Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு இன்று (16 ஜூன் 2022) வியாபாரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் சுமுகமாக நிறைவேறும்..!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு இன்று (16 ஜூன் 2022) வியாபாரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் சுமுகமாக நிறைவேறும்..!

Numerology

Numerology

Numerology | ஜூன் 16 ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் நன்றாக முதிர்ச்சியடைந்த மற்றும் எதார்த்தத்தை நன்கு உணர்ந்த நபர், அதனால் தான் உங்கள் சொத்து சம்பந்தமாக சரியான நேரத்தில், சரியான முடிவெடுத்துள்ளீர்கள். சிகிச்சை அமர்வுகள், அரசாங்க ஒப்பந்தங்களில் கையொப்பமிடுதல், விளக்கக்காட்சிகளில் பங்கேற்பது, ஸ்பான்சர் நிகழ்வுகள் மற்றும் போட்டிகள் விளையாடுவது ஆகியவற்றில் நாளை செலவிடலாம். சட்டம் அல்லது வேலை சம்பந்தமான சிக்கல்களை தீர்க்க உங்கள் பின்னணியில் உள்ள நண்பர்கள் அல்லது உறவினர்கள் உதவலாம். ஈர்ப்பை அதிகரிக்க தோல் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - ஞாயிறு
அதிர்ஷ்ட எண் - 7 மற்றும் 1

தானம் - பிச்சைக்காரர்களுக்கு மஞ்சள் பழங்களை தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் உங்கள் ஆவணங்களில் கவனமாக இருக்க வேண்டும், யாரோ ஒருவர் தீங்கு விளைவிப்பார்கள். வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்க சொந்த பிரச்சினைகளை புறக்கணித்து விட்டு, தொழில் விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் கனவு கண்டு வந்த காதல் உணர்வு ததும்பும் தினமாக இன்று இருக்கும். வியாபாரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் சுமுகமாக நிறைவேறும். பெரிய நிறுவனத்துடன் கூட்டு சேரும் நேரம். எதிர்காலத் திட்டங்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும், அரசியல்வாதிகள் ஆவணங்களில் கையெழுத்திடும் போது கவனமாக இருக்க வேண்டும்

அதிர்ஷ்டமான நிறம்: ஸ்கை ப்ளூ மற்றும் மஞ்சள்
அதிர்ஷ்டமான நாள்: திங்கள்
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6

தானம்: கோவில் அல்லது ஏழைகளுக்கு எண்ணெய் தானம் செய்யுங்கள்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் ஆன்மீகம் மற்றும் தியானத்தின் மூலம் உங்கள் 6வது அறிவின் சக்தியை அறிவூட்ட வேண்டும், அது உங்களுக்கு வளர்ச்சிக்கான பாதையைக் காண்பிக்கும். இன்று மேடையில் உங்கள் இருப்பு வசீகரமாக இருக்கும். நாடகக் கலைஞர்களுக்கு பணியிடத்தில் புதிய தொடக்கம் காத்திருக்கிறது. உங்கள் வழியில் புதிய உறவு வந்து சேரும். பொது பிரமுகர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். இசையமைப்பாளர்கள், வடிவமைப்பாளர்கள், மாணவர்கள், செய்தி தொகுப்பாளர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், கலைஞர்கள், இல்லத்தரசிகள், ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஆகியோருக்கு தொழில் வளர்ச்சி தொடர்பாக சிறப்பான அறிவிப்புகள் காத்திருக்கிறது.

அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு
அதிர்ஷ்டமான நாள் வியாழன்
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 1

தானம்: குழந்தைகளுக்கு மஞ்சள் நிற கவர்களை தானம் கொடுங்கள்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பண வரவு அதிகரிக்க கூடும், எனவே எதிர்காலத்தில் நல்ல பலன் கொடுக்கக் கூடிய முதலீடுகளை செய்யுங்கள். பச்சை மற்றும் சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். கட்டுமானம், இயந்திரங்கள், உலோகங்கள், மென்பொருள் மற்றும் தரகர்கள் போன்ற வணிகங்கள் இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதைத் தவிர்க்க வேண்டும். தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு சிறப்பான நாள். இன்று நீங்கள் பெருமைமிக்கப் பெற்றோராக உணருவீர்கள்.

