ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

மாட்டுப்பொங்கல் வழிபாடு.. நல்ல நேரம், கோபூஜை குறித்த தகவல்கள்..!

மாட்டுப்பொங்கல் வழிபாடு.. நல்ல நேரம், கோபூஜை குறித்த தகவல்கள்..!

மாட்டுப்பொங்கல்

மாட்டுப்பொங்கல்

Mattu pongal 2023 | வீட்டுப் பொங்கலுக்கு மறுநாள், மாட்டுப்பொங்கல் வைத்துக் கொண்டாட வேண்டும். அன்றைய தினம் பொங்கல் வைத்து கோ பூஜை செய்து வழிபட உகந்த நேரம் எதுவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மாட்டுப்பொங்கல் அன்று, காலை வேளையில் சிவாலயங்களுக்குச் சென்று நந்தி வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். அங்கு உணவு மாலை, பண மாலை, பூ மாலை, சந்தன மாலை, ஏலக்காய் மாலை, வெற்றிலை மாலை, வடை மாலை, பழ மாலை என எல்லா விதமான மாலைகளையும் சூட்டி நந்தியை அலங்கரித்து வைத்திருப்பர். அவரை அந்த நேரத்தில் தரிசிப்பது மிகவும் நல்லது. அப்போது நந்தி பதிகம் பாடினால் நன்மைகள் பல கிடைக்கும். வளம்சேரும் என்பது நம்பிக்கை.

வீட்டுப் பொங்கலுக்கு மறுநாள், மாட்டுப்பொங்கல் வைத்துக் கொண்டாட வேண்டும். 16.1.2020 (திங்கள்) அன்று மாட்டுப்பொங்கல் வருகிறது. அன்று காலை 06:30 - 07.30 ,காலை 09:30 - 10.30 அல்லது மாலை 04.30 முதல் 05.30 வரை மணிக்குள் பொங்கல் வைத்து      கோ பூஜை செய்து வழிபட உகந்த நேரமாகும். மாடுகளுக்கு கண்டிப்பாக பொங்கல் நைவேத்தியம் வழங்க வேண்டும். இதன் மூலம் லட்சுமி கடாட்சம் பெருகும்.

பொங்கல் வைக்க நல்ல நேரம் 

ஜனவரி 15ஆம் தேதி (தை மாத 01ஆம் தேதி)

பொங்கல் வைக்க நல்ல நேரம்

காலை 07.30 முதல் 08.30 வரை

பகல் 1.30 முதல் 02.30 வரையிலும்

மாலை 03.30 முதல் 04.30 வரையிலும் பொங்கல் வைக்கலாம்.

மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம்

ஜனவரி 16ஆம் தேதி ( தை 02ஆம் தேதி)

காலை 06.30 முதல் 07.30 வரை,

காலை 09:30 - 10.30

மாலை 04.30 முதல் 05.30 வரை

உழவுத் தொழிலுக்கு உதவிய மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தை இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நாளன்று மாடுகள் குளிப்பாட்டப்பட்டு சந்தனம், குங்குமம் இட்டு மாலைகள் மற்றும் சலங்கைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு தெய்வமாக வணங்கப்படுகிறது.

First published:

Tags: Pongal 2023, Pongal festival