• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • Pournami: ஒவ்வொரு பெளர்ணமி கிழமைக்கும் ஒரு சிறப்பு உண்டு... என்ன தெரியுமா?

Pournami: ஒவ்வொரு பெளர்ணமி கிழமைக்கும் ஒரு சிறப்பு உண்டு... என்ன தெரியுமா?

பெளர்ணமி

பெளர்ணமி

ஒவ்வொரு பெளர்ணமி கிழமைகளுக்கும் ஒவ்வொரு சிறப்பான அம்சங்கள் உள்ளன. ஞாயிறு முதல் சனிக்கிழமை வரை ஒவ்வொரு கிழமைகளும் பௌர்ணமி வரும் நாளில் சிறப்பான பலன்கள் உண்டு. அந்த நாள்களில் யார் யார் என்ன செய்யலாம்? என்பதை பற்றி தெரிந்துக்கொள்ளலாம் வாங்க... 

  • Share this:
    ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி தினம் வரும். முழு பிரகாசத்துடன் ஒளி வீசும் சந்திர பகவானை தரிப்பதன் மூலமும், அவருக்கு ஒளி தரக்கூடிய சூரியனை வழிபட்டும் அருள் பெறலாம். இந்த பெளர்ணமி ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கிழமைகளில் வரும். அந்த கிழமைகளுக்கு என்று தனி சிறப்பும் பரிகாரங்களும் உள்ளன...

    ஞாயிற்றுக்கிழமை

    ஞாயிற்றுக்கிழமை அன்று பெளர்ணமி வந்தால் அது சூரியனுக்கு ஏற்றதாகும். சூரிய தோஷம் உள்ளவர்களுக்கு, சூரியனால் பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க இந்த பரிகாரத்தை செய்யலாம். மேலும் உத்திரம், உத்திராடம், கிருத்திகை நட்சத்திரக்காரர்கள், சிம்ம ராசிக்காரர்கள் தீராத நோய்கள் தீர துர்க்கை அம்மனுக்கு சிகப்பு நிற வஸ்திரம் சாற்றி செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்ய வாழ்வில் யோகம் உண்டாகும். சகல பிரச்சனைகளும் தீரும் என்பது ஐதீகம்.

    திங்கட்கிழமை

    திங்கட்கிழமை அன்று வரும் பௌர்ணமி நன்னாளில் சந்திர தசை உள்ளவர்கள், கடக ராசிக்காரர்கள், திருவோணம், அஸ்தம், ரோகிணி நட்சத்திரக்காரர்கள் ஆகியோர் துர்க்கை அம்மனுக்கு வெள்ளை நிற அல்லது ஆரஞ்சு நிற வஸ்திரம் சாற்றி மல்லிகை பூவால் அர்ச்சனை செய்து வந்தால் சங்கடங்கள் தீர்ந்து சுபகாரியங்கள் கைகூடும். வெளிநாடு செல்வதில் தடை இருந்தால் தீரும். வாழ்வில் சகல செல்வ வளங்களும் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

    செவ்வாய்

    செவ்வாயன்று வரும் பௌர்ணமி முருகப் பெருமானுக்கு மற்றும் அங்காரகனுக்கு உகந்த தினமாகும். எனவே இந்த நாளில் மிருகசீரிஷம், அவிட்டம், சித்திரை நட்சத்திரக்காரர்கள், மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள், செவ்வாய் தோஷம், செவ்வாய் திசை நடப்பவர்கள் துர்க்கை அம்மனுக்கு சிகப்பு வர்ண வஸ்திரம் சாற்றி, செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்ய அத்தனை எதிர்ப்புகளும் நீங்கும். செல்வ வளம் பெருகும். குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும்.

    புதன்கிழமை

    புதன்கிழமை அன்று வரும் பௌர்ணமி நாளில் புதன் திசை நடப்பவர்கள், புதன் பகவான் வழிபாடு செய்ய நன்மைகள் நடக்கும். மேலும் மிதுனம், கன்னி ராசிக்காரர்கள், ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரக்காரர்கள் ஆகியோர் சிறந்த அறிவாற்றல் மற்றும் ஞாபகத்திறன் பெறவும், உறவுகள் பலப்படவும் துர்க்கை அம்மனுக்கு இந்த தினத்தில் பச்சை நிற வஸ்திரம் சாற்றி முல்லை, மல்லிகை, மரிக்கொழுந்து ஆகிய மலர்களால் அர்ச்சனை செய்ய சகல யோகங்களும் வாழ்வில் பெறுவார்கள்

    வியாழக்கிழமை

    வியாழக்கிழமை அன்று வரும் பௌர்ணமி நாளில் குரு பகவானை வணங்க தன்னம்பிக்கையும், அறிவாற்றலும் பெருகும். குருவை வணங்குவதற்கு மிகச் சிறந்த நாளாக இந்நாள் இருக்கும். இந்த நாளில் குரு திசை நடப்பவர்கள், தனுசு மற்றும் மீன ராசிக்காரர்கள் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரகாரர்கள், துர்க்கை அம்மனுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி, மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை செய்து, தயிர் சாதம் மற்றும் மஞ்சள் நிற பழங்கள் நிவேதனம் வைத்து வழிபட சகல வளங்களும் பெறுவார்கள்.

    மேலும் படிக்க... பிரிந்த தம்பதியரை ஒன்று சேர்க்கும் உமா மகேஸ்வர விரதம்...

    புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது தெரியுமா?

    வெள்ளிக்கிழமை

    வெள்ளிக்கிழமை அன்று வரும் பௌர்ணமி நன்னாளில் சுக்ரனுக்கு உகந்த தினமாக பார்க்கப்படுவதால் களத்திர தோஷம் இருப்பவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், சுக்கிர தசை நடப்பவர்கள், ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் மற்றும் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரகாரர்கள், 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் துர்க்கை அம்மனுக்கு வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி, கதம்ப மாலை அணிவித்து, மல்லிகை பூவால் அர்ச்சனை செய்து, பழங்களை நிவேதனம் வைத்து வழிபட பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். தடைபட்ட வீடு கட்டும் பணிகள் சிறப்பாக நடைபெறும். வாழ்வில் சகல வளங்களும் பெறுவார்கள்.

    சனிக்கிழமை

    சனிக்கிழமை அன்று வரும் பௌர்ணமி நன்னாளில் சனீஸ்வரரை வணங்குவதற்கு ஏற்ற தினமாக உள்ளது. சனியும், பௌர்ணமியும் இணைந்தால் சனியால் ஏற்படும் அத்தனை பாதிப்புகளும் நீங்கும். சனி தசை நடப்பவர்கள், பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள், மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் துர்க்கை அம்மனுக்கு நீல நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற மலர்களால் அர்ச்சனை செய்தால் தீராத ஆரோக்கிய பிரச்சனைகள் விரைவாக தீர்ந்துவிடும். மனதில் உற்சாகம் பிறக்கும். நவக்ரஹ தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம்.

    மேலும் படிக்க...பெளர்ணமி தினத்தின் சிறப்புகள் என்ன? 12 மாதத்திலும் வரும் பெளர்ணமியின் முக்கியத்துவம் என்ன?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: