Home /News /spiritual /

Pongal 2022 : பொங்கல் எப்போது கொண்டாடப்படுகிறது? தேதி, நேரம் குறித்த தகவல்கள்...

Pongal 2022 : பொங்கல் எப்போது கொண்டாடப்படுகிறது? தேதி, நேரம் குறித்த தகவல்கள்...

பொங்கல் பண்டிகைஎன்பது அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.பொங்கல் என்பதற்கு பொங்கி வழிதல் பொங்குதல்' என்பது பொருள். அதாவது புதிய பானையில், புத்தரிசியிட்டு, அரிசியில் இருந்து பால் பொங்கி வழிந்து பொங்கி வருவதால், தை பிறந்துள்ள புத்தாண்டு முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கி சிறக்கும்.

மேலும் படிக்கவும் ...
மகர சங்கராந்தி என்பது சூரிய நாட்காட்டியின்படி அனுசரிக்கப்படும் மிகப்பெரிய இந்தியா பண்டிகைகளில் ஒன்றாகும். இது இந்திய மக்களால் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது, ஆனால் மாநிலங்களுக்கு மாநிலம் வெவ்வேறு பெயர்களால் அறியப்படுகிறது. தமிழ்நாட்டில், மகர சங்கராந்தி பொங்கல் என்று அழைக்கப்படுகிறது. இந்த பொங்கல் விழா மூன்று நாட்களுக்கு இங்கு கொண்டாடப்படுகிறது. இந்த  பொங்கல் தமிழ்நாட்டில் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றாகும், மேலும் இது போகி, தைப் பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் என தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. 

பொங்கல் விழா போகியுடன் தொடங்குகிறது. இந்த ஆண்டு, போகி பண்டிகை ஜனவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது. பாரம்பரியமாக தேவர்களின் அரசன் மற்றும் மழையின் கடவுளான இந்திரனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட போகி மார்கழி மாதத்தின் கடைசி நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து வண்ணம் பூசி புதுப்பிக்கிறார்கள். பழைய ஆடைகள் மற்றும் பிற தேவையற்ற பொருட்கள் அனைத்தையும்  அப்புறப்படுத்தப்படுகின்றனர்.

அத்துடன் பெண்கள் பாரம்பரிய கோலங்களை அரிசி மாவில் செய்து தங்கள் வீடுகளையும் முற்றத்தையும் அலங்கரிக்கின்றனர். விவசாயிகளும் தங்கள் விவசாய பொருட்களை வணங்கி சூரிய பகவானுக்கு நல்ல விளைச்சலை தந்தமைக்கு நன்றி கூறி வழிபாடு நடத்துவர்.

தை பொங்கல் அல்லது சூரியா பொங்கல் 2022 தேதி

இந்த ஆண்டு தை பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. தைப் பொங்கல் செழிப்பைக் குறிக்கிறது. மக்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, புது ஆடைகள் அணிந்து சூரியபகவானை வழிபடுவார்கள். உலகெங்கிலும் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் தை பொங்கல் மிக முக்கியமான நாள்.

கிராமப்புறங்களில் மக்கள் இந்த தை பொங்கலை திறந்த வெளியில் அல்லது தங்கள் முற்றத்தில் கொண்டாடுகிறார்கள். இதுதான் பாரம்பரிய முறையாகும். மஞ்சள் மற்றும் குங்குமம் தடவிய பாத்திரத்தில் புதிய மஞ்சள் இலைகள் கட்டிய பாத்திரத்தில்  பொங்கலை செய்வார்கள். அந்த பொங்கல் பொங்கி வந்தது,  மக்கள் "பொங்கலோ பொங்கல்" என்று மகிழ்ச்சியாகவும் சத்தமுடனும் கூறுவார்கள். தை பிறந்துள்ள புத்தாண்டு முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கி சிறக்கும் என்று அர்த்தமாகும்

மாட்டு பொங்கல் 2022 தேதி

இந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாளில், மக்கள் மாட்டுப் பொங்கலைக் கொண்டாடுகிறார்கள். இது கால்நடைகளுக்காக கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் விவசாயிகள் தங்கள் பசுக்களுக்கும், காளைகளுக்கும் மாலைகள் அணிவித்து, நெற்றியில் மஞ்சள் மற்றும் குங்குமம் பூசி மகிழ்வர்.  காலங்காலமாக கால்நடைகள் விவசாயத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பதால், விவசாயிகள் அவற்றை வணங்குகிறார்கள். மேலும் அன்றைய தினம் கால்நடைகளுக்கு உணவு தங்கள் கைகளால் ஊட்டி விட்டு மகிழ்வர்.

மேலும் படிக்க... பாரம்பரிய பொங்கல் செய்ய சில டிப்ஸ்!

காணும் பொங்கல் 2022 தேதி

இந்த ஆண்டு, காணும் ஜனவரி 17 அன்று கொண்டாடப்படும். கிராமங்களில்தான் காணும் பொங்கல் கொண்டாட்டங்கள் மிக சிறப்ப்பாக இருக்கும். சமூக ஒன்றுகூடல் மற்றும் கண்காட்சிகள் என கோலாகமாக இருக்கும். இருப்பினும் இந்த ஆண்டு கொரோனா காரணமாக கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க... தை மாதத்தின் சிறப்புகள்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Pongal, Pongal festival

அடுத்த செய்தி