அதிர்ஷ்டமான நிறம்: நீலம்
அதிர்ஷ்டமான நாள்; செவ்வாய்
அதிர்ஷ்ட எண்: 9

தானம்: ஏழைகளுக்கு எலுமிச்சை பழங்களை தானம் செய்யுங்கள்.

#எண் 5 (நீங்கள் 5,14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்கள் வார்த்தைகளால் கவரப்பட்டு, முதலாளி அல்லது சீனியர் நபரிடம் இருந்து பாராட்டுக்கள் கிடைக்கக்கூடும். வெகுமதிகள் மற்றும் உங்கள் செயல்திறனுக்கு அங்கீகாரம் கிடைக்கும் நாள். விளையாட்டு வீரர் மற்றும் பயணிகளுக்கு சிறந்த பலன் கிடைக்கும். கூட்டங்களில் அதிர்ஷ்டத்தை அதிகரிக்க பச்சை நிறத்தை அணியுங்கள். உங்கள் காதலை முன்மொழிய செல்ல வேண்டும், ஏனெனில் வாழ்க்கை இன்று உங்களுக்கு அற்புதமான பரிசுகளுடன் காத்திருக்கிறது. கிளாமர் துறையில் பணியாற்றுபவர்களுக்கு அனைத்து மூலையில் இருந்தும் வாய்ப்புகள் குவியும்.

அதிர்ஷ்டமான நிறம்: கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள்: புதன்
அதிர்ஷ்ட எண் : 5

தானம்: வெள்ளை மாவை ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்கள் மனதில் காதல் மற்றும் வாக்குறுதிகள் பற்றிய உணர்வுகள் ஆதிக்கம் செலுத்தலாம், ஆனால் ஏமாற்றம் மற்றும் அவநம்பிக்கை தொடர்பாகவும் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.
வியாபாரம் மற்றும் வேலையில் வளர்ச்சி அழகாக இருக்கும் ஆனால் தனிப்பட்ட பிரச்சினைகள் இன்று மிகவும் சிக்கலானதாக இருக்கும், எனவே வாக்குவாதங்களில் இருந்து விலகி இருப்பது சிறந்தது. எல்லா பொறுப்புகளையும் உங்கள் தோளில் ஏற்றிக்கொள்ளாதீர்கள், ஏனெனில் உங்களது மனநிலை அவற்றை மகிழ்ச்சியாக செய்ய விடாது. ஹோட்டல் வியாபாரிகள், பயணிகள், நகைக்கடைக்காரர்கள், நடிகர்கள், ஜாக்கிகள் மற்றும் மருத்துவர்களுக்கு அதிர்ஷ்டமாக மாறும் போது தங்கள் திறமைகளை வெளிப்படுத்துங்கள். எதிர்காலத்தை மேம்படுத்த விளையாட்டு வீரர்கள் பயிற்சியாளர்களின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும்.

அதிர்ஷ்டத்திற்கான நிறம்: நீலம்
அதிர்ஷ்டமான நாள்: வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 6

