ஜூன் மாதத்தில் புதிய வாகனம் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? நல்ல நாட்கள் மற்றும் நேரம் இதோ!

மாதிரி படம்

பொதுவாகவே எந்த ஒரு முக்கிய செயலையும் செய்ய துவங்கும் போது கண்டிப்பாக அதற்கேற்ற நாள் மற்றும் நேரத்தை கணக்கிட்டு செய்வது நல்லது

  • Share this:
நேரம் நல்லா இருந்தா செய்ய துவங்கும் செயலும் தடங்கலின்றி நல்லபடியாகவே முடியும் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். இதற்கு முழு அர்த்தம் நம் ஜாதகத்தில் நடந்து வரும் நேரம் மட்டுமின்றி, ஒரு செயலைச் செய்ய துவங்கும் நாள் மற்றும் நேரத்தினையும் குறிப்பது ஆகும். பொதுவாகவே எந்த ஒரு முக்கிய செயலையும் செய்ய துவங்கும் போது கண்டிப்பாக அதற்கேற்ற நாள் மற்றும் நேரத்தை கணக்கிட்டு செய்வது நல்லது. இந்து மதத்தை பின்பற்றுவோர் குறிப்பிட்ட நாளின் நல்ல மற்றும் கெட்ட நேரங்களை தீர்மானிக்க வேத நாட்காட்டி அல்லது பஞ்சாங்கத்தை பின்பற்றுகிறார்கள்.

அதன்படி காலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ள நல்ல நேரம் அல்லது சுபமுகூர்த்த நேரங்களை பின்பற்றி ஒரு காரியத்தை நடத்தும் போது அந்த விஷயங்கள் அதிக நற்பலனை தரும் என்று நம்பப்படுகிறது. பொதுவாக பெயர்சூட்டுவிழா, திருமணம் உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகள் சுபமுகூர்த்த தினம் மற்றும் நேரங்களை பின்பற்றி செய்யப்படுகிறது. அதே போல வீடு, மனை, வாகனம் உள்ளிட்ட செல்வங்களை ஒருவர் வாங்குவது அவரது வாழ்க்கையில் முக்கிய நிகழ்வாகும்.

இவற்றையும் நல்ல நாள் மற்றும் நேரத்தில் வாங்குவது வாழ்க்கையில் அதிக செழிப்பை தரும் என்று பலரும் நம்புகின்றனர். எனவே வாகனம் வாங்க உகந்த நாள், மற்றும் தேதியை முதலிலேயே முடிவு செய்து கொள்ள பலரும் நினைக்கிறார்கள். நடப்பு மாதத்தில் (2021, ஜூன் )நீங்கள் ஒரு வாகனம் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், இன்றோடு சேர்த்து மொத்தம் 9 நல்ல நாட்கள் உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜூன் 2 (இன்று): இன்றைய நாள் கிருஷ்ண பக்ஷாவின் அஷ்டமி, இந்த நாளில் வாகனம் வாங்க சிறந்த நேரம் அதிகாலை 5:23 மணி முதல் மாலை 5:00 மணி ஆகும்.

ஜூன் 4 (வெள்ளிக்கிழமை): ஜூன் 4 ஆம் தேதி தெலுங்கு ஹனுமான் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த நாளில் நீங்கள் புதிய வானகங்களை வாங்குவதற்கான நல்ல நேரம் இரவு 8:47 மணி முதல் அடுத்த நாள் காலை 05:23 மணி வரை.

ஜூன் 10 (வியாழக்கிழமை): இந்த சனி ஜெயந்தி நாளில் உங்களுக்கான வாகனத்தை வாங்க சிறந்த நேரம் மாலை 4:24 மணிக்கு தொடங்கி ஜூன் 11 அதிகாலை 5:22 மணி வரை இருக்கிறது.

ஜூன் 11 (வெள்ளிக்கிழமை): மங்களகரமான வெள்ளிக்கிழமையான இந்த நாளில் நீங்கள் ஒரு மோட்டார் வாகனத்தை வாங்க விரும்பினால், அதற்கான சிறந்த நேரம் காலை 5:22 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2:30 மணி வரை இருக்கிறது.

ஜூன் 13 (ஞாயிற்றுக்கிழமை): சுக்லா பக்ஷாவின் திரித்தியா நாளான இந்த தேதியில் காலை 5:22 மணி முதல் இரவு 9:42 மணி வரை வாகனங்கள் வாங்க சிறந்த நேரமாக இருக்கிறது.

Also Read : 2026க்குள் இந்தியாவில் 5 டோர் வெர்சன் தார் உட்பட 9 எஸ்யூவிக்களை அறிமுகப்படுத்த மஹிந்திரா திட்டம்!

ஜூன் 20 (ஞாயிறு): இது கங்கா துஷெராவின் புனித நாள் மற்றும் நீங்கள் ஒரு வாகனத்தை வாங்க சிறப்பான நாள். ஜூன் 20 காலை 5:23 மணி முதல் மறு நாள் காலை 5:23 மணி வரை புதிய வாகனங்கள் வாங்க நல்ல நேரம் இருக்கிறது.

ஜூன் 21 (திங்கள்): காயத்ரி ஜெயந்தி கொண்டாடப்பட உள்ள இந்த நாளில் உங்கள் புதிய வாகனத்தை வாங்க சரியான நேரம் காலை 5:23 மணி முதல் மதியம் 1:33 மணி வரை இருக்கிறது.

ஜூன் 27 (ஞாயிறு): கிருஷ்ணபிங்கல சங்கஷ்டி சதுர்த்தி அனுசரிக்கப்படும் இந்நாளில், புது வாகனம் வாங்குவதற்கான நல்ல நேரம் காலை 5:25 மணி முதல் மாலை 3:56 மணி வரை இருக்கிறது.

ஜூன் 28 (திங்கள்): கிருஷ்ண பக்ஷத்தின் சதுர்த்தி தினமான இன்று வாகனம் வாங்குவதற்கான நல்ல நேரம் மதியம் 2:18 மணி முதல் ஜூன் 29 அதிகாலை 5:25 வரை ஆகும்.

 
Published by:Vijay R
First published: