தனுசு ராசி அன்பர்களே! இந்த ராகு-கேது பெயர்ச்சியில் ராகு உங்களுக்கு சுமாரான பலனை தந்தாலும் கேது சிறப்பான பலனை தருவார். ராகு தற்போது 6-ம் இடமான ரிஷபத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம். காரிய அனு கூலத்தைக் கொடுப்பார். மேலும் அவரது பின்னோக்கிய 4-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 3- இடமான கும்பத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதன்மூலமும் நன்மைகள் கிடைக்கும். அவரது பார்வையால் பொருளாதார வளத்தையும் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தொழில் விருத்தியையும் தருவார். அவர் மார்ச் 21-ந் தேதி அன்று 5-ம் இடத்திற்கு வருவதால் நன்மைகள் தரமாட்டார். இன்னல்களையும், இடையூறுகளையும் அவர் தரலாம். மனைவி, மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கலாம். மனதில் இனம் புரியாத வேதனை ஆட்டிப்படைக்கலாம். ஆனால் அப்போது அவரது பின்னோக்கிய 7-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 11-ம் இடமான துலாம் ராசியில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதன் மூலம் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும்.
பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். கேது தற்போது 12-ம் இடமான விருச்சிக ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. இவரால் பொருள் விரயம் ஏற்படலாம். மார்ச் 21-ந் தேதி அன்று அவர் உங்கள் ராசிக்கு 11- ம் இடமான துலாம் ராசிக்கு போகிறார்.அவர் நல்ல வளத்தை கொடுப்பார். குடும்பத்தில் மேன்மையை கொடுப்பார். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றலையும் கொடுப்பார். மகிழ்ச்சி அதிகரிக்கும். ராகு சாதகமாக அமைந்திருக்கும் சூழ்நிலை-யில் இந்த புத்தாண்டு பிறக்கிறது. ஆண்டின் முற்பதியில் ராகுவும் பிற்பகுதியில் கேதுவும் நன்மைகள் தருவார்கள் இதனால் இந்த ஆண்டு உங்களுக்கு சீரும், சிறப்புமாக இருக்கும்.
குருபகவான் 3-ம் இடமான கும்ப ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. பொதுவாக குரு 3-ம் இடத்தில் இருக்கும் போது உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். வேலையில் அதிக கவனமுடன் இருக்கவும். அப்படியானால் குருவால் பிற்போக்கான பலன்கள்தான் நடக்குமோ என்று அஞ்ச வேண்டாம். காரணம் குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் குருவின் அனைத்து பார்வைகளும் சாதகமாக உள்ளன. எந்த இடையூறையும் அவரது பார்வை உடைத்து எறியும்.
பணவரவு இருக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம்.தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. அவர் ஏப்ரல்14-ந் தேதி பெயர்ச்சி அடைந்து 4-ம் இடமான மீன ராசிக்கு மாறுகிறார். இதுவும் சிறப்பான இடம் இல்லை. குரு மன உளச்சலையும், உறவினர்வகையில் வீண் பகையையும் உருவாக்குவார். அவர் 2023 ஏப்ரல் 22- ந் தேதி அன்று 5-ம் இடத்திற்கு செல்வதால் நன்மைகள் தருவார்.
சனிபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் இருக்கிறார் இது சிறப்பான இடம் அல்ல. பொருட்களை களவு கொடுக்க நேரிடும். பொருளாதார இழப்பு ஏற்படும். இது ஏழரை சனியின் இறுதிகட்டம். இந்த காலக்கட்டத்தில் சனி அதிக பளுவை கொடுத்தாலும், அதற்கான பலனையும் தரதயங்க மாட்டார். மேலும் சனி பகவான் தான் நின்ற ராசியில் இருந்து 3,7,10-ம் இடங்களை பார்ப்பார். அவரது 10-ம் இடத்துப் பார்வை உங்களுக்கு சிறப்பாக அமைந்து உள்ளது. அதன் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். பொன், பொருள் கிடைக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். அவர் 2023 மார்ச் 29-ந் தேதி அன்று 3-ம் இடத்திற்கு செல்வதால் நன்மைகள் தருவார்.
