Home /News /spiritual /

ராகு கேது பெயர்ச்சி 2022: கும்ப ராசியினருக்கு முயற்சிகள் யாவும் வெற்றி பெறும்

ராகு கேது பெயர்ச்சி 2022: கும்ப ராசியினருக்கு முயற்சிகள் யாவும் வெற்றி பெறும்

கும்பம்

கும்பம்

rahu ketu Peyarchi 2022 | குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சியைப் போலவே ராகு - கேது பெயர்ச்சியும் இன்றைய காலகட்டத்தில் முக்கியமானதாக இருக்கிறது.

    ராகுவும் கேதுவும் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குச் செல்லும் காலகட்டத்தைதான் நாம் ராகு - கேது பெயர்ச்சி என்கிறோம். 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ராகு பகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கும் கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகிறார். இதனால் கும்பம் ராசியினருக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்...

    கும்பம்: சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட உங்களுக்கு இது வரை 4ஆம் இடத்தில் இருந்த ராகு 3ஆம் இடத்திலும் 10 இடத்தில் இருந்த கேது 9ம் இடத்திற்கும் வருகிறார்கள். 3ஆம் இடம் என்பது இளைய சகோதரம், தைரியம், வீரம் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானங்களில் ராகு வருகிறார். ராகு இப்பொழுது யோகத்தை வாரி வழங்க போகிறார். இனி தைரியத்துடன் புது தெம்புடன் செழிப்பான வாழ்க்கை அமையும். புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும்.உங்களுடைய நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். தொழில், உத்யோகத்தில் தடைகள் நீங்கும். தந்தையுடன் கருத்துவேறுபாடுகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் கிடைக்கவேண்டிய உதவிகள் கிடைக்காது. உற்றார் உறவினர் பகை மறந்து வீடு தேடி வருவார்கள்.

    ராகு, கேது பெயர்ச்சி நேரம்:

    திருக்கணித பஞ்சாங்கத்தின்படி பிலவ வருடம், பங்குனி மாத 29ம் தேதி 12.04.2022 மதியம் 1.38 மணியளவில் ராகு மேஷ ராசிக்கும், கேது துலாம் ராசிக்கும் பெயர்ச்சியாகின்றனர். வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 21.03.2022, பங்குனி 7ம் தேதி திங்கள் கிழமை மதியம் 3.02 மணிக்கு பெயர்ச்சியாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது...

    மேலும் படிக்க... 

    Zodiac Signs: ராகுவின் இடமாற்றதால் இந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்தான்...

    Astrology: ராகுவின் பெயர்ச்சியால் இந்த 4 ராசியினருக்கு பணவரவு அதிகமாகும்...

    கால சர்ப்ப தோஷத்தினால் ஏற்படும் பாதிப்புகளும் பரிகாரங்களும்..

    ராகு பலன்: மேஷ ராசிக்கு வரும் ராகுவால் இந்த 4 ராசியினருக்கு எல்லா வகையிலும் லாபம்தான்...

    கேது பலன் : துலாம் ராசிக்கு வரும் கேதுவால் இந்த ராசியினருக்கு பிரச்சனைதான்...

    ராகு, கேது பெயர்ச்சி 2022: இனி இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல யோகம்தான்!

    ராகு கேது பெயர்ச்சி 2022 : 12 ராசியினருக்கான பலன்கள் என்னென்ன?

    ராகு, கேது பெயர்ச்சி 2022 எப்போது? தேதி, நேரம் குறித்த தகவல்கள்...
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Rahu Ketu Peyarchi

    அடுத்த செய்தி