்‌. வீடு மனை வாங்க யோகம்‌ கூடி வரும்‌. வண்டி, வாகனங்கள்‌ வாங்கலாம்‌. கேதுவின்‌ பின்னோக்கிய 4,7,11-ம்‌ இடத்து பார்வையால்‌ தெய்வ அனுகூலம்‌ கிடைக்கும்‌. உங்களுக்கு அபார ஆற்றல்‌ பிறக்கும்‌. பொருளாதார வளம்‌ அதிகரிக்கும்‌. நகை ஆபரணங்கள்‌ வாங்கலாம்‌.

    உத்தியோகம்‌ வளர்ச்சி காணலாம்‌. மேல்‌ அதிகாரிகள்‌ ஆதரவுடன்‌ இருப்பர்‌. கோரிக்கைகள்‌ நிறைவேறும்‌. சக ஊழியர்கள்‌ உதவிகரமாக இருப்பர்‌. பதவிஉயர்வு காண்பர்‌. உங்கள்‌ செல்வாக்கு அதிகரிக்கும்‌. பாதுகாப்பு தொடர்பான வேலையில்‌ இருப்பவர்களுக்கு கோரிக்கைகள்‌ நிறைவேறும்‌.

    வியாபாரிகள்‌ பண விஷயத்தில்‌ எப்போதும்‌ கண்ணும்‌ கருத்துமாக இருக்க வேண்டும்‌. ராகுவால்‌ பகைவர்களின்‌ தொல்லைகள்‌ குறையும்‌. பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்‌ நல்ல முன்னேற்றம்‌ அடையும்‌. தங்கம்‌,வெள்ளி, வைரம்‌ நகைகள்‌ வியாபாரம்‌ செய்பவர்கள்‌ அதிக லாபத்தை பெறுவர்‌.கோவில்‌ மற்றும்‌ புண்ணிய காரியங்களுக்கான தொழில்‌ சிறந்து விளங்கும்‌. 2023 மார்ச்‌ மாதத்திற்கு பிறகு சனிபகவானின்‌ 3-ம்‌ இடத்து பார்வையால்‌ பல்வேறு நன்மைகளை தருவார்‌. குறிப்பாக அவர்‌ காரிய அனுகூலத்தையும்‌, பொருளாதார வளத்தையும்‌, தொழில்‌ விருத்தியையும்‌ தருவார்‌.

    கலைஞர்கள்‌ புதிய ஒப்பந்தங்கள்‌ பெறலாம்‌. எதிர்பார்த்த புகழ்‌ பாராட்டு போன்றவை கிடைக்கும்‌.

    அரசியல்வாதிகள்‌ எதிர்பார்த்த பதவி,பொறுப்புகளை பெறலாம்‌. நல்ல வசதியுடன்‌ இருப்பர்‌.

    மாணவர்களுக்கு கல்விவளம்‌ பெருகும்‌. ஆசிரியரிடம்‌ நன்மதிப்பு கூடும்‌. நற்பெயரை எடுப்பர். பாடத்தில்‌ மட்டும்‌ அல்லாமல்‌ விளையாட்டு போட்டிகளிலும்‌ வெற்றி காண்பர்‌.காலர்ஷிப்‌ போன்றவை கிடைக்கும்‌.

    விவசாயிகள்‌ பொருளாதார வளத்தில்‌ சிறப்படைவர்‌. என்ன பயிர்‌ செய்தாலும்‌ நல்ல லாபம்‌ கிடைக்கும்‌. பாசிபயறு நெல்‌, உளுந்து, துவரை, கொண்டைக்கடலை சோளம்‌, மஞ்சள்‌, தக்காளி, பழவகைகள்‌ நல்ல வருவாயை கொடுக்கும்‌. கால்நடை செல்வம்‌ பெருகும்‌. பால்பண்ணை மூலம்‌ நல்ல வருவாய்‌ கிடைக்கும்‌. நவீன விவசாயத்தை பயன்படுத்தி வளம்‌ காணலாம்‌. வழக்கு விவகாரங்‌கள்‌ சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு.

    பெண்கள் பல்வேறு முன்னேற்றங்களை காணலாம்‌. கணவன்மற்றும்‌ குடும்பத்தாரிடம்‌ நற்பெயர்‌ பெறுவர்‌. பெரியோர்கள்‌ மிகவும்‌ உறுதுணையாக இருப்பர்‌. பொன்‌, பொருட்கள்‌ வாங்கலாம்‌. பிறந்த வீட்டில்‌ இருந்து பொருட்கள்‌ வந்து சேரும்‌. குழந்தைகளால்‌ பெருமை கிடைக்கும்‌. சகோதரர்கள்‌ மிகவும்‌ ஆதரவுடன்‌ இருப்பா. அண்டை வீட்டார்‌ அனுகூலமாக இருப்பர்‌. வேலைக்கு செல்லும்‌ பெண்களுக்கு வேலையில்‌ நிம்மதியும்‌, திருப்தியும்‌ கிடைக்கும்‌. வியாபாரம்‌ செய்யும்‌ பெண்கள்‌ நல்ல வருமானத்தைப்‌ பெறுவர்‌. உடல்‌ நலம்‌ சிறப்படையும்‌. கண்‌ தொடர்பான உபாதை பூரண குணம்‌ ஆகும்‌.

    பரிகாரம்‌- கேதுவுக்கும் அர்ச்சனை செய்யுங்கள்‌. தட்சிணாமூர்த்தியை வணங்கி வாருங்கள்‌. துர்க்கை வழிபாடு செய்வது நல்லது. ஏழைகளுக்கு கொள்ளு தானம்‌ செய்யுங்கள்‌. வெள்ளி செவ்வாய்க்‌ கிழமைகனில்‌ பத்திரகாளியம்மனுக்கு எலுமிச்சைபழ விளக்கு ஏற்றி பூஜை செய்வது நல்லது.

    மேலும் படிக்க... 

    ராகு கேது பெயர்ச்சி 2022: மேஷம் ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

    ராகு கேது பெயர்ச்சி 2022: ரிஷப ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

    ராகு கேது பெயர்ச்சி 2022: மிதுனம் ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

    ராகு கேது பெயர்ச்சி 2022: கடகம் ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

    ராகு கேது பெயர்ச்சி 2022: சிம்மம் ராசிக்கான பலன்கள்,பரிகாரங்கள்

    ராகு கேது பெயர்ச்சி 2022: கன்னி ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

    ராகு கேது பெயர்ச்சி 2022: விருச்சிக ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

    ராகு கேது பெயர்ச்சி 2022: துலாம்‌ ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

    ராகு கேது பெயர்ச்சி 2022: தனுசு ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

    ராகு கேது பெயர்ச்சி 2022: மகர ராசிக்கான பலன்கள்,பரிகாரங்கள்

    ராகு கேது பெயர்ச்சி 2022: கும்ப ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

    ராகு கேது பெயர்ச்சி 2022: மீனம் ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Rahu Ketu Peyarchi

    அடுத்த செய்தி