ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

சுக்கிரனின் ஆதிக்கம்: 6-ஆம் தேதியில் பிறந்தவர்கள் இப்படி தான் இருப்பார்கள்.!

சுக்கிரனின் ஆதிக்கம்: 6-ஆம் தேதியில் பிறந்தவர்கள் இப்படி தான் இருப்பார்கள்.!

6ஆம் தேதி

6ஆம் தேதி

Numerology No 6 | 6-ஆம் தேதி பிறந்தவர்கள் ஆடம்பரம், செல்வச்செழிப்பு, அதிர்ஷ்டம், அருமையான குடும்பம் மற்றும் நண்பர்களை பெறுவார்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

எண் கணித ஜோதிடத்தின் படி 6-ஆம் தேதியில் பிறந்தவர்கள் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். ஏனென்றால் வேத ஜோதிடத்தில் 6 என்பது சுக்கிரனை குறிக்கும் கிரகமாகும்.

சுக்கிரனின் ஆதிக்கம் அதிகம்:

6-ஆம் தேதியில் பிறந்தவர்கள் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் அழகு, கலைநயம், கலை உணர்ச்சி, ஆடம்பரமான பொருட்கள், வசதியான வாழ்க்கை என்று ஒரு மனிதன் மகிழ்ச்சியாகவும் சொகுசாகவும் வாழ்வதற்கு எவையெல்லாம் தேவையோ அவை அனைத்தின் மீதும் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். எனவே தான் எண் 6 என்பது செல்வ செழிப்பு என்று குறிப்பிடப்படுகிறது. அது மட்டுமில்லாமல் ஆறு மற்றும் சுக்கிரன் என்பது கலைத்துறை, நடிப்பு, எழுத்து ஆகியவற்றின் காரகத்துவத்தை கொண்டுள்ளது. எனவே 6-ஆம் தேதி பிறந்தவர்கள் ஆடம்பரம், செல்வச்செழிப்பு, அதிர்ஷ்டம், அருமையான குடும்பம் மற்றும் நண்பர்களை பெறுவார்கள்.

6-ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் தருபவை:

அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ளூ மற்றும் பிங்க்

அதிர்ஷ்ட நாள் : வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண்கள் : 5 மற்றும் 6

6-ஆம் தேதி பிறந்தவர்களின் ஆளுமை பண்புகள்:

பார்ப்பதற்கு ஸ்மார்ட்டாக இருப்பார்கள், கலை நயமிக்கவர்கள். தனித்துவமான படைப்பாற்றல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். மிகவும் பொறுப்பான நபர்களாகவும் நடந்து கொள்வார்கள். ஆன்மிகம் மற்றும் கடவுள் பக்தியில் சிறந்து விளங்குவார்கள். பிறரின் துன்பத்தை போக்க அர்ப்பணிப்புடன் உதவி செய்வார்கள். தங்களுக்கு கொடுக்கப்படும் வேலைகளை நேர்த்தியாகவும், திறம்படவும் செய்து முடிப்பார்கள். அன்பானவர்கள் மற்றும் கனிவான இதயம் கொண்டவர்கள்.

6-ஆம் தேதி பிறந்தவர்கள் மாற்றி கொள்ள வேண்டிய விஷயங்கள்:

பணிவான மற்றும் கனிவான நபர்களாக இவர்கள் இருப்பதால் இவர்களது வளைந்து கொடுக்கும் தன்மையை மற்றவர்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள். எனவே எங்கே வளைய வேண்டும், எங்கே நிமிர வேண்டும் என்பதை தெரிந்து நடப்பது அவசியம். மேலும் எப்போதும் அதிக பொறுப்புகளை எடுத்து கொண்டு சுமை தாங்கியாக இருப்பார்கள். இதை மாற்றி கொள்வதும் முக்கியம். அதே போல பல நேரங்களில் கற்பனையிலேயே மிதப்பார்கள், கற்பனைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். தனிமை பயம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவற்றையும் இவர்கள் மாற்றி கொள்ள வேண்டும்.

Also Read : புதனின் ஆதிக்கத்தில் 23 ஆம் தேதியில் பிறந்தவர்கள் இப்படித் தான் இருப்பார்கள்.!

6-ஆம் தேதி பிறந்தவர்களுக்கு சாதகமான தொழில்கள்:

அக்சஸரீஸ், காஸ்மெட்டிக்ஸ், பியூட்டி ப்ராடக்ட்ஸ், மேக்கப் ஆர்ட்டிஸ்ட், ஸ்டாக் மார்க்கெட், சினிமா, கமிஷன் ஏஜென்ட், ரெஸ்டாரன்ட், ரீடெயில் ஸ்டோர்ஸ், டிசைனர், ஃபர்னிச்சர், அரசியல், ஸ்போர்ட் ஐட்டம்ஸ், ஜுவல்லரி, மெட்டல், சாக்லேட் உள்ளிட்ட துறை சார்ந்த தொழில்களில் 6-ஆம் தேதி பிறந்தவர்கள் ஈடுபட்டால் அமோக வளர்ச்சி பெறலாம்.

6-ஆம் தேதியில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்க என்னவெல்லாம் செய்யலாம் :

- ஏழைகள் அல்லது ஆதரவற்றோருக்கு சர்க்கரை அல்லது தயிர் தானம் செய்யலாம்

- எல்லா வெள்ளிக்கிழமையும் தவறாமல் லட்சுமி தேவியை வழிபடவும்

- இடது கையில் மெட்டாலிக் சில்வர் வாட்ச் அல்லது வளையல் அணியவும்

- உங்கள் பணியிடத்திற்கு அருகேயே உங்கள் வீடு இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்

- மது, புகை பழக்கத்தை தவிர்க்கவும்

- தோல் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்

- சில்வர் கலர் 6 ஸ்ட்ரிங் விண்ட் சைம்ஸ்-ஐ வீட்டின் கிழக்கு சுவரில் பொருத்தலாம்

Published by:Selvi M
First published:

Tags: Astrology, Numerology, Tamil News