• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • பூரி தேர் திருவிழா : இந்த விழாவுக்கு பின்னால் உள்ள புராண அம்சம் என்ன தெரியுமா?

பூரி தேர் திருவிழா : இந்த விழாவுக்கு பின்னால் உள்ள புராண அம்சம் என்ன தெரியுமா?

நாட்டில் கொண்டாடப்படும் பல துடிப்பான பண்டிகைகளில் ரத யாத்திரை திருவிழாவும் (பூரி தேர் திருவிழா) ஒன்று

  • Share this:
    இந்தியா வளமான பாரம்பரியமும் வரலாறும் கொண்ட நாடு என்பது அனைவருக்கும் தெரியும். கலாச்சாரங்கள், மதங்கள், மொழிகள் போன்றவற்றால் பரந்த பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாடு என்றால் அது நம் இந்தியா தான். இந்தியா மற்ற நாடுகளிலிருந்து தனித்துவமாக தெரிவதற்கு மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று பண்டிகைகளும், சடங்குகளும் மற்றும் அதற்கான உற்சாக கொண்டாட்டங்களும் தான். நம் நாட்டில் பல்வேறு திருவிழாக்கள் இருந்தாலும், ஒவ்வொன்றும் சம வீரியத்துடனும் ஆர்வத்துடனும் கொண்டாடப்படுகின்றன.

    அந்த வகையில் நாட்டில் கொண்டாடப்படும் பல துடிப்பான பண்டிகைகளில் ரத யாத்திரை திருவிழாவும் (பூரி தேர் திருவிழா) ஒன்று. இந்த திருவிழா ஒரிசாவின் பூரி பகுதியில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த பண்டிகை இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டங்கள் டிவி நேரலையில் ஒளிபரப்படுகின்றன. இந்த பண்டிகையில் கிருஷ்ணாவின் அவதாரமான ஜெகந்நாதர் கடவுளை மக்கள் வழிபடுகின்றனர்.

    ரத யாத்திரை விழாவின் புராண முக்கியத்துவம்:

    ஒரு காலத்தில் துவாரகாவில், பிரபுக்களின் ராணி ரோஹினியிடம் கிருஷ்ண லீலா கதையை விவரிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும், கதையை விவரிக்க ரோகிணி தயங்கினார். ஆனால் நிறைய வற்புறுத்தலுக்குப் பிறகு கதையை கூற ஒப்புக்கொண்டார். மேலும் ரோகிணி கதை சொல்ல முடிவு செய்தபோது, ​​நுழைவாயிலில் காவல் காக்குமாறு சுபத்ராவிடம் ரோகினி கேட்டுக்கொண்டார்.

    ரோஹினி எல்லா கதைகளையும் ஒவ்வொன்றாக சொல்ல தொடங்கியதும், கிருஷ்ண லீலா கதை நுழைவாயிலில் காவல் காத்துக்கொண்டிருந்த சுபத்ரா உட்பட அறையில் இருந்த அனைவரையும் மூழ்கடித்தது. இருப்பினும், பலராமும், ஸ்ரீ கிருஷ்ணரும் உள்ளே வந்தபோது, ​​அதைக் கவனித்த சுபத்ரா அவர்களைத் தடுக்க முயன்றார். ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் மூழ்கி, கதையை மகிழ்ச்சியுடன் கேட்டு அங்கேயே நின்று கொண்டிருந்தனர்.

    அந்த நேரத்தில், நாரத் முனி வந்து, மூன்று உடன்பிறப்புகளையும் ஒன்றாகக் கண்டார். மேலும் தங்கள் பக்தர்களுக்கு தரிசனம் வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அவர்கள் மூவரும் பூரியின் ஜகந்நாத் கோவிலில் நித்தியமாக ஒன்றாக இருப்பதால், அவரது விருப்பப்படி மூவரும் பக்தர்களை ஆசீர்வதித்தனர். ஒரு வகையில், இந்த தேர் திருவிழா ராக்ஷா பந்தனுடன் தொடர்புடையதாக இருக்கிறது. உடன்பிறப்புகளுக்கிடையேயான பிணைப்பைப் இந்த திருவிழா குறிக்கிறது.

