Home /News /spiritual /

புரட்டாசி முதல் சனி : இந்த பொருட்களை மட்டும் உணவில் சேர்க்காமல் விரதம் இருந்தால் எல்லாமே கிடைக்கும்!

புரட்டாசி முதல் சனி : இந்த பொருட்களை மட்டும் உணவில் சேர்க்காமல் விரதம் இருந்தால் எல்லாமே கிடைக்கும்!

புரட்டாசி சனி

புரட்டாசி சனி

பெருமாளுக்கு படையல் போட்டு குத்து விளக்கில் 5 முகம் ஏற்றி வழிபடுவது மிக மிக நல்லது.

    பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதத்தில் எந்த மாதிரியான விரதங்களை மேற்கொண்டால் பலன் கிட்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.

    புண்ணியம் நிறைந்த பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதத்தில் அதுவும் முதல் சனிக்கிழமையில் பெருமாளை தரிசிப்பது அவ்வளவு பலன்களை அள்ளி கொடுக்கும். வாழ்க்கையில் சகல செளபாக்கியங்களையும் பெற நினைப்பவர்கள் இந்த புரட்டாசி முதல் சனிக்கிழமையை தவற விடாதீர்கள். பெருமாள் உங்களுக்கு தேவையான அனைத்தையும் தந்தருள்வார்.இந்த மாதம் முழுவதுமே தினமும் பெருமாளை வழிபடுவது உன்னதமானது. பெருமாளுக்காக ஏதேனும் வேண்டுதல்கள் இருந்தால் இந்த மாதத்தில் செய்தால் இரட்டிப்பு பலன் தான். இந்த மாதத்தில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் மறவாமல் கோயில் சென்று பெருமாளுக்கு துளசி மாலை செலுத்தினால் நல்லது.

    அதே போல் புரட்டாசி மாத விரதம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. காலையில் இருந்து விரதத்தை தொடங்குபவர்கள் மாலை பெருமாளை தரிசித்துவிட்டு விரத்தை நிறைவு செய்வார்கள். இந்த மாதத்தில் உணவில் எந்தெந்த பொருட்களை தவிர்த்துவிட்டு சமைத்தால் நல்லது என பார்க்கலாம். வெங்காயம், பூண்டு, கரம் மசாலா பொருட்கள், இஞ்சி ஆகிவற்றை உணவில் தவிர்ப்பது நல்லது பலனும் கிட்டும். புரட்டாசி முழுவதும் அசைவம் சாப்பிடமாட்டார்கள் இது பொதுவாக இருக்கும் பழக்கம் தான். இந்த மாதத்தில் வேங்கடவனை தரிசிப்பதும் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யும் பழக்கமும் எல்லாம் பலனையும் கொடுக்கும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த நன்னாளில் பெருமாளுக்கு புளியோதரை அல்லது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து மனதார வழிபடுங்கள். அன்னத்தானம் செய்தாலும் புண்ணியம் தரும். கடன் துன்பத்தில் இருந்து காத்தருளும் வேங்கடவன், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்கும் மகாலக்ஷ்மிதேவி இருவரையு மனதார வழிபடுங்கள் உங்கள் குறைகள் தீரும். குறிப்பாக புரட்டாசி முதன் சனிக்கிழமையில் கல்யாணம் ஆகாத பெண்கள் விரதம் இருந்தால் தடைப்பட்ட திருமணம் முதலான காரியங்களை பெருமாளும் தாயாரும் நடத்துவார்கள் என்ற நம்பிக்கை உண்டு.

    முதன் சனிக்கிழமையில் செய்ய வேண்டிய பூஜை என்றால் பச்சரிசி மாவு, வெல்லம், ஏலக்காய் கலந்த மாவிளக்கு ஏற்றி பெருமாளை வழிபடவேண்டும்.திருப்பதியில் உள்ள ஏழுமலைகளை குறிக்கும் மாவிளக்கை கட்டாயம் ஏற்ற வேண்டும். சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் வைப்பது மிகவும் நல்லது. இதன்மூலம் ஜாதகங்களில் இருக்கும் தோஷங்கள் நிவர்த்தியாகும். இத்துடன் பெருமாளுக்கு படையல் போட்டு குத்து விளக்கில் 5 முகம் ஏற்றி வழிபடுவது மிக மிக நல்லது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Tirumala Tirupati

    அடுத்த செய்தி