முகப்பு /செய்தி /ஆன்மிகம் / ராகு கேது பெயர்ச்சி 2022: கடகம் ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

ராகு கேது பெயர்ச்சி 2022: கடகம் ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

கடகம்

கடகம்

rahu ketu Peyarchi 2022 | ராகு கேது பெயர்ச்சியானது மார்ச் மாதம் 21 ஆம் தேதி, மதியம் 3:13 மணி அளவில் நடைபெறுகிறது. ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறை நடக்கக்கூடிய இந்த ராகு கேது பெயர்ச்சி எந்தெந்த ராசிகளுக்கு பலனை தரப்போகிறது, யாரெல்லாம் பரிகாரத்தை செய்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி ஜோதிடர் காழியூர் நாராயணன் கணித்து அளித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3-MIN READ
  • Last Updated :

கடக ராசி அன்பர்களே ராகு உங்கள்‌ ராசிக்கு 11-ம்‌ இடமான ரிஷபத்தில்‌ இருப்பது மிகச்சிறப்பான இடம்‌ ஆகும்‌. பொருளாதாரத்தில்‌ நல்ல வளத்தை தருவார்‌. அவரால்‌ பொன்‌, பொருள்‌ கிடைக்கும்‌. மகிழ்ச்சியும்‌, ஆனந்தமும்‌ அதிகரிக்கும்‌. பெண்கள்‌ மிக உறுதுணையாக இருப்பர்‌. அவர்‌ மார்ச்‌ 21-ந்‌ தேதி அன்று உங்கள்‌ ராசிக்கு 10-ம்‌ இடமான மேஷத்திற்கு செல்வது சிறப்பான இடம்‌ இல்லை. அவரால்‌ சிலர்‌ பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம்‌. பெண்கள்‌ வகையில்‌ இடையூறுகள்‌ வரலாம்‌. அவர்‌பொருள்‌ இழப்பையும்‌, சிறுசிறு உடல்‌ உபாதைகளையும்‌ கொடுப்பார்‌.

கேது தற்போது 5-ம்‌ இடமான விருச்சிக ராசியில்‌ இருக்கிறார்‌. இது சிறப்பான இடம்‌ இல்லை. இந்த இடத்தில்‌ அவர்‌ அரசு வகையில்‌ சிற்சில பிரச்சினையை தரலாம்‌. மேலும்‌ திருட்டு பயமும்‌ ஏற்படலாம்‌. உடல்‌ நலப்பாதிப்பையும்‌, பிள்ளைகளால்‌ பிரச்சினையையும்‌ தரலாம்‌. ஆனால்‌ இதற்காக கவலை கொள்ள தேவை இல்லை காரணம்‌ அவரது பின்னோக்கிய 7-ம்‌ இடத்துப்பார்வை உங்கள்‌ ராசிக்கு 11-இடமான ரிஷபத்தில்‌ விழுகிறது. இது சிறப்பாக அமைந்து உள்ளது.அவர்‌ மார்ச்‌ 21-ந்‌ தேதி அன்று 4-ம்‌ இடமான துலாம்‌ ராசிக்கு வருகிறார்‌. அவரால்‌ சிலர்‌ தீயோர்‌ சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம்‌. உடல்நலம்‌ பாதிப்பு வரலாம்‌. வயிறு பிரச்சினை வரும்‌.ஆனால்‌ அவரது பின்னோக்கிய 11-ம்‌ இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்து உள்ளதால்‌ எந்த பிரச்சினையையும்‌ முறியடிக்கும்‌ வல்லமையை பெறலாம்‌.

குருபகவான்‌ தற்போது 8-ம்‌ இடமான கும்ப ராசியில்‌ உள்ளார்‌. இது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. குருபகவான்‌ மனவேதனையும்‌, நிலையற்ற தன்மையைும்‌ கொடுப்பார்‌. பொருளாதார சரிவை ஏற்படுத்துவார்‌. வீண்விரோதத்தை உருவாக்குவார்‌. பல்வேறு தொல்லைகளை கொடுப்பார்‌. ஆனால்‌ இதனை கண்டு நீங்கள்‌ அஞ்ச வேண்டாம்‌. குரு சாதகமற்ற நிலையில்‌ இருந்தாலும்‌ அவரது 7-ம்‌ இடத்து பார்வைக்கு தனி சக்தி உண்டு. அந்த பார்வை உங்களுக்கு சாதகமாக உள்ளது.

