• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • புரட்டாசி விரதம்: எப்படி இருக்க வேண்டும்? என்னென்ன செய்ய வேண்டும்? முழு விபரம்!

புரட்டாசி விரதம்: எப்படி இருக்க வேண்டும்? என்னென்ன செய்ய வேண்டும்? முழு விபரம்!

புரட்டாசி விரதம்

புரட்டாசி விரதம்

இப்படி செய்வதால் நம்முடைய அகந்தை அழியும் என்பது முன்னோர்கள் சொன்ன வாக்கு.

  • Share this:
    பெருமாளுக்கு உகந்த நாளான புரட்டாசி மாத விரதம் மற்றும் வழிப்பாட்டு முறை பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.

    புரட்டாசி சனிக்கிழமை விரதம் மிகவும் முக்கியமான ஒன்று. புண்ணியம் தரும் புரட்டாசி மாதத்தில் பெருமாளை நினைத்து விரதம் இருப்பது நன்மையை தரும். இந்த மாதத்தில் சிறந்த விரத முறையை கடைப்பிடித்தால் அந்த வருடம் முழுவதும் குறைவில்லாத செல்வத்தைப் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள் என்ற நம்பிக்கையும் உண்டு. இவ்வளவு சிறப்புமிக்க புரட்டாசி விரதத்தில் எப்படி இருக்க வேண்டும் என்ற விவரங்களை தெரிஞ்சிக்கோங்க.

    முதலில் புரட்டாசி மாதம் முழுவது அசைவ உணவை மறந்துவிட வேண்டும். இந்த மாசம் முழுவதும் அசைவ உணவை தவிர்த்து முழு பக்தியுடன் பெருமாளை வேண்டினால் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். புரட்டாசி மாதத்தில் வரும் ஏதாவது ஒரு சனிக்கிழமை அன்று தலுகை போட வேண்டும். முதல் சனிக்கிழமை போட்டால் மிகவும் நல்லது. முதலில் தலுகை போட சிறிய சொம்பை சுத்தம் செய்து எடுத்துக் கொண்டு அதில் நாமமிட்டு துளசி மாலையை சுற்றிக் கொள்ள வேண்டும். இந்த சொம்பை தான் வீடு வீடாக சென்று தலுகைக்கு எடுத்து செல்ல வேண்டும். இப்படி செய்வதால் நம்முடைய அகந்தை அழியும் என்பது முன்னோர்கள் சொன்ன வாக்கு. அதனால் தான் புரட்டாசி விரதத்தில் இந்த தலுகை முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதன் மூலம் கொண்டு வரும் அரிசி மற்றும் பணத்தை வைத்து தான் பூஜை செய்ய வேண்டும். நைவேத்தியங்கள் படைக்க இந்த அரிசியை சேர்த்து தான் பயன்படுத்த வேண்டும். நைவேத்தியமாக வாழை இலையில் புளி சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், வடை, சுண்டல், பாயாசம் இவற்றை படைக்கலாம். நைவேத்தியம் படைத்து பெருமாளுக்கு வடை மாலை சாற்ற வேண்டும். பூஜையில் துளசி தீர்த்தம் கட்டாயம் இருக்க வேண்டும். மாவிளக்கு போட வேண்டும். வழக்கம் போல் தேங்காய் உடைத்து சாமிக்கு பூஜை செய்ய வேண்டும். இந்த நேரத்தில் தான் வீட்டில் இருக்கும் அனைவரும் கோவிந்தா.. கோவிந்தா.. என்ற நாமத்தை உச்சரிக்க வேண்டும்.

    இந்த விரதம் பெண்கள் மட்டுமில்லை வீட்டில் இருக்கும் அனைவரும் இருக்கலாம். விரதத்தை முடிக்கும் வரை பச்சைத் தண்ணீர் கூட அருந்தாமல் இருக்க வேண்டும். முக்கியமாக எமகண்டம் தொடங்குவதற்குள் பூஜையை முடித்திட வேண்டும். காக்கைக்கு இலையில் உணவு வைத்துவிட்டு அதை காக்கை எடுத்த பின்பு வீட்டில் இருப்பவர்களும் உண்ண தொடங்கலாம். வசதி இருந்தால் 2 அல்லது 4 பேரை வீட்டுக்கு அழைத்து வந்து உணவு கொடுக்கலாம். விரதம் முடிந்தவுடன் மாலை பெருமாள் கோயிலுக்கு கட்டாயம் சென்று வர வேண்டும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: