• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • புதன் பகவானுக்குரிய சிறப்புகளும் 108 போற்றிகளும்!

புதன் பகவானுக்குரிய சிறப்புகளும் 108 போற்றிகளும்!

புத்திக்கூர்மையைத் தருபவன் புதன் பகவான். நவக்கிரகங்களில் சந்திர பகவானுக்கு உரிய தலம் திங்களூர். புதன் பகவானுக்கு உரிய தலம் திருவெண்காடு.

  • Share this:
    புதன் கிழமை புதன் பகவானை வழிபாடு செய்துவந்தால் தொழிலில் உயரலாம் என்பது நம்பிக்கை. புதன் பகவானை வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது மிகுந்த வலிமை மிக்கது என்றும் வாழ்வில் அனைத்து விதமான முன்னேற்றங்களையும் அடையலாம் என்றும் ஆச்சாரியார்கள் கூறுகின்றனர். 

    திருவெண்காடு திருத்தலம், நவக்கிரக திருத்தலங்களில் புதன் பகவானுக்கு உரிய திருத்தலம். மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ளது சீர்காழி. இங்கிருந்து பிரிந்து செல்லும் சாலையில் சென்றால், திருவெண்காடு திருத்தலத்தை அடையலாம். புதன் எனும் சொல் புத்தி என்பதில் இருந்து வந்ததாகச் சொல்வர். சந்திரனின் மைந்தன் புதன். இருவரும் திருவெண்காடு தலத்தில் தவமிருந்து, சிவனாரின் அருளைப் பெற்று, தங்களின் பாவங்களையும் தோஷங்களையும் போக்கிக்கொண்டதாக விவரிக்கிறது ஸ்தல புராணம்.

    சந்திரன் நம் மனதை ஆள்பவன். மனதின் எண்ண ஓட்டத்துக்குக் காரணகர்த்தா சந்திர பகவான். புத்திக்கூர்மையைத் தருபவன் புதன் பகவான். நவக்கிரகங்களில் சந்திர பகவானுக்கு உரிய தலம் திங்களூர். புதன் பகவானுக்கு உரிய தலம் திருவெண்காடு. புதன் பகவானை வழிபடுவதற்கு உகந்த கிழமை புதன்கிழமை. புத பகவானுக்கு உரிய ராசி - மிதுனம், கன்னி. இதேபோல், புதன் பகவானுக்கான திசை வடகிழக்கு என்றும் புதன் பகவானின் அதிதேவதை மகாவிஷ்ணு என்றும் பிரத்யதி தேவதை ஸ்ரீமந் நாராயணன் என்றும் விவரிக்கிறது ஜோதிட சாஸ்திரம்.

    புதன் பகவானுக்கு உரிய நிறம் பச்சை. அதனால்தான் திருவெண்காடு தலத்தில், புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சார்த்தப்படுகிறது. புதன் பகவானின் வாகனம் குதிரை. பச்சைப்பயறு புதன் பகவானுக்கு விருப்பமான நைவேத்தியம் என்றும் வெண்காந்தள் மலர் கொண்டு அர்ச்சிப்பது சிறப்பு என்றும்  அவருக்கான ஆபரணம் மரகதம் என்றும் விவரிக்கிறது திருவெண்காடு ஸ்தல புராணம்.



    புதன் காயத்ரி மந்திரம்

    ஓம் கஜத்வஜாய வித்மஹே
    சுகஹஸ்தாய தீமஹி
    தந்நோ புத ப்ரசோதயாத்;

    எனும் மந்திரத்தைச் சொல்லி புதன் பகவானை வழிபட்டால் அனைத்து விதமான நன்மைகளும் வந்து சேரும் என்பது நம்பிக்கை. மேலும் புதன் பகவான் உச்சம் பெற்று ஆட்சி செய்யும் மாதமாக புரட்டாசி மாதமாகும்.

    மேலும் படிக்க... பிரம்ம மூகூர்த்தத்தின் ரகசியம் தெரியுமா?

    புதன் பகவானுக்குரிய 108 போற்றிகள்

    ஓம் அழகனே போற்றி
    ஓம் அருளாகரனே போற்றி
    ஓம் அறிவிற்கு உவமையே போற்றி
    ஓம் அனைவருக்கும் காவலே போற்றி
    ஓம் அறிவுருவே போற்றி
    ஓம் அழகுருவே போற்றி
    ஓம் அம்பு பீடனே போற்றி
    ஓம் அலிக்கிரகமே போற்றி
    ஓம் அலங்காரனே போற்றி
    ஓம் ஆனந்தனே போற்றி
    ஓம் ஆயில்ய நாதனே போற்றி
    ஓம் ஆலவாயில் அருள்பவனே போற்றி
    ஓம் இரு வாகனனே போற்றி
    ஓம் இளை நாதனே போற்றி
    ஓம் இம்மை நலமளிப்பவனே போற்றி
    ஓம் இளன் சாபந்தீர்த்தவனே போற்றி
    ஓம் உயர்ந்தவனே போற்றி
    ஓம் உகந்தவனே போற்றி
    ஓம் உவர்ப்புச் சுவையனே போற்றி
    ஓம் உடலிற் தோலானவனே போற்றி
    ஓம் கலைவாணனே போற்றி
    ஓம் கல்வியருள்பவனே போற்றி
    ஓம் கருணாகரனே போற்றி
    ஓம் கன்னிராசி அதிபதியே போற்றி
    ஓம் கவியரசே போற்றி
    ஓம் கவிஞனாக்குபவனே போற்றி
    ஓம் கிரஹபதியே போற்றி
    ஓம் கிரகபீடாஹரனே போற்றி
    ஓம் கிழக்கு நோக்கனே போற்றி
    ஓம் கீர்த்தி வாய்த்தவனே போற்றி
    ஓம் குஜன் பகைவனே போற்றி
    ஓம் குதிரை வாகனனே போற்றி
    ஓம் கேடயதாரியே போற்றி
    ஓம் கேட்டை நாதனே போற்றி
    ஓம் சசி சுதனே போற்றி
    ஓம் சந்திர குலனே போற்றி
    ஓம் சத்வ குணனே போற்றி
    ஓம் சாந்த மூர்த்தியே போற்றி
    ஓம் சிவனடியானே போற்றி