    இந்த ரத யாத்திரைகான தேர்கள் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக கட்டப்படுகின்றன. மேலும் இந்த தேரில் ஒரு உலோகத் துண்டு கூட பயன்படுத்தப்படுவதில்லை. முழு தேரும் மரத்திலேயே தயாரிக்கப்படுகிறது. மேலும், பக்தர்களைக் காண தெய்வங்களை கோவிலுக்கு வெளியே அழைத்துச் வரப்படும் ஒரே திருவிழா என்றால் அது தேர் திருவிழா (ரத் யாத்திரை) தான்.

    ரத யாத்திரை விழா கொண்டாடப்படும் தேதிகள்:

    ரத யாத்திரை திருவிழா கொண்டாடப்படும் தேதிகள் சந்திர நாட்காட்டியின் படி, ஆஷாத்தின் இரண்டாவது சந்திர நாளில் தொடங்குகிறது. மேலும் கொண்டாட்டங்கள் அடுத்த எட்டு நாட்கள் வரை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

    திதி தொடங்கும் நாள்: 2021 ஜூலை 11 அன்று காலை 07:47 மணி
    திதி முடிவடையும் நாள்: 2021 ஜூலை 12 அன்று 08:19 முற்பகல்

    ரத யாத்திரை திருவிழாவில் மேற்கொள்ளப்படும் சடங்குகள் மற்றும் கொண்டாட்டங்கள்:

    ரத் யாத்திரை திருவிழாவின் முக்கிய சிறப்பம்சம் எதுவென்றால் சரங்களால் இழுக்கப்படும் தேர் தான். இந்த தேர் திருவிழாவிற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு தான் தயாரிக்கப்படுகிறது. இந்த யாத்திரையில் நந்திகோசா, தலத்வாஜா மற்றும் தேவதலனா என்ற மூன்று ரதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை முறையே கிருஷ்ணா, பாலபத்ரா, சுபத்ரா ஆகியோருக்கான ரதங்கள் ஆகும்.

    அதேபோல இந்த விழாவில் தேர்கள் புறப்படுவதற்கு முன்பு சில சடங்குகள் செய்யப்படுகின்றன. மூன்று தெய்வங்களுக்கும் அதிகாலையில் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்படும். பின்னர் ஊர்வலம் தொடங்கும் வரை கடவுள் சிலைகள் மூன்றும் கோயிலுக்குள்ளேயே வைக்கப்படுகின்றன.

    அதன்பிறகு, சேரா பஹாரா என்ற சடங்கு செய்யப்படும். அதாவது ஒடிசா மன்னர் தேரையும், ஊர்வலம் செல்லும் பாதையையும் சுத்தம் செய்வது தான் அந்த சடங்கு. இந்த சடங்கு ஆண்டவரின் பார்வையில் எல்லோரும் ஒரே மாதிரியாக இருப்பதைக் குறிக்கிறது. கடவுள் தனது குழந்தைகளை வேறுபடுத்தி பார்ப்பதில்லை என்பதே இதன் அர்த்தம்.

    பின்னர் ராஜா கோயிலுக்குள் இருந்து தெய்வங்களைப் பெற்று அந்தந்த ரதங்களில் வைக்கிறார். தெய்வங்கள் தங்கள் அத்தையை பார்க்கவும், ஒன்பது நாட்கள் அங்கேயே தங்கவும் புறப்படும். அதன் பிறகு, அவர்கள் குண்டிச்சா கோயிலிலிருந்து மீண்டும் ஜெகந்நாத் கோயிலுக்கு கொண்டுவரப்படுகிறார்கள். அவர்களை மீண்டும் கோயிலுக்குள் வரவேற்கப்படும் நிகழ்வும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த பயணம் பஹுதா யாத்திரை என்று அழைக்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: