முகப்பு /செய்தி /ஆன்மிகம் / நீண்ட நாட்களாக திருமணம் தள்ளிப்போகிறதா? அப்போ புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளுக்கு தளிகை போடுங்கள்...

நீண்ட நாட்களாக திருமணம் தள்ளிப்போகிறதா? அப்போ புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளுக்கு தளிகை போடுங்கள்...

தளிகை - பெருமாளுக்கு படையல்

தளிகை - பெருமாளுக்கு படையல்

சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு தளிகை போட்டு படைத்தால் உடனே திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

புரட்டாசி மாதம் முழுக்க பல விரதங்கள், வழிபாடுகள், பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. உணவு கட்டுப்பாட்டுடன் தெய்வத்தை மனதில் நிறுத்தி இருக்கும் விரதங்கள் உடலுக்கும், உள்ளத்துக்கும், ஆன்மாவுக்கும் அருமருந்து. அந்த வகையில் புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும். பொதுவாக இந்துக்கள் எல்லா சனிக்கிழமைகளிலும் விரதம் இருப்பார்கள். அப்படி இருக்க முடியாதவர்கள் புரட்டாசி மாதம் முழுக்க விரதம் இருந்தால் அதே பலன் கிட்டும். எனவேதான் புரட்டாசி மாதத்தை விரத மாதம் என்றும் அழைப்பார்கள்.

அத்தகைய சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு தளிகை போட்டு படைத்தால் உடனே திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

புரட்டாசி மாத சனிக்கிழமையில் ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு படைப்பது தளியல் ஆகும். வீடு வாசலை சுத்தம் செய்து பூஜை அறையில் விளக்கேற்றி படைக்கும் இடத்தில் படையல் கோலம் போட வேண்டும். தளியலுக்கு தேவையான சர்க்கரை சாதம், புளி சாதம், தயிர் சாதம், தளியல் வடை, கொண்டை கடலை சுண்டலுடன் வாழைக்காய் பொரியல், முருங்கை கீரை பொரியல் ஆகிய நைவேத்யங்கள் தயார் செய்ய வேண்டும்.

அதன் பிறகு குத்து விளக்கின் ஐந்து முகங்களையும் நெய் தீபம் ஏற்றி கோலத்தின் இருபுறமும் வைக்க வேண்டும். குத்து விளக்கிற்கு குங்குமம் வைத்து துளசி மாலை அணிய வேண்டும். மூன்று நுனி வாழை இலைகளை விளக்கிற்கு முன்புறம் போட்டு நைவேதயங்களை இலையில் பரிமார வேண்டும். உத்தரணி அல்லது ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் துளசியை கலந்து வைக்கவும்.

தேங்காய், வாழைப்பழம், பூ, வெற்றிலை, பாக்கு, சூடம் விபூதி குங்குமம் இவைகளை தட்டில் வைத்து தூப தீப ஆராதனை செய்து பெருமாள் அஷ்டோத்ரம் மற்றும் அவருடைய நாமவளிகளை கூறி வணங்கி “கோவிந்தா“ "கோவிந்தா" என்ற நாமத்துடன் புரட்டாசி சனிக்கிழமை ஸ்ரீ வெங்கடேச பெருமாளை வழிபடுவது நல்லது .

குறிப்பாக இந்த தளியலை பெருமாள் முகம் வரும்படி போடுவார்கள். அப்போது அற்புதமான பெருமாள் முகம் அமைய வேண்டும். அப்படி அமைவது என்பது அவருடைய ஆசி இருந்தால்தான் அமையும் என்பது நம்பிக்கை. இந்த தளிகை படையலை புரட்டாசியில் வரும் ஏதேனும் ஒரு சனிக்கிழமைகளில் செய்தால் நல்லது. இந்த வருடம் புரட்டாசியில் 5 சனிக்கிழமைகள் வருகின்றன.

Also see... புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது..? கதையும் காரணமும்

top videos

    அதனால் பெருமாள் பக்தர்கள் அவர்களுக்கு சவுகரியமான வாரம் எதுவோ அந்த வார சனிக்கிழமையில் முழு மனதோடு தளியல் போட்டு பெருமாளை வணங்கலாம். அதன் பிறகு அந்த பிரசாதத்தை வீட்டில் உள்ளவர்களுக்கும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து உண்ணுதல் வேண்டும்.

    First published:

    Tags: Marriage, Purattasi