    மேலும் படிக்க... வாழ்வை வெறுமையாக்கும் அன்ன தோஷமும் அதற்கான பரிகாரமும்!

    ஓம் சிவனால் கிரகமானவனே போற்றி
    ஓம் சிங்க வாகனனே போற்றி
    ஓம் சிங்கக் கொடியோனே போற்றி
    ஓம் சுந்தரனே போற்றி
    ஓம் சுப கிரகமே போற்றி
    ஓம் சுகமளிக்க வல்லவனே போற்றி
    ஓம் சொக்கருள் இணைந்தவனே போற்றி
    ஓம் ஞானியே போற்றி
    ஓம் ஞான நாயகனே போற்றி
    ஓம் தவசீலனே போற்றி
    ஓம் தவயோகியே போற்றி
    ஓம் தயாகரனே போற்றி
    ஓம் தனிக்கோயிலானே போற்றி
    ஓம் தாரை மகனே போற்றி
    ஓம் தரித்ர நாசகனே போற்றி
    ஓம் திருவுருவனே போற்றி
    ஓம் திருவெண்காட்டில் அருள்பவனேபோற்றி
    ஓம் துதிக்கப்படுபவனேபோற்றி
    ஓம் திருக்காளீஸ்வரத்தருள்பவனேபோற்றி
    ஓம் தேவனேபோற்றி
    ஓம் தேரேறி வருபவனேபோற்றி
    ஓம் நட்சத்ரேசனேபோற்றி
    ஓம் நல்லுரு அருள்பவனேபோற்றி
    ஓம் நாற்கரனேபோற்றி
    ஓம் நாயுருவி சமித்தனேபோற்றி
    ஓம் நான்காமவனேபோற்றி
    ஓம் நாரணன் ப்ரத்யதிதேவதையனேபோற்றி
    ஓம் பயிர்க் காவலனேபோற்றி
    ஓம் பசும்பயறு விரும்பியேபோற்றி
    ஓம் பச்சை வண்ண கிரகமேபோற்றி
    ஓம் பதினேழாண்டாள்பவனேபோற்றி
    ஓம் பித்தளை உலோகனேபோற்றி
    ஓம் பின் னகர்வுடையோனேபோற்றி
    ஓம் பிரமனருள் பெற்றவனேபோற்றி
    ஓம் புராணத் தேவனேபோற்றி
    ஓம் புலவர் பிரானேபோற்றி
    ஓம் புலமையளிப்பவனேபோற்றி
    ஓம் பூங்கழலடியனேபோற்றி
    ஓம் புண்ணியனேபோற்றி
    ஓம் புரூரவன் தந்தையேபோற்றி
    ஓம் புகழ் சேர்ப்பவனேபோற்றி
    ஓம் பொன்னணியனேபோற்றி
    ஓம் பொற்கொடியோனேபோற்றி
    ஓம் பொன்மேனியனேபோற்றி
    ஓம் பொன்னாடையனேபோற்றி
    ஓம் போகமளிப்பவனேபோற்றி
    ஓம் மணிமுடியனேபோற்றி
    ஓம் மரகதப் பிரியனேபோற்றி
    ஓம் மனோகரனேபோற்றி
    ஓம் மஞ்சள் சந்தனப்பிரியனேபோற்றி
    ஓம் மதுரையில் பூசித்தவனேபோற்றி
    ஓம் ரவி மித்ரனேபோற்றி
    ஓம் ரவிக்கருகிருப்பவனேபோற்றி
    ஓம் ரேவதிக் கதிபதியேபோற்றி
    ஓம் ரிக் ஐந்தின் அதிகாரியேபோற்றி
    ஓம் வள்ளலேபோற்றி
    ஓம் வல்லபிரானேபோற்றி
    ஓம் வாட்கரனேபோற்றி
    ஓம் வடகீழ் திசையனேபோற்றி
    ஓம் வாக்கானவனேபோற்றி
    ஓம் வாழ்வளிப்பவனேபோற்றி
    ஓம் வித்தகனேபோற்றி
    ஓம் விஷ்ணுரூபனேபோற்றி
    ஓம் விஷ்ணு அதிதேவதையனேபோற்றி
    ஓம் விதி மாற்றுபவனேபோற்றி
    ஓம் வெண்காந்தமலர்ப் பிரியனேபோற்றி
    ஓம் ‘ஜம்’ பீஜ மந்திரனேபோற்றி
    ஓம் புத பகவானே போற்றிபோற்றி

    இந்த 108 போற்றியை புதன் கிழமைகளிலும் புதனுக்குரிய ரேவதி, அவிட்டம் நட்சத்திர நாட்களிலும் மனதார சொன்னால் வீட்டில் நல்லது நடக்கும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.

    மேலும் படிக்க... விநாயகரின் அருளை பெற இந்த விரதங்களை கடைபிடியுங்கள்...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: