கோலாகலமாக தொடங்கியது புரி ஜெகன்னாதர் ரத யாத்திரை!

புரி ஜெகன்னாதர், பாலபத்ரர், சுபத்திரை சுவாமிகளுக்கு முறையே 16, 14, 13 அடி உயரத்தில் மரத்தால் ஆன 3 தேர்கள் வடிவமைக்கபட்டுளன என்பது குறிப்பிடத்தக்கது.

கோலாகலமாக தொடங்கியது புரி ஜெகன்னாதர் ரத யாத்திரை!
புரி ஜெகன்னாதர் ஆலயத்தில் ரத யாத்திரை
  • News18
  • Last Updated: July 8, 2019, 5:08 PM IST
  • Share this:
புரி ஜெகன்னாதர் கோவிலில் உலகப் புகழ்பெற்ற ரத யாத்திரை இன்று தொடங்கியது.

ஒடிசா மாநிலத்தின் கடற்கரையோர நகரான புரியில் அமைந்துள்ள ஜெகன்னாதர் கோவிலில் ரத யாத்திரை திருவிழா ஆண்டுதோறும் 9 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன்படி, இந்த ஆண்டுக்கான விழா இன்று தொடங்குகிறது. இதையொட்டி, புரி ஜெகன்னாதர், பாலபத்ரர், சுபத்திரை சுவாமிகளுக்கு முறையே 16, 14, 13 அடி உயரத்தில் மரத்தால் ஆன 3 தேர்கள் வடிவமைக்கபட்டுளன.


உற்சாகத்தில் பக்தர்கள்


கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள திருத்தேர்களில் உற்சவர்கள் எழுந்தருளியதும் ரத யாத்திரை தொடங்கியது

மேளதாளத்துடன் பாட்டு பாடி பக்தர்கள் உற்சாகம்ஜெகன்னாதர் ஆலயத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கண்டிச்சா ஆலயம் வரை தேரோட்டம் நடைபெற உள்ளது. இதில், பங்கேற்பதற்காக நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். அவர்கள்" மேளதாளங்களுடன் "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா".... "ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே என்ற பக்தி கோஷங்கள் எழுப்பியபடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ரதயாத்திரையில் மேளதாளத்துடன் பாட்டு பாடிய பக்தர்கள்


கண்டிச்சா ஆலயத்தில் ரத யாத்திரை நிறைவடைகிறது

கண்டிச்சா ஆலயத்தில் ரத யாத்திரை நிறைவடைகிறது. அதைத்தொடர்ந்து 9 நாட்கள் கழித்து 3 உற்சவர்களும் ஜெகன்னாதர் கோவிலுக்கு திரும்பும் வைபவம் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவையொட்டி புரி நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Also see... 40 ஆண்டுகளுக்கு பின் கோலாகலமாகத் தொடங்கிய அத்திவரதர் திருவிழா!

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading