புத்தாண்டை முன்னிட்டு கோவை அம்பிகை முத்துமாரியம்மன் திருக்கோவிலில் தனலட்சுமி அலங்காரம்... எத்தனை கோடி நோட்டுகள் தெரியுமா?
புத்தாண்டை முன்னிட்டு கோவை அம்பிகை முத்துமாரியம்மன் திருக்கோவிலில் தனலட்சுமி அலங்காரம்... எத்தனை கோடி நோட்டுகள் தெரியுமா?
புத்தாண்டை முன்னிட்டு கோவை அம்பிகை முத்துமாரியம்மன் திருக்கோவிலில் தனலட்சுமி அலங்காரம்...
Coimbatore Kattur Ambigai Muthumariamman Temple | கோவை காட்டூர் பகுதியில் உள்ள அம்பிகை முத்துமாரியம்மன் திருக்கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 4 கோடி ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் இந்த தனலட்சுமி அலங்காரத்தை தரிசித்து வருகின்றனர் .
கோவை காட்டூர் பகுதியில் அம்பிகை முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை முதல் நாளன்று தனலட்சுமி அலங்காரம் ரூபாய் நோட்டுகளால் செய்யப்படுவது வழக்கம். கடந்த இரு வருடங்களாக கொரொனா தொற்று காரணமாக தனலட்சுமி அலங்காரம் செய்யப்படவில்லை.
இந்நிலையில் இன்று சித்திரை முதல் நாள் மற்றும் தமிழ் புத்தாண்டு என்பதால் , மக்கள் துன்பங்களில் இருந்து விடுபட வேண்டும் என்பதற்காக ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது. சுமார் 4.5 கோடி மதிப்புடைய 2000, 500, 200, 100 ரூபாய் நோட்டுக்கள் மற்றும் தங்கம், வைர நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
தமிழ் புத்தாண்டு திருநாளான சித்திரை ஒன்றாம் தேதியான இன்று மக்கள் கோயிலுக்குச் சென்று வழிபடுவார்கள்.தொடர்ந்து மா, பலா, வாழை உள்ளிட்ட முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப் பொருட்கள் வைத்து இறைவனை வழிபடுகின்றனர்.
காட்டூர் மாரியம்மன் கோவிலில் சித்திரை முதல் நாள் செய்யப்படும் இந்த தனலட்சுமி அலங்காரத்தை பார்ப்பதற்காக காலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து ரூபாய் நோட்டுகள், தங்கம், வைர நகைகளால் செய்யப்பட்ட தனலட்சுமி அலங்காரத்தை தரிசித்து செல்கின்றனர்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.