முகப்பு /செய்தி /ஆன்மிகம் / இன்று தை மாத பிரதோஷம்.. பிரதோஷநாதா சிவநாதா... நலன்கள் தரும் பிரதோஷ பாடல்கள்!

இன்று தை மாத பிரதோஷம்.. பிரதோஷநாதா சிவநாதா... நலன்கள் தரும் பிரதோஷ பாடல்கள்!

சிவ பெருமானின் 7 கர்மா விதிகள்

சிவ பெருமானின் 7 கர்மா விதிகள்

Pradosham | ஒவ்வொரு கிழமைகளில் வருகின்ற பிரதோஷத்துக்கு ஒவ்வொருவிதமான பலன்கள் உண்டு. அப்போது பிரதோஷ நாளில், பிரதோஷ வேளையில் சிவனை தரிசிப்பதால் ஒவ்வொருவிதமான பலன்கள் கிடைக்கும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சிவனாருக்கு உரிய திதியாக திரயோதசி திதி போற்றி வணங்கப்படுகிறது. திரயோதசி திதி என்பது அமாவாசைக்கு முந்தைய மூன்றாவது நாளிலும் பெளர்ணமிக்கு முந்தைய மூன்றாவது நாளிலும் வரும். இந்த திரயோதசி திதியில் பிரதோஷ வழிபாடுகளும் பூஜைகளும் நடைபெறும். மாதந்தோறும் இரண்டு பிரதோஷ நாட்கள் உண்டு. அந்த வகையில் இன்று தை மாத வளர்பிறை பிரதோஷம் ஆகும். இந்த நாளில் சிவனை வணங்கினால் பலவிதமான நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம்...

மேலும் இந்த தை பிரதோஷம் விரதத்தை பெண்கள் மட்டும் அல்லாமல் ஆண்களும் அனுஷ்டிக்கலாம். திருமணமாகாதவர்கள் நல்ல வாழ்க்கை துணை வேண்டியும், திருமணமானவர்கள் கணவன் நோயில்லாமல் நீண்ட காலம் வாழவும் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கலாம். கணவன், மனைவி இருவருமாக இந்த விரதத்தை மேற்கொண்டு வந்தால் வாழ்வில் அனைத்து வளங்களும் கிட்டும். விரதமிருப்பவர்கள் மாலை வேளையில் சிவாலயத்திற்குச் சென்று வழிபடலாம்.

' isDesktop="true" id="884270" youtubeid="hO-EEC6Bxcw" category="spiritual">

அதுபோல இன்று சிவனுடைய பிரதோஷ சிறப்பு பாடல்களை  பாடினாலும் கேட்டாலும் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

First published:

Tags: Sivan, Thai Month