இனி விரிவான பலனை காணலாம்
கேதுவால் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழி காணலாம். இதனால் துணிச்சல் பிறகும் பண வரவு கூடும். உறவினர்கள் வகையில் வாக்குவாதத்தை தவிர்க்கவும். புதிய வீடு-மனை வாகனம் வாங்க அனுகூலம் உண்டு. 2023 ஏப்ரல் மாதத்திற்கு பிறகு நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.
உத்தியோகம் வேலைப்பளு அதிகரிக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. சிலர் வேலையில் அதிக ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். அவர்கள் குருப்பிரீத்தி செய்தால் சிறப்பான பலனை பெறலாம். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். 2023 மார்ச் மாதத்திற்கு பிறகு ஆசிரியர்களுக்கு. கோரிக்கைகள் நிறைவேறும். குருவால் திறமைக்கு ஏற்ற கவுரவம் கிடைக்கும். வக்கீல்களுக்கு தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம். மனைவி பெயரில் உள்ள தொழில் சிறப்படையும். ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்ட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். புதிய வியாபாரம் தொடங்குவதோ, அதிகமுதலீடு போடுவதோ இப்போது வேண்டாம். அதைவிட இருப்பதை சிறப்பாக நடத்துவதே சிறப்பு. பொதுவாக பணமுதலீட்டை விட அறிவு முதலீடே முக்கியம். ஆம் உங்கள் அறிவை பயன்படுத்தி முன்னேறலாம். 2023 மார்ச் மாதத்திற்கு பிறகு சனிபகவான் காரிய அனுகூலத்தையும் பொருளாதார வளத்தையும், தொழில் விருத்தியையும் தருவார். தங்கம், வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க பெறுவர். அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும்.
அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்கும். மாணவர்கள்: அசட்டையாக இருந்து விட வேண்டாம்.
விவசாயம் பயறு வகைகளில் நல்ல வருமானம் இருக்கும். கோழி, ஆடு வளர்ப்பில் எதிர்பார்த்த பலனைப் பெறலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
பெண்களுக்கு தோழிகளால் உதவி கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் உங்கள் பொறுப்புகளை நீங்களே கவனிக்க வேண்டும்.சுய தொழிலில் ஈடுபடும் பெண்கள் நல்ல முன்னேற்றம் அடைவர். பெண் காவலர்களுக்கு புதிய பதவி தேடி வரும். உடல்நலம் சிறப்படையும். பித்தம், மயக்கம் போன்ற உபாதைகளால் அவதிப்பட்டவர்கள் பூரண குணம் அடைவர். நீண்ட காலமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்கள் வீடு திரும்புவர்.
பரிகாரம்:
ஆலங்குடி, திருச்செந்தூர், திட்டக்குடி, பட்டமங்கலம் போன்ற ஏதாவது ஒரு குரு தளத்திற்கு சென்று வாருங்கள். கொண்டை கடலை தானம் செய்யுங்கள். ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள். சாப்பிடும் முன்பு காகங்களுக்கு அன்னமிடுங்கள்.
மேலும் படிக்க...
ராகு கேது பெயர்ச்சி 2022: மேஷம் ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்
ராகு கேது பெயர்ச்சி 2022: ரிஷப ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்
ராகு கேது பெயர்ச்சி 2022: மிதுனம் ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்
ராகு கேது பெயர்ச்சி 2022: கடகம் ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்
ராகு கேது பெயர்ச்சி 2022: சிம்மம் ராசிக்கான பலன்கள்,பரிகாரங்கள்
ராகு கேது பெயர்ச்சி 2022: கன்னி ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்
ராகு கேது பெயர்ச்சி 2022: விருச்சிக ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்
ராகு கேது பெயர்ச்சி 2022: துலாம் ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்
ராகு கேது பெயர்ச்சி 2022: தனுசு ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்
ராகு கேது பெயர்ச்சி 2022: மகர ராசிக்கான பலன்கள்,பரிகாரங்கள்
ராகு கேது பெயர்ச்சி 2022: கும்ப ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்
ராகு கேது பெயர்ச்சி 2022: மீனம் ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rahu Ketu Peyarchi