ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

புரட்டாசி சனிக்கிழமை: திருப்பதியில் 8 கி.மீ.க்கு க்யூ.. தரிசனத்துக்கு 48 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்

புரட்டாசி சனிக்கிழமை: திருப்பதியில் 8 கி.மீ.க்கு க்யூ.. தரிசனத்துக்கு 48 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்

திருமலை திருப்பதியில் குவிந்துள்ள பக்தர்கள்

திருமலை திருப்பதியில் குவிந்துள்ள பக்தர்கள்

திருப்பதி மலையில் தங்கும் அறைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு அறைகள் கிடைக்காத பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Andhra Pradesh, India

  திருப்பதி மலையில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

  பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதத்தின் இன்று மூன்றாவது சனிக்கிழமை, நாளை விடுமுறை தினம் ஆகிய காரணங்களால் திருப்பதி மலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் இலவச தரிசனத்திற்காக சுமார் 8 கிலோமீட்டர் தொலைவு வரை வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.எனவே தரிசனத்திற்காக 48 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. .மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்த காரணத்தால் திருப்பதி மலையில் தங்கும் அறைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு அறைகள் கிடைக்காத பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

  தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (அக்டோபர் 08, 2022) பணியிடத்தில் புதிய வளர்ச்சி ஏற்படும்

  நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

  எனவே இலவச தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு சாமி தரிசன வாய்ப்பை விரைவாக ஏற்படுத்திக் கொடுக்க வசதியாக அனைத்து ஏற்பாடுகளையும் தேவஸ்தான நிர்வாகம் செய்து வருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலை பொறுத்த வரை அதிகபட்சமாக வினாடிக்கு ஒன்றரை நபர் என்ற கணக்கில் ஒரு மணி நேரத்தில் 4 ஆயிரத்து 800 பக்தர்கள் மட்டுமே சாமி கும்பிட வசதிகள் உள்ளன.

  திருப்பதி பிரம்மோற்சவம் நான்காவது நாள் விழா.. கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சாமி...

  எனவே பக்தர்களுக்கு 15 மணி நேரம் சாமி கும்பிட வாய்ப்பளித்தால் கூட 75 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் சென்று இறைவனை தரிசிக்க முடியும். ஜரகண்டி தொல்லையை அதிகப்படுத்தினால் மேலும் சுமார் ஐந்தாயிரம் மக்கள் வரை சாமி கும்பிட வாய்ப்புகள் உள்ளன. ஆனால் வந்திருக்கும் பக்தர்கள் எண்ணிக்கை ஒன்றை லட்சத்துக்கு அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Andhra Pradesh, Tirumala Tirupati, Tirupati Devotees