Home /News /spiritual /

புதன்கிழமைகளில் இந்த காயத்ரி மந்திரத்தை சொன்னால் நினைத்தது நடக்குமாம்...

புதன்கிழமைகளில் இந்த காயத்ரி மந்திரத்தை சொன்னால் நினைத்தது நடக்குமாம்...

புதன் கிழமை புதன் பகவானை வழிபாடு செய்துவந்தால் தொழிலில் உயரலாம் என்பது நம்பிக்கை.

புதன் கிழமை புதன் பகவானை வழிபாடு செய்துவந்தால் தொழிலில் உயரலாம் என்பது நம்பிக்கை.

புதன் கிழமை புதன் பகவானை வழிபாடு செய்துவந்தால் தொழிலில் உயரலாம் என்பது நம்பிக்கை.

    புதன் கிழமைகளில் புதன் பகவானை வணங்கி அவருக்குரிய காயத்ரி மந்திரம் 1,008 அல்லது 108 முறை ஜெபித்து வர அவர் நன்மைகளை வாரி வழங்குவார். நினைத்த காரியத்தை நடத்தி தருவார். 

    நவகிரகங்களில் புத்திக்கும் வித்தைக்கும் அதிபதியாக திகழ்பவர் புதன் பகவான். ஒருவரது ஜாதகத்தில் புதன் சிறப்பாக இருந்தால் அவர்கள் தன் புத்தி கூர்மையால் தான் செய்யும் தொழிலில் படிப்படியாக வளர்ந்து உச்சத்தை அடைவார். அதே சமயம் புதன் பகவான் ஒருவரது ஜாதகத்தில் பலவீனமாக இருந்தால் தொழிலில் வெற்றிகாண்பது மிகவும் கடினமாக ஒன்றாக இருக்கும். புதன் பகவானை வணங்கி அவருக்குரிய காயத்ரி மந்திரம் அதை ஜெபித்து வர அவர் நன்மைகளை வாரி வழங்குவார்

    புதன் காயத்ரி மந்திரம்

    ஓம் கஜத்வஜாய வித்மஹே
    சுகஹஸ்தாய தீமஹி
    தந்நோ புத ப்ரசோதயாத்;

    எனும் மந்திரத்தைச் சொல்லி புதன் பகவானை வழிபட்டால் அனைத்து விதமான நன்மைகளும் வந்து சேரும் என்பது நம்பிக்கை. மேலும் புதன் பகவான் உச்சம் பெற்று ஆட்சி செய்யும் மாதமாக புரட்டாசி மாதமாகும்.

    மேலும் படிக்க... Vastu: இந்த அலங்கார பொருட்களை இனிமேல் உங்கள் வீட்டில் வைக்காதீர்கள்...

    புதன் கிழமைகளிலும் புதனுக்குரிய ரேவதி, அவிட்டம் நட்சத்திர நாட்களிலும் இந்த காயத்ரி மந்திரத்தை மனதார சொன்னால் வீட்டில் நல்லது நடக்கும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Temple

    அடுத்த செய்தி