Home /News /spiritual /

ராகு கேது பெயர்ச்சி 2022: கன்னி ராசியினருக்கு பயணத்தடைகள் நீங்கும்

ராகு கேது பெயர்ச்சி 2022: கன்னி ராசியினருக்கு பயணத்தடைகள் நீங்கும்

கன்னி

கன்னி

rahu ketu Peyarchi 2022 | குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சியைப் போலவே ராகு - கேது பெயர்ச்சியும் இன்றைய காலகட்டத்தில் முக்கியமானதாக இருக்கிறது.

    ராகுவும் கேதுவும் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குச் செல்லும் காலகட்டத்தைதான் நாம் ராகு - கேது பெயர்ச்சி என்கிறோம். 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ராகு பகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கும் கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகிறார். இதனால் கன்னி ராசியினருக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்...

    கன்னி: ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் தரப்போகிறது. எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார். கோர்ட் வம்பு வழக்கு சாதகமாகும். சிலருக்கு இடமாற்றம், ஊர்மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ராசிக்கு 2ஆம் வீட்டில் கேது வருவதால் சொல்லும் செயலும் வெற்றி பெறும் தம்பி, தங்கைகளுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கும். பயணத்தடைகள் நீங்கும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். மனைவி அல்லது கணவன் மூலம் எதிர்பாரத பண வரவுகள் உண்டாகும். கணவன் அல்லது மனைவிக்கு பல், கண் சம்பந்தமான நோய்கள் வரும் கவனம் தேவை.

    ராகு, கேது பெயர்ச்சி நேரம்:

    திருக்கணித பஞ்சாங்கத்தின்படி பிலவ வருடம், பங்குனி மாத 29ம் தேதி 12.04.2022 மதியம் 1.38 மணியளவில் ராகு மேஷ ராசிக்கும், கேது துலாம் ராசிக்கும் பெயர்ச்சியாகின்றனர். வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 21.03.2022, பங்குனி 7ம் தேதி திங்கள் கிழமை மதியம் 3.02 மணிக்கு பெயர்ச்சியாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது...

    மேலும் படிக்க... 

    Zodiac Signs: ராகுவின் இடமாற்றதால் இந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்தான்...

    Astrology: ராகுவின் பெயர்ச்சியால் இந்த 4 ராசியினருக்கு பணவரவு அதிகமாகும்...

    கால சர்ப்ப தோஷத்தினால் ஏற்படும் பாதிப்புகளும் பரிகாரங்களும்..

    ராகு பலன்: மேஷ ராசிக்கு வரும் ராகுவால் இந்த 4 ராசியினருக்கு எல்லா வகையிலும் லாபம்தான்...

    கேது பலன் : துலாம் ராசிக்கு வரும் கேதுவால் இந்த ராசியினருக்கு பிரச்சனைதான்...

    ராகு, கேது பெயர்ச்சி 2022: இனி இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல யோகம்தான்!

    ராகு கேது பெயர்ச்சி 2022 : 12 ராசியினருக்கான பலன்கள் என்னென்ன?

    ராகு, கேது பெயர்ச்சி 2022 எப்போது? தேதி, நேரம் குறித்த தகவல்கள்...
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Rahu Ketu Peyarchi

    அடுத்த செய்தி