அத்திவரதரை தரிசிக்க பிரதமர் மோடி தமிழகம் வருகை - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பிரதமர் மோடி வருகையையொட்டி காஞ்சீபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அத்திவரதரை தரிசிக்க பிரதமர் மோடி தமிழகம் வருகை - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
அத்திவரதர்-மோடி
  • News18
  • Last Updated: July 8, 2019, 5:08 PM IST
  • Share this:
காஞ்சிபுரத்தில் அத்திவரதரை இதுவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில், விடுமுறை தினமான நேற்று மட்டும் ஒன்றரை லட்சம் பேர் தரிசனம் செய்தனர். இதற்கிடையே, அத்தி வரதரை தரிசிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் 23-ம் தேதி தமிழகம் வருகிறார்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அத்திவரதர் வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை, வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் குவிந்ததால், நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

7-வது  நாளில்  மஞ்சள் நிற பட்டு ஆடை உடுத்தி பக்தர்களுக்கு காட்சி அளித்த அத்திவரதரை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வழிபட்டார். அவருடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும்  சென்றார்.


7-வது  நாளில்  மஞ்சள் நிற பட்டு ஆடை உடுத்தி பக்தர்களுக்கு காட்சி அளித்த அத்திவரதர்


இந்நிலையில், அத்திவரதரை தரிசிக்க பிரதமர் நரேந்திர மோடி வருகிற  23- ம் தேதி காஞ்சீபுரம் வருகை தர உள்ளார். அன்று அத்திவரதரை தரிசனம் செய்யும் அவர், காஞ்சீபுரத்தில் தங்கி மறுநாள் காலையில் நின்ற கோலத்தில் எழுந்தருளும் அத்திவரதரை மீண்டும் தரிசனம் செய்ய உள்ளார்.

பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அனைத்து தமிழக அமைச்சர்களும் வருகை தர உள்ளனர். மோடி வருகையையொட்டி காஞ்சீபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.மேலும் படிக்க... 40 ஆண்டுகளுக்கு பின் கோலாகலமாகத் தொடங்கிய அத்திவரதர் திருவிழா

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading