ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக பலன்: இன்று இந்த ராசியினருக்கு பாராட்டுகள் குவியும்... (மே 07, 2022)

தெய்வீக பலன்: இன்று இந்த ராசியினருக்கு பாராட்டுகள் குவியும்... (மே 07, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | தொலைதூரத்திலோ அல்லது வெளிநாட்டிலோ இருந்து வரும் அழைப்பு உங்கள் நாளை மகிழ்ச்சியானதாக மாற்றும்...

மேஷம்

இன்று உங்களுக்கு பாராட்டுக்கள் வரலாம். வேலை வாழ்க்கையை சமநிலையை உருவாக்குவது பற்றி சிந்திப்பீர்கள். யாராவது உங்களை குறை கூறினால் புறக்கணிக்கவும். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி சூழ்நிலை உண்டாகும். தனிமையில் கடந்த கால அனுபவங்களை நினைத்து மகிழ்வீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கருப்பு நிறம்

ரிஷபம்

இந்த மாதத்தின் பிற்பகுதியில் பயணம் செல்ல இன்று திட்ட மிடுவீர்கள். ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தை திட்டமிட்டு தீர்க்க வேண்டிய நாள் இன்று. எதிர்பாராத நல்ல செய்தி உங்களுக்கு கிடைக்கும். அதுகுறித்து குடும்பத்துடன் பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள். தடைபட்ட பணவரவு மேம்படும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மஞ்சள் துணி

மிதுனம் :

ஆற்றல்கள் உங்கள் நோக்கத்துடன் முழுமையாக இணைந்திருப்பதால், இன்றைய நாளை பயன்படுத்தி கொள்ளுங்கள். உறவினர் ஒருவர் பண உதவி கேட்டு வரலாம் . நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களுக்கு நெருக்கமான ஒருவர் மாலையில் திடீர் வருகை புரிவார். உங்கள் உடன்பிறந்தவர் உங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் பொறுமையாக இருங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மரகதம்

கடகம் :

இன்று ஷாப்பிங் சென்று வருவீர்கள் . நீண்ட நாள் பிரச்சனை இன்று முடிவிற்கு வரும். இன்று சிந்தனை முதன்மையாக இருக்கும். சமூக அந்தஸ்து முக்கியமானதாக இருக்கலாம், எனவே நீங்கள் அதை நோக்கி செயல்படலாம். எனினும் வழக்கமான வேலைகளில் தடைகள் உருவாகலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - செப்பு பாத்திரம்

சிம்மம் :

இன்று குழுவாக வேலை செய்வது நல்லது. இன்று உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். எனவே முழு உற்சாகத்துடன் இருப்பீர்கள். உங்கள் பணியிடத்தில் சில போட்டிகளை சந்திக்க நேரிடலாம். வேலையில் சூடான வாக்குவாதம் உங்கள் நாளை பாதிக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கிரிஸ்டல்

கன்னி

உங்கள் தினசரி பணிகளை முடிப்பதில் கவனம் செலுத்துங்கள். ஏனெனில் அவற்றை சரியான நேரத்தில் முடிக்க முடியாமல் நீங்கள் விரக்தியடையலாம். குறுகிய கால திட்டமிடல் தற்போதைய காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். இன்று விருந்தினர்களை வரவேற்க தயாராக இருங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ரோஜா பூ

துலாம் :

ஒரு நல்ல பயிற்சி உங்களுக்கு தேவையான ஆற்றலை திரும்ப பெற்று தரும். கடந்த காலத்தில் உங்களுக்கு நீங்கள் செய்த வாக்குறுதிகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். குடும்பத்துடன் நேரம் செலவிட இன்று ஒரு நல்ல நாள். உங்கள் உடன்பிறந்தவர்கள் சில குடும்ப பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே இன்று விட்டுக்கொடுத்து போவது நல்லது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மஞ்சள் கல்

விருச்சிகம்

இன்று உற்சாகமாக இருப்பீர்கள். இன்று உங்களுக்கு ஒரு அதிர்ஷ்டமான நாள். நீங்கள் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்கிறீர்கள் என்றால், நீங்கள் சமீபத்தில் இழந்ததை இன்று பெறலாம். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மர பெட்டி

தனுசு :

தொலைதூரத்திலோ அல்லது வெளிநாட்டிலோ இருந்து வரும் அழைப்பு உங்கள் நாளை மகிழ்ச்சியானதாக மாற்றும். ஒரு வெளியூர் திட்டம் இன்று நிறைவேறும். இன்று உங்கள் வாழ்க்கை துணையுடன் இருந்த மனகசப்புகள் நீங்கும். கணவன் - மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நீல கல்

மகரம்

சில புதிய சுகாதார நடைமுறைகளை தொடங்க இது ஒரு நல்ல நாள். ஒரு புத்தகம் அல்லது கட்டுரை அவ்வாறு செய்ய உத்வேகம் அளிக்கும். தொலைந்து போனதாக நீங்கள் கருதும் ஒன்று இன்று கிடைக்கலாம். தொழிலில் எதிர்பாராத திடீர் விரயங்கள் உண்டாகும். பணத்தை பத்திரப்படுத்தவும்

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கோபுரம்

கும்பம்

இன்று நீங்கள் என்ன செய்தாலும் கவனமாக இருக்க வேண்டும். புதிய திசையை நோக்கி இப்போது எடுக்கும் சிறிய முயற்சிகள் பலனளிக்கும். வேலை வாய்ப்புக்காக உங்கள் உடன்பிறந்தவர்கள் உங்களை ஆலோசிக்கலாம். பெண்களுக்கு சந்தோஷமான நாளாக அமையும். இன்றைய நாள் கலவையான பலன்களைக் கொண்டுள்ளது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பசு

மீனம்:

வெளிநாட்டவரின் ஒரு நல்ல ஆலோசனையானது பொன்னான நேரத்தை மிச்சப்படுத்தும். நீங்கள் இப்போது நம்பிக்கையுடனும், நிலுவையில் உள்ள முடிவை எடுப்பதில் உறுதியாகவும் இருப்பீர்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இன்று நேரம் செலவிடுவீர்கள். அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக அமைந்துள்ளது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வைரம்

First published:

Tags: Oracle Speaks