தானம்: வெள்ளி நாணயங்களை தானம் கொடுங்கள்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வழக்கறிஞர்கள், மென்பொருள் பொறியாளர்கள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சிஏக்கள் ஆகியோருக்கு ஒரு சிறந்த நாள். உங்கள் ஆளுமை மற்றும் பகுப்பாய்வு திறன் ஆகியவை உங்களுக்கான சிறப்பான சொத்து. பண முடிவுகளில் அறிவு மற்றும் ஞானத்தைப் பயன்படுத்துவது நல்லது. உங்கள் இமேஜை டெமேஜ் செய்யும் சர்ச்சைகளை எதிர்கொள்வதை தவிர்க்கவும். உங்கள் நேர்மைக்கு ஈடாக அன்பு, உறவு, நம்பிக்கையையும் மரியாதையையும் கிடைக்கும். ஆவணங்களை நம்ப வேண்டாம். நீதிமன்றங்கள், திரையரங்குகள், தொழில்நுட்பம், அரசு டெண்டர்கள், ரியல் எஸ்டேட், பள்ளிகள், உள்துறை, தானியங்கள் ஆகியவற்றில் பணிபுரிபவர்களுக்கு இது ஒரு சிறந்த நாள். நீங்கள் பங்குதாரர்களுடன் இணைந்து தொழில் தொடங்கவில்லை என்றால், வணிக உறவுகள் ஆரோக்கியமாக இருக்கும்.

அதிர்ஷ்டத்திற்கான நிறம்: ஆரஞ்சு மற்றும் நீலம்
அதிர்ஷ்டமான நாள்: திங்கள்
அதிர்ஷ்ட எண்: 7

தானம் : மஞ்சள் துணியை தானம் செய்யுங்கள்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அன்றாடப் பணிகளில் சிக்கல்களைத் தீர்ப்பதில் மும்முரமாக இருப்பீர்கள். குறுகிய கால இலக்கு அடையப்படும், ஆனால் நீண்ட கால இலக்குகளை மறுவடிவமைப்பு செய்ய வேண்டும். ஆரோக்கியத்தைக் கவனித்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டிய நேரம். வணிகத்தில் பரிவர்த்தனைகள் வெற்றிகரமாக இருக்கும், ஆனால் மதிய உணவிற்கு முன் இருக்கும். குடும்ப செயல்பாடுகள், விளக்கக்காட்சிகள், அரசாங்க ஒப்பந்தங்கள் அல்லது நேர்காணல்களில் கலந்து கொள்ள வேண்டும். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது இன்றைக்கு அவசியம். தயவு செய்து லாங் டிரைவ்களை தவிர்க்கவும். மத்தியஸ்த சக்தியை அதிகரிக்கவும், காதல் உறவுகளை வலுப்படுத்தவும் சிறப்பான நேரம்.

அதிர்ஷ்டத்திற்கான நிறம்: கடல் நீலம்
அதிர்ஷ்டமான நாள்: வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 6

தானம்: கால்நடைகளுக்கு பச்சை தானியங்களை தானம் செய்யுங்கள்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

புகழ் என்பது எப்போதும் உங்கள் வேலை மற்றும் ஆளுமையின் ஒரு பகுதியாகும், எனவே எப்போதும் இனிமையாக இருக்க முயற்சியுங்கள். ஊடகம், விளையாட்டு, கட்டுமானம், மருத்துவம், அரசியல் மற்றும் கவர்ச்சி துறையைச் சேர்ந்தவர்கள் புதிய உயரங்களைக் காண்பார்கள். சாதனைகள் மற்றும் பண வரவுகள் நிறைந்த நாள். கல்வி அல்லது படைப்புக் கலையில் சிறந்து விளங்குவதற்காக. வணிகம் அல்லது வேலையை மேம்படுத்த குடும்ப தொடர்புகளை அணுக ஒரு சிறந்த பதிலுக்காக காத்திருக்கும் ஒரு அழகான நாள். . நாளை தொடங்க சிவப்பு நிற ஆடை அணிய வேண்டும்

அதிர்ஷ்டத்திற்கான நிறம்: சிவப்பு
அதிர்ஷ்டமான நாள்: செவ்வாய்
அதிர்ஷ்ட எண்: 9 மற்றும் 6

தானம்: தயவு செய்து பெண்களுக்கு ஆரஞ்சு நிற துணியை தானம் செய்யுங்கள்

ஜூன் 16 அன்று பிறந்த பிரபலங்கள்: மிதுன் சக்ரவர்த்தி, கோவிந்த் பத்மசூர்யா, அமல் மாலிக், இம்தியாஸ் அலி, ஷீனா பஜாஜ்
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி