பொன்னேரி ஸ்ரீகரிகிருஷ்ண பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா...
பொன்னேரி ஸ்ரீகரிகிருஷ்ண பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா...
பொன்னேரி
Tiruvallur Kari Krishna Perumal Temple | பொன்னேரி ஸ்ரீகரிகிருஷ்ண பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவத்தின் தெப்ப உற்சவ திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு கரிகிருஷ்ணபெருமாள் கோவிலில் நடைபெற்ற சித்திரை பிரம்மோற்சவ தெப்ப திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமிதரிசனம் செய்தனர்.
பொன்னேரியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு சௌந்தரவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ணபெருமாள் திருக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் கடந்த 16 ஆம் தேதி துவங்கியது . முக்கிய விழாவான தெப்ப உற்சவமும் இன்று நடைபெற்றது வண்ண விளக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் கரிகிருஷ்ணபெருமாள் ஸ்ரீதேவிபூதேவியுடன் அமர்ந்தவாறு திருக்குளத்தில் மூன்று சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் வழங்கினார்.
இதில் கும்மிடிபூண்டி, மாதவரம், செங்குன்றம், மீஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளாக பக்தர்கள் பங்கேற்று பெருமாளை தரிசனம் செய்தனர்.
செய்தியாளார் : பார்த்தசாரதி
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.