அந்த வகையில்‌ உங்களுக்கு எந்த இடையூறுகள்‌ வந்தாலும்‌ அதை குருவின்‌ பார்வை முறியடித்து வெற்றிக்கு வழிவகுக்கும்‌. எனவே குரு சாதகமற்ற நிலையில்‌ இருக்கிறாரே என்று நீங்கள்‌ கவலை கொள்ள வேண்டாம்‌. அவர்‌ ஏப்ரல்‌ 14ஆம் தேதி அன்று பெயர்ச்சி அடைந்து 8-ம்‌ இடமான மீன ராசிக்கு மாறுகிறார்‌. இது சிறப்பான இடம்‌. அப்போது குருவால்‌ மனமகிழ்ச்சி அதிகரிக்கும்‌. உற்சாகம்‌ பிறக்கும்‌.

நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம்‌. பின்னடைவுகள்‌ மறையும்‌. உறவினர்கள்‌ உதவிகரமாக இருப்பர்‌. தடைபட்டு வந்த திருமணம்‌ நடக்க வாய்ப்பு உண்டு. உங்களை புரிந்து கொள்ளாமல்‌ இருந்தவர்‌ -கள்‌ உங்கள்‌ மேன்மையை அறிந்து சரணடையும்‌ நிலை வரலாம்‌. மேலும்‌ குருவின்‌ 9-ம்‌ இடத்துப்‌ பார்வையும்‌ சிறப்பாக உள்ளது. அதன்மூலம்‌ குரு குடும்பத்தில்‌ சுபநிகழ்ச்சியை தருவார்‌.

செல்வாக்கு மேம்படும்‌. பணப்புழக்கம்‌ அதிகரிக்கும்‌. தேவைகள்‌ பூர்த்தியாகும்‌. எண்ணற்ற பல வசதிகள்‌ கிடைக்கும்‌. உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வை தருவார்‌. தற்போது சனிபகவான 7-ம்‌ இடமான மகர ராசியில்‌ உள்ளாரா. இது சிறப்பான இடம் அல்ல.

பொதுவாக இந்த இடத்தில்‌ இருக்கும்‌ போது சனி குடும்பத்தில்‌ பல்வேறு பிரச்சினையை உருவாக்குவார்‌. அலைச்சல்‌ அதிகரிக்கும்‌ வெளியூர்‌ வாசம்‌ நிகழும்‌. தீயோர்‌ சேர்க்கையால்‌ அவதியுறலாம்‌ என்பது பொதுவான பலன்கள்‌. இதைக்‌ கண்டு அஞ்ச வேண்டாம்‌. சனிபகவான்‌ மே 25-ந்‌ தேதி முதல்‌ அக்டோபர்‌ 9-ந்‌ தேதி வரை வக்கிரம்‌ அடைகிறார்‌. இந்த காலங்களில்‌ வக்கிரம்‌ அடைந்தாலும்‌ மகர ராசியில்தான்‌ இருக்கிறார்‌. பொதுவாக சனிபகவானால்‌ நன்மைதர இயலாது ஆனால்‌ வக்கிரத்தில்‌ சிக்கும்‌ கிரகத்தால்‌ சிறப்பாக செயல்பட முடியாது. அந்த வகையில்‌ சனிபகவான்‌ வக்ரத்தில்‌ சிக்கும்‌போது கெடுபலன்களை தரமாட்டார்‌ மாறக நன்மையே தர ஆயத்தமாவார்‌.

இனி விரிவான பலனை காணலாம்‌

ராகு,கேது சாதகமற்ற பலனை தந்தாலும்‌ குருபகவான்‌ குடும்பத்தில்‌ குதூகலத்தைக்‌ கொடுப்பார்‌. திருமணம்‌ போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார்‌. கணவன்‌-மனைவி இடையே அன்பு பெருகும்‌. குழந்தை பாக்கியம்‌ கிடைக்கும்‌. இதனால்‌ வாழ்க்கையில்‌ வளம்‌ காணலாம்‌. சகோதரிகளால்‌ பண உதவி கிடைக்கும்‌. மதிப்பு, மரியாதை இருக்கும்‌. அனாவசிய செலவைத்‌ தவிர்க்க வேண்டும்‌.

உத்தியோகம்‌: வளர்ச்சி காணலாம்‌.வேலையில்‌ திருப்தியும்‌, நிம்மதியும்‌ காண்பீர்கள்‌. உங்கள்‌ செல்வாக்கு அதிகரிக்கும்‌. பதவி உயர்வு காண்பர்‌. அரசு வகையில்‌ எதிர்பார்த்த லோன்‌ எளிதில்‌ கிடைக்கும்‌. வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள்‌ ஒன்று சேருவர்‌.

