ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

Mattu Pongal 2022 | மாட்டுப்பொங்கல் எப்படி கொண்டாட வேண்டும் தெரியுமா?

Mattu Pongal 2022 | மாட்டுப்பொங்கல் எப்படி கொண்டாட வேண்டும் தெரியுமா?

Mattu Pongal 2022 | மாட்டுக் கொட்டகையை நன்றாக சுத்தம் செய்து வண்ண வண்ண கோலமிட்டு மாடுகளை மஞ்சள் குங்குமம் வைத்து அழகாக அலங்கரித்து பொங்கல் வைத்து, கோ பூஜை செய்வது நன்மை தரும்.

Mattu Pongal 2022 | மாட்டுக் கொட்டகையை நன்றாக சுத்தம் செய்து வண்ண வண்ண கோலமிட்டு மாடுகளை மஞ்சள் குங்குமம் வைத்து அழகாக அலங்கரித்து பொங்கல் வைத்து, கோ பூஜை செய்வது நன்மை தரும்.

Mattu Pongal 2022 | மாட்டுக் கொட்டகையை நன்றாக சுத்தம் செய்து வண்ண வண்ண கோலமிட்டு மாடுகளை மஞ்சள் குங்குமம் வைத்து அழகாக அலங்கரித்து பொங்கல் வைத்து, கோ பூஜை செய்வது நன்மை தரும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.

இன்று ஜனவரி 14 வெள்ளிக்கிழமை தைப்பொங்கல் என்கிற சூரிய பொங்கலை கோலாகலமாக கொண்டாடி வருகிறோம். இதனை தொடர்ந்து நாளை ஜனவரி 15 சனிக்கிழமை மாட்டு பொங்கலும், ஜனவரி 16 ஞாயிற்றுகிழமை காணும் பொங்கலும் கொண்டாடப்பட உள்ளது. தமிழர்களுக்கு மிக முக்கிய பண்டிகையாக இருந்து வரும் பொங்கல் பண்டிகை விவசாயத்தை செழிக்க வைக்கும் சூரியன் மற்றும் பிற உயிர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடபடுகிறது. விவசாயிகளுக்கு உற்ற நண்பனாக இருக்கும் மாடுகளுக்கு  பூஜை செய்ய கொண்டாடப்படும் ஒரு அருமையான பண்டிகை மாட்டுப் பொங்கல்.

மாட்டு பொங்கல் எப்படி கொண்டாட வேண்டும் 

தை திங்கள் 2 ஆம் நாள் அதாவது 15.01.2021 சனிக்கிழமை காலை 07.30 - 09.00 மணிக்குள் குரு ஓரையில் மாடுகளுக்கு ஜலத்தில் வில்வ இலை, வெட்டிவேர், சிவப்பு பூசணி பூ, புஷ்பம், சங்கராந்தி பொங்கல் பூஜை செய்த புஷ்பம், இவைகளை தண்ணீரில் போட்டு, அதனுடன் பன்னீர் கலந்து குளிப்பாட்டி விட வேண்டும். பின்னர் மாட்டுக் கொட்டகையை நன்றாக சுத்தம் செய்து வண்ண வண்ண கோலமிட்டு மாடுகளை மஞ்சள் குங்குமம் வைத்து அழகாக அலங்கரித்து பொங்கல் வைத்து, கோ பூஜை செய்வது நன்மை தரும்.

மாடுகளை மட்டுமின்றி உழவுக்கு உதவும் கருவிகளையும் சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைத்து மாடுகளோடு சேர்த்து அவற்றையும் வழிபடுவார்கள். பல ஊர்களில் மஞ்சுவிரட்டு மற்றும் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட மாடுகள் சார்ந்த வீர விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

பொங்கல் வைக்க நல்ல நேரம் 

13.01.2022 - மார்கழி 29 - வியாழக்கிழமை:

பொங்கல் காப்பு கட்ட நல்ல நேரம்:

காலை 07.30 - 09.00

காலை 10.30 - 12.00

14.01.2022 - தை 01 - வெள்ளிக்கிழமை:

தைப் பொங்கல் வைக்க நல்ல நேரம்:

மதியம் 12.00 - 01.30 வரை

மாலை 04.30 - 06.00 வரை

15.01.2022 - தை 02 - சனிக்கிழமை:

மாட்டுப் பொங்கல் பூஜை செய்ய நல்ல நேரம்:

காலை 07.30 - 09.00

காலை 10.30 - 12.00

சிலர் கனு சனிக்கிழமை வைப்பார்கள். அதனால்

சனிக்கிழமை கனு பூஜை செய்ய நல்ல நேரம்:

காலை 07.30 - 09.00

காலை 10.30 - 12.00

சிலர் கனு தை 03 அனுசரிப்பார்கள். அதனால்

ஞாயிற்றுக்கிழமை கனு பூஜை செய்ய நல்ல நேரம்:

காலை 06.00 - 07.30

காலை 10.30 - 12.00

மேலும் படிக்க... Pongal 2022 : பொங்கல் பண்டிகையும் சூரிய வழிபாடும்!

First published:

Tags: Pongal, Pongal festival