Home /News /spiritual /

புதன் கிழமை இந்த மந்திரத்தை சொல்லிவர கல்வியில் சிறந்து விளங்கலாம்...

புதன் கிழமை இந்த மந்திரத்தை சொல்லிவர கல்வியில் சிறந்து விளங்கலாம்...

புதன் பகவான்

புதன் பகவான்

Pudhan Bhagavan | நவகிரகங்களில் ஒருவரான புதன், கல்விக்கு அதிபதி. இவரை வழிபடுவதன் மூலம் கல்வி அறிவு கிடைக்கும், பீடை நீங்கும், கவி பாடும் ஆற்றல் அதிகரிக்கும்.

    புதன் கிழமை புதன் பகவானை வழிபாடு செய்து வந்தால் தொழிலில் உயரலாம் என்பது நம்பிக்கை. புதன் பகவானை வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது மிகுந்த வலிமை மிக்கது என்றும் வாழ்வில் அனைத்து விதமான முன்னேற்றங்களையும் அடையலாம், கல்வியிலும் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை. 

    புதன் பகவான் ஒருவருடைய ஜாதகத்தில் வலுவாக இருந்தால் சிறந்த அறிவாளி யாகவும், நல்ல படிப்பறிவுள்ளவராகவும், இறைவனிடத்தில் சிந்தனையுள்ளவராகவும் இருப்பார்கள். புதனை வழிபட்டால் அகங்காரம் அழியும். அமைதி கிடைக்கும். மேலும் புதன் பகவானை நினைத்து விரதம் இருந்தால் கல்வி, ஞானம், தனம் போன்றவை பெருகும். அதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என யார் வேண்டுமானாலும் இந்த விரதத்தை அனுசரிக்கலாம்.

    புதன் கிழமையில் சொல்ல வேண்டிய மந்திரம்

    ஓம் கஜத்துவ ஜாய வித்மஹே
    சுக ஹஸ்தாய தீமஹி
    தன்னோ புத : பிரசோதயாத்

    இந்த மந்திரத்தை புதன் கிழமைகளில் கோவில்களிலுள்ள புதன் பகவான் சந்நிதியிலோ அல்லது நம் இல்லத்திலோ நல்லெண்ணெய் தீபமேற்றி பச்சைப்பயிர்களால் ஆன உணவை நைவேத்தியமாய் படைத்து கற்பூர தீபம் காட்டி மேற்காணும் மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும்.

    பரிகாரங்கள்

    புதன் பகவானின் முழுமையான நல்லருளைப் பெறுவதற்கு ஏதேனும் ஒரு புதன் கிழமை அன்று தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் திருவெண்காடு கோவிலுக்கு சென்று சிவபெருமானுக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பிறகு அங்கிருக்கும் நவக்கிரக சந்நிதியில் புதன் பகவானுக்கு அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்து, பச்சை நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். இந்த பரிகார வழிபாட்டை ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ செய்வது புதன் பகவானின் அருளைப் பெற்றுத்தரும்.

    Also see...  புதன் பகவானுக்குரிய சிறப்புகளும் 108 போற்றிகளும்!

    இந்த கோவிலுக்கு நேரில் செல்ல இயலாதவர்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் சிவன் கோவிலில் இருக்கும் நவக்கிரக சந்நிதியில் புதன் கிழமைகள் தோறும் காலை 8 மணிக்குள்ளாக சென்று புதன் பகவானுக்கு சிறிது பச்சை பயிறு பருப்புகளை சமர்ப்பித்து, நெய் தீபமேற்றி, புதன் பகவானின் காயத்ரி மந்திரங்களை 108 முறை துதித்து வழிபட வேண்டும். இந்த பரிகாரத்தை 9 வாரங்கள் முதல் 27 வாரங்கள் வரை செய்வதால் மட்டுமே புதன் பகவானின் முழுமையான அருளைப் பெற முடியும் என்பது நம்பிக்கை...
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Hindu Temple

    அடுத்த செய்தி