வியாபாரம்‌: பகைவர்களின்‌ தொல்லைகள்‌ உங்களுக்கு தடையைத்‌ தந்தாலும்‌ பொருளாதார வகையில்‌ எந்த பின்தங்கிய நிலையும்‌ வராது. அதிக முதலீடு செய்ய வேண்டாம்‌. தொழில்‌ ரீதியாக வெளியூர்‌ பயணம்‌ ஏற்படலாம்‌. சிலர்‌ தீயோர்‌ சேர்க்கையால்‌ பண இழப்பை சந்திக்க நேரலாம்‌. தங்கம்‌, வெள்ளி, வைரம்‌ நகைகள்‌ வியாபாரம்‌ செய்பவர்கள்‌ நல்ல வருமானத்தைப்‌ பெறுவர்‌.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள்‌ கிடைக்கும்‌. சமூகநல சேவகர்கள்‌ பின்தங்கிய நிலையில்‌ இருந்து விடுபடுவர்‌. எதிர்பார்த்த பாராட்டு கிடைக்கும்‌. அரசியல்வாதிகள்‌ பிரதிபலனை எதிர்பாராமல்‌ உழைக்க வேண்டியதிருக்கும்‌.

மாணவர்களுக்கு ஆசிரியர்கள்‌ ஆலோசனை கிடைக்கும்‌. நற்பெயர்‌ கிடைக்கும்‌ கல்வியில்‌ சிறப்படைவர்‌. பல்வேறு போட்டிகளில்‌ வெற்றி காணலாம்‌.

விவசாயத்தில்‌ அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்‌. வழக்கு விவகாரங்களில்‌ மெத்தனமாக இருக்க வேண்டாம்‌.

பெண்கள்‌ குடும்பத்தில்‌ முக்கிய அங்கம்‌ வகிப்பர்‌. குடும்பத்தரிடம்‌ நன்மதிப்பை பெறுவர்‌. உங்களால்‌ வீட்டிற்கு பெருமை கிடைக்கும்‌. ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்‌. திருமணம்‌ ஆகாமல்‌ இருக்கும்‌ பெண்களுக்கு திருமணம்‌ கைகூடும்‌ அதுவும்‌ நல்ல வரனாக அமையும்‌. சகோதரர்கள்‌ மிகவும்‌ ஆதரவுடன்‌ இருப்பர்‌. வேலைக்கு செல்லும்‌ பெண்களுக்கு வேலையில்‌ நிம்மதியும்‌ திருப்தி கிடைக்கும்‌. உடல்‌ நலம்‌ பயணத்தின்‌ போது சற்று கவனம்‌ தேவை.

பரிகாரம்‌- பெருமான்‌ கோவிலுக்கு தொடர்ந்து சென்று வாருங்கள்‌. சாப்பிடும் முன்பு காக்கைக்கு அன்னமிடுங்கள்‌. ஏழைகளுக்கு கொள்ளு தானம்‌ செய்யலாம்‌. துர்க்கை வழிபாடு நடத்தூங்கள்‌. ஏப்ரல்‌ 13-ஆம் தேதிவரை குரு பகவானுக்கு மஞ்சன்‌ நிற பூக்களால்‌ அர்ச்சனை செய்யுங்கள்‌.

மேலும் படிக்க... 

ராகு கேது பெயர்ச்சி 2022: மேஷம் ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

ராகு கேது பெயர்ச்சி 2022: ரிஷப ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

ராகு கேது பெயர்ச்சி 2022: மிதுனம் ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

ராகு கேது பெயர்ச்சி 2022: கடகம் ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

ராகு கேது பெயர்ச்சி 2022: சிம்மம் ராசிக்கான பலன்கள்,பரிகாரங்கள்

ராகு கேது பெயர்ச்சி 2022: கன்னி ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

ராகு கேது பெயர்ச்சி 2022: விருச்சிக ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

ராகு கேது பெயர்ச்சி 2022: துலாம்‌ ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

ராகு கேது பெயர்ச்சி 2022: தனுசு ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

ராகு கேது பெயர்ச்சி 2022: மகர ராசிக்கான பலன்கள்,பரிகாரங்கள்

ராகு கேது பெயர்ச்சி 2022: கும்ப ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

ராகு கேது பெயர்ச்சி 2022: மீனம் ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்

First published:

Tags: Rahu Ketu Peyarchi