Ratha Yatra | புகழ் பெற்ற புரி ஜெகன்னாத் ரத யாத்திரை தொடங்கியது - நேரலை

Puri Jagannath Rath Yatra | உலக புகழ்பெற்ற புரி ஜெகன்நாதர் கோயிலில் தேரோட்ட விழா இன்று கோலாகலமாகத் தொடங்கியது. கொரோனா அச்சத்தால் 500 பக்தர்கள் மட்டும் தேரோட்டத்தில் பங்கேற்கின்றனர்.

Ratha Yatra | புகழ் பெற்ற புரி ஜெகன்னாத் ரத யாத்திரை தொடங்கியது - நேரலை
புரி ரத யாத்திரை தேர்கள்
  • News18
  • Last Updated: June 23, 2020, 8:38 AM IST
  • Share this:
ஒடிசா மாநிலத்தில் புகழ்பெற்ற புரி ஜெகன்நாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் 10 நாள் திருவிழாவின் போது ரத யத்திரை செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக ரத யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கடும் கட்டுப்பாடுகளுடன் இன்று ரத யாத்திரை தொடங்கியது.

16 சக்கரங்களைக் கொண்ட 44 அடி உயரத்திலான தேரில் உற்சவ மூர்த்தியும், 14 சக்கரங்களைக் கொண்ட தேரில் பாலபத்திரரும், 12 சக்கரங்களுடன் அமைந்துள்ள தேரில் சுபத்ராவும் எழுந்தருளிய பின்னர் பக்தர்கள் தேர்களை வடம் பிடித்து இழுக்க உள்ளனர்.

மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குண்டிச்சா கோயிலை சென்றடைந்ததும் ஜெகன்நாதர் ஓய்வெடுப்பார். திருவிழாவின் 4 நாளில் தனது கணவரை காண லட்சுமி தேவி குண்டிச்சா கோயிலுக்கு வருகை தர உள்ளார். அதைத் தொடர்ந்து மீண்டும் தேர்கள் புறப்ப்பட்டு புரி ஜெகன்நாதர் கோயிலை வந்தடைந்ததும் விழா நிறைவடைய உள்ளது.


தேரோட்டத்தையொட்டி மூன்று தேர்களும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. தேரோட்டத்தில் 500 பேர் மட்டும் பங்கேற்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தை சுற்றி நேற்றிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

புரி ஜெகன்நாதர் கோயில் தேரோட்டத்தை வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சியில் நேரலையில் காண மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.

ரத யாத்திரை நேரலை வீடியோ:

கோவில் பணியாளர்கள், கலந்துகொண்டுள்ள பக்தர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார் என தொடர்புடைய அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: June 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading