மூத்திரம்(கோமியம்), பால், தயிர், வெண்ணெய் ஆகிய ஐந்தும் புனிதமானவை. இவற்றை குறிப்பிட்ட அளவில் கலந்து சிவபெருமானுக்கு செய்யும் அபிஷேகமே பஞ்சகவ்ய அபிஷேகம் எனப்படுகிறது.
இப்பசுக்களில் மும்மூர்த்திகள், சத்தியம், தர்மம் என்று எல்லா தேவதைகளும் வசிக்கின்றனர். செல்வவளம் தரும் திருமகள் இதன் பிருஷ்டபாகத்தில்(பின்பாகம்) வசிக்கிறாள். இப்பகுதியை தொட்டு வழிபட்டால் முன்ஜென்ம பாவங்கள் விலகும். காலையில் எழுந்ததும் பசுவைத் தொழுவத்தில் காண்பது சுபசகுனம் . தெருக்களில் கூட்டமாகப் பார்த்தால் இன்னும் விசேஷம். பாற்கடலில் பிறந்த ஐந்து பசுக்களும் கோலோகம் என்னும் பசுவுலகில் இருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம். பசுவைத் தெய்வமாக வழிபட்டால் கோலோகத்தை அடையும் பாக்கியம் உண்டாகும்.
கோமாதாவின் உடற் பகுதியும் அங்கே அருளும் தெய்வங்களும்
1. முகம் மத்தியில் சிவன்
2. வலக் கண் சூரியன்
3. இடக் கண் சந்திரன்
4. மூக்கு வலப்புறம் முருகன்
5. மூக்கு இடப்புறம் கணேசர்
6. காதுகள் அஸ்வினி குமாரர்
7. கழுத்து மேல்புறம் ராகு
8. கழுத்து கீழ்புறம் கேது
9. கொண்டைப்பகுதி ப்ரும்மா
10. முன்கால்கள் மேல்புறம் சரஸ்வதி, விஷ்ணு
11. முன்வலக்கால் பைரவர்
12. முன் இடக்கால் ஹனுமார்
13. பின்னங்கால்கள் ப்ராசரர், விஷ்வாமித்திரர்
14. பின்னகால் மேல்பகுதி நாரதர், வசிஷ்டர்
15. பிட்டம் - கீழ்ப்புறம் கங்கை
16. பிட்டம் - மேல்புறம் லக்ஷ்மி
17. முதுகுப்புறம் பரத்வாஜர், குபேரர் வருணன், அக்னி
18. வயிற்றுப்பகுதி ஜனககுமாரர்கள் பூமாதேவி
19. வால் மேல் பகுதி நாகராஜர்
20. வால் கீழ்ப்பகுதி ஸ்ரீமானார்
21. வலக்கொம்பு வீமன்
22. இடக்கொம்பு இந்திரன்
23. முன்வலக்குளம்பு விந்தியமலை
24. முன்இடக்குளம்பு இமயமலை
25. பின் வலக்குளம்பு மந்திரமலை
26. பின் இடக்குளம்பு த்ரோணமலை
27. பால்மடி அமுதக்கடல்
மேலும் படிக்க...
பசுவிற்கு உண்ண என்னென்ன தரலாம்?
ஒரு கட்டு அகத்திக்கீரை கொடுத்தால் பலருக்கு அன்னதானம் செய்த பலன் கிட்டும், கன்றோடு இருக்கும் பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்தால் தங்கம் தானம் செய்த பலன் கிடைக்கும். மஞ்சள் வாழைப்பழங்களை பசுவிற்கு கொடுத்தால் ரிஷிகளுக்கு பழ வகைளை சமர்ப்பித்த பலன் கிடைக்கும். அறுகம் புல்லை அளித்தால் நோய்களையும் பாவங்களையும் போக்கி நற்பலனை கொடுக்கும்.
இவை அனைத்தையும் விட நல்ல உணவுகளைச் சமைத்து அதனை தலை வாழையிலையில் வைத்து அப்படியே பசுவிற்கு உண்ணக் கொடுத்தால் ஏழு தலைமுறை பித்ரு தோஷமும் நீங்கி குடும்பம் செழிக்கும். கடன் தொல்லை, தீராத வியாதி, கணவன் - மனைவி ஒற்றுமையின்மை ஆகியவை நீங்கிவிடும்.
மேலும் படிக்க... Pongal 2022 | மாட்டு பொங்கலின் சிறப்புகள்...
பசு வழிபாடு
பசு வழிபாடு இரண்டு வகைப்படும்.
1. பசு மாடுகளை சந்தன குங்குமம் போன்றவற்றால் அலங்கரித்து, எல்லா மந்திரங்களும் கூறி, மலர்களால் அர்ச்சித்து, தூப, தீப, நிவேதனங்களால் ஆராதிப்பது ஒரு முறை.ஈசனை விக்ரஹங்கள் வைத்து விரிவாக வழிபட முடியாதவர் இறைவனின் படத்தை மட்டும் வைத்து வழிபடுவது போல, வீட்டில், கோமாதாவின் படத்தை மட்டும் வைத்து வழிபாடு செய்வது.
2. பசுவைத் திருநாமங்கள் கூறி வழிபடா விட்டாலும், வீட்டுப்பசுவுக்கு மட்டுமின்றி பசு இனத்துக்கே உதவுவதாக அவற்றின் நலனைப் பாதுகாத்துப் பராமரிப்பதும் பசுவழிபாடே. இரண்டாம் வகை பராமரிப்பு வழிபாடு இருந்தால் தான் முதல் வகை பூஜை வழிபாடு நடக்க முடியும்.
கோமாதாவில் முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம். அதன் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். எனவே, கோமாதா பூஜை செய்யும் போது, பசுவை முன்புறமாக தரிசிப்பதைவிட, பின்புறம் தரிசனம் செய்வது மிகவும் நன்மை தரும்.
பசுவை வணங்கும்போது முன்நெற்றி மற்றும் வால் பகுதியில் சந்தனம், குங்குமம் வைத்து, மலர் அணிவித்து வழிபட வேண்டும்.பசுவின் சாணமும் லட்சுமி அம்சமாகும். எனவேதான், அதிகாலையில் சாணத்தை வீட்டு வாசலில் தெளிக்கிறார்கள்.பசுவுக்கு பூஜை செய்வது பராசக்திக்கு பூஜை செய்வதற்குச் சமமாகும்.
மேலும் படிக்க... Pongal 2022 | மாட்டுப்பொங்கல் எப்படி கொண்டாட வேண்டும்
வழிபடும் முறை
முதலில் பசுவை அழைத்துவர வேண்டும். அதன் மீது பன்னீர் தெளித்து மஞ்சள், குங்குமம் பொட்டு அதன் நெற்றியில் வைக்க வேண்டும். பசுவின் கழுத்தில் மாலை அணிவிக்க வேண்டும்.பிறகு பசுவிற்கு புடவை அல்லது ரவிக்கை சாற்றி, அகத்திக்கீரை, சர்க்கரைப் பொங்கல், பழ வகைகள் போன்றவற்றை ஆகாரமாகத் தர வேண்டும். நெய்விளக்கில் பசுவிற்கு ஆரத்தி எடுக்க வேண்டும்.அதன்பின்னர் ,விழுந்து வணங்க வேண்டும்.
கோபூஜையை செய்வதால் கிடைக்கும் பலன்
கோபூஜையை செய்வதால் பணக்கஷ்டம் நீங்கிவிடும். குழந்தைபாக்கியம் உண்டாகும்.கெட்ட சக்திகள் நெருங்காது. முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கிவிடும் நீண்ட கால மனக்குறைகள் நீங்கிவிடும். கோமாதா பூஜையைச் செய்ய பக்தியும், நம்பிக்கையும் முக்கியமாகும்.
மேலும் படிக்க... Pongal 2022 |மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம், காலம் குறித்த தகவல்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pongal, Pongal festival