ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

நாளை கடைசி புரட்டாசி சனிக்கிழமை... ஆயுள், ஆரோக்கியம் தரும் பெருமாள் விரதம்..!

நாளை கடைசி புரட்டாசி சனிக்கிழமை... ஆயுள், ஆரோக்கியம் தரும் பெருமாள் விரதம்..!

பெருமாள்

பெருமாள்

புரட்டாசி மாத சனிக்கிழமை மிகவும் விசேஷம். இதுவரை விரதம் இருக்காதவர்கள், புரட்டாசி கடைசி சனியன்றாவது விரதம் அனுஷ்டித்தால், சகல செல்வமும் பெற்று வாழலாம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில்தான் சனி பகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும், கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது. ஜாதகத்தில் சனி நல்ல நிலையில் இருந்தால், மிகச்சிறப்பான பலன்களே கிடைக்கும். அந்த வகையில் நாளை கடைசி புரட்டாசி சனிக்கிழமை. பெருமாளை வணங்கினால் ஆயுள் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

வழக்கமாக 5 சனிக்கிழமைகள் புரட்டாசி மாதத்தில் வரும் . ஆனால் இந்த வருடம் புரட்டாசி மாதத்தில் 4 சனிக்கிழமைகள் மட்டுமே வருகிறது. அதனால் கடைசி சனிக்கிழமையான நாளை விரதம் இருந்து பெருமாளை வழிபடுவது சிறப்பானதாகும்.

பெருமாளை வழிபடும் முறை

பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு. துளசியால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது. மாவிளக்கிட்டு பூஜை செய்வதானால் பச்சரிசி மாவை சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும்.

மேலும் படிக்க... புரட்டாசி மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய விரதங்கள் என்னென்ன?

பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும். தெய்வங்கள் மற்றும் முன்னோர்களின் அருளையும் ஆசீர்வாதத்தையும் பெற இந்த புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்து பெருமாளை வணங்க வேண்டும்.

மேலும் படிக்க... பிரிந்த தம்பதியரை ஒன்று சேர்க்கும் உமா மகேஸ்வர விரதம்..

கடைசி சனிக்கிழமையன்றும் இந்த விரதம் இருந்து பெருமாளை மனமுருகி வணங்கினால் அதன் பலன் நிச்சயம் கிட்டும் என்பது நம்பிக்கை. புரட்டாசி மாத சனிக்கிழமை மிகவும் விசேஷம். இதுவரை விரதம் இருக்காதவர்கள், புரட்டாசி கடைசி சனியன்றாவது விரதம் அனுஷ்டித்தால், சகல செல்வமும் பெற்று வாழலாம் என்கின்றனர் முன்னோர்கள்.

First published:

Tags: Purattasi