முகப்பு /செய்தி /ஆன்மிகம் / நோய்களை விரட்டும் துளசி தீர்த்தம் வழிபாடு!

நோய்களை விரட்டும் துளசி தீர்த்தம் வழிபாடு!

துளசி மாலையுடன் பெருமாள்

துளசி மாலையுடன் பெருமாள்

பெருமாள் கோவில்களில் துளசி இலையையும், துளசி தீர்த்தத்தையும் பிரசாதமாக தருவார்கள். துளசி தீர்த்தத்தின் மகிமையை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க...

  • Last Updated :

துளசி இலையின் நுனியில் நான் முகனும் , மத்தியில் திருமாலும், அடியில் சிவனும், மற்றைய பகுதிகளில் பனிரெண்டு ஆதித்யர்களும் பதினோரு  ருத்திரர்களும் எட்டு வசுக்களும், இரு அசுவினி தேவர்களும் எழுந்தருளியிருக்கிறார்கள். அத்தகைய துளசி பெருமாளுக்கு உகந்தது. பெருமாள் கோயிலில், பெருமாளின் சந்நிதியில் தரப்படுகிற துளசி தீர்த்தம் மகத்துவம் வாய்ந்தது. துளசிக்கே மகிமை உண்டு. பெருமாள் பிரசாதமாகத் தரப்படும் துளசி தீர்த்தம் இன்னும் மகத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பெருமாள் சந்நிதியில், துளசி தீர்த்தம் தரும் போது, அதைப் பெறுகிற வேளையில், இந்த ஸ்லோகத்தைச் சொல்லி தீர்த்தம் பருகுவது, மகா புண்ணியம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். சகல தோஷங்களையும் நோய்களையும் தீர்த்தருளும் என்கிறார்கள்.

துளசி தீர்த்தம் பெறும் போது...

அகால ம்ருத்யு ஹரணம்

ஸர்வ வியாதி நிவாரணம்

ஸமஸ்த பாப ஸமனம்

விஷ்ணு பாதோதகம் சுபம்

என்று சொல்லிவிட்டு, துளசி தீர்த்தம் பருகுங்கள். பருகி முடித்ததும் ‘நாராயணா’ என்று மூன்று முறை சொல்லுங்கள். அனைத்து கடாட்சங்களும் கிடைக்கம் என்பது ஐதீகம். மேலும் பெருமாளுக்கு உகந்த தெய்வீகத்தன்மையுள்ள துளசி, காயகற்ப மூலிகையென, சித்தர்களால் போற்றப்படுகிறது. பெருமாள் கோவில்களில் பூஜை செய்யும் பொது அர்ச்சனைக்காகவும், அபிஷேக தீர்த்தங்களிலும், தெய்வீக மூர்த்திகளுக்கு மாலையாக அணிவிப்பதிலும் துளசி இலை முக்கியத்துவம் பெறுகிறது.

துளசியால் பெருமாளை அர்ச்சனை செய்கின்றனர், துளசி தீர்த்தத்தினால் அபிஷேகம் செய்கின்றனர். துளசி தீர்த்தத்தை பக்தர்களுக்கு கொடுக்கின்றனர். அதை அருந்துவதன் மூலம் நம்முடைய பாவங்கள் தீர்வதோடு நோய் நொடிகளும் அண்ட விடாமல் நம் உடம்பிற்குள் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.

மேலும் படிக்க... செவ்வாய் தோஷத்துக்கு விதிவிலக்கு உண்டு!

துளசி தீர்த்தத்தின் மருத்துவ குணங்கள்

துளசியின் மகிமையை உணர்ந்தவர்கள் வீடுகளில் துளசியை இறைவனுக்கு சமமாக கருதி துளசிச் செடியை நட்டு வழிபடுகிறார்கள். கோவிலில் கிடைக்கும் துளசி தீர்த்தம் மருத்துவ குணங்கள் உடையது. சுத்தமான நீரைவிட துளசி தீர்த்தம் பல ஆயிரம் மடங்கு நன்மை தருவதாகும். துளசி உஷ்ணத்தைக் குணமாக கொண்டது. ஆனாலும் இந்த உஷ்ணம் தான் கபம் கட்டாமலும் ஜலதோஷம் மற்றும் சீதலம் தொடர்பாக மழைக்காலங்களில் வரும் நோய் நொடிகளில் இருந்தும் காப்பாற்றும்.

மேலும் படிக்க... இன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை... பெருமாளை வழிபட்டால் நல்லது!

' isDesktop="true" id="586689" youtubeid="WRWRnwqOQPM" category="spiritual">

துளசியில் பயோபிளாவினாய்டு, குளோரோபில் போன்றவை அதிகம் இருப்பதால் இது ஒரு ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுகிறது. துளசியைச் சாப்பிடுவதன்மூலம் சைனஸ், ஆஸ்துமா, ஒற்றைத் தலைவலி வராமல் பார்த்துக்கொள்ள முடியும். தினமும் 10 முதல் 15 துளசி இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால் மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

மேலும் படிக்க... துளசி செடி உங்கள் வீட்டில் உள்ளதா? அப்போ தவறியும் இந்த தவறை செய்து விடாதீர்கள்...

First published:

Tags: Purattasi