ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

புதனின் ஆதிக்கத்தில் 23 ஆம் தேதியில் பிறந்தவர்கள் இப்படித் தான் இருப்பார்கள்.!

புதனின் ஆதிக்கத்தில் 23 ஆம் தேதியில் பிறந்தவர்கள் இப்படித் தான் இருப்பார்கள்.!

23ஆம் தேதி

23ஆம் தேதி

Numerology No 23 | வேத ஜோதிடத்தின் படி, புதன் என்பது மிக மிக இளமையான கிரகம். அறிவு, புத்திசாலித்தனம், பேச்சு, பேச்சு சாதுரியம், கணக்கு, கணிதம், புள்ளியியல் உள்ளிட்ட பல்வேறு காரகன்களுக்கு அதிபதி புதன் தான்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

எண் கணித ஜோதிடத்தில் 23 என்ற தேதியில் பிறந்தவர்கள் புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். 23 என்ற எண்ணின் கூட்டுத்தொகை 5 ஆகும். ஐந்து என்பது புதன் கிரகத்தைக் குறிக்கும். எனவே, புதனின் அனைத்து காரகத்துவம்சத்தையும் தன்மையையும் இவர்கள் பெற்றிருப்பார்கள்.

புதனின் ஆதிக்கம் அதிகம்

வேத ஜோதிடத்தின் படி, புதன் என்பது மிக மிக இளமையான கிரகம். அறிவு, புத்திசாலித்தனம், பேச்சு, பேச்சு சாதுரியம், கணக்கு, கணிதம், புள்ளியியல் உள்ளிட்ட பல்வேறு காரகன்களுக்கு அதிபதி புதன் தான். அதுமட்டுமல்லாமல் ஜோதிடத்தில் கன்னி மற்றும் மிதுன ராசியின் அதிபதியாக புதன் செயல்படுகிறார். புதன் பெரும்பாலான கிரகங்களுக்கு நட்பு கிரகமாகத்தான் இருக்கிறார். எனவே இவை அனைத்துமே புதனின் ஆதிக்கத்தில் 23 ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கு பொருந்தும்.

23 ஆம் தேதி பிறந்தவர்களின் பொதுவான குணங்கள்

புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் மிகவும் ரொமான்டிக்காக இருப்பார்கள். இவர்கள் காதலுக்காகவே பிறந்தவர்கள் என்று கூறலாம். வாழ்க்கை முழுவதும் இவர்களுக்கு பல வித ஆச்சரியங்கள் காத்திருக்கும். இவர்களும் மற்றவர்கள் மீது அதிக அன்பும் பாசமும் செலுத்துவதில் தவறவே மாட்டார்கள். இவர்களுக்கு பயணம் செய்வது மிகவும் விருப்பமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் பல புதிய இடங்களை தேடிச் சென்று வெவ்வேறு அனுபவங்களை பெற விரும்புவார்கள்.

விளையாட்டு, அரசியல், ஆட்டோமொபைல், ஏற்றுமதி இறக்குமதி, விமானம், சுற்றுலா, பங்குச் சந்தை, நிர்வாகத் திறன் தேவைப்படும் வேலைகள் ஆகியவை இவர்களுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

புதனின் ஆதிக்கத்தில் 23 ஆம் தேதி பிறந்தவர்களின் சிறப்பம்சங்கள்

புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் அற்புதமான பேச்சாளர்களாக இருப்பார்கள். இவர்களுடன் உரையாடுவதே மிக மிக அழகான அனுபவமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல், உரையாடல் வழியாக ஜெயிக்க முடியாது. தங்களை மிக அழகாக கலைநயத்தோடு வெளிப்படுத்திக் கொள்வதில் மிகவும் வல்லவர்கள். மிகவும் புத்திசாலித்தனமாக சிந்திப்பவர்கள். இவர்களின் புத்திசாலித்தனமே மற்றவர்களிடமிருந்து இவர்களை தனித்து காட்டும். லாஜிக்கலாக சிந்திப்பது மற்றும் முடிவெடுப்பதில் கைதேர்ந்தவர்கள்.

Also Read : உங்க குணம் இதுதான்.. உடல் மொழியை புட்டுபுட்டு வைக்கும் உங்களது ராசி!

எந்த விஷயமாக இருந்தாலும் அதனை மனதோடு சம்பந்தப்படுத்தாமல், நடைமுறைப்படி சிந்தித்து செயல்படுவார்கள். அற்புதமாக திட்டமிட்டு அதனை அழகாக செய்து முடிப்பார்கள். இளமையாக உணர்வார்கள், இவர்கள் உடன் இருப்பவர்களும் இளமையாக உணர செய்வார்கள். திருமணம் மற்றும் வேலை வணிகம் என்று எதுவாக இருந்தாலுமே மற்றவர்களை விட இவர்கள் கொஞ்சம் அதிர்ஷ்டசாலி என்றே கூறலாம்.

23 ஆம் தேதி பிறந்தவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டியது

பேச்சில் சாதுர்யம் நிறைந்திருப்பதால் இவர்கள் கொஞ்சம் சுயநலவாதியாக தோன்றலாம். அதுமட்டுமில்லாமல் உறவுகளைப் பொறுத்தவரை மற்றவர்களை எளிதாக ஈர்த்தாலும், பிறரின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள வேண்டும். மிகவும் லாஜிக்கலாக அல்லது நடைமுறைப்படி நடந்து கொள்ளக் கூடாது, சில நேரங்களில் உணர்ச்சி பூர்வமாக சிந்திப்பது உறவுகளில் பிரச்சனை ஏற்படாமல் இருக்க உதவும்.

Also Read : உங்கள் ராசிப்படி என்ன செய்தால் எளிதில் மன அழுத்தம் குறையும்.?

இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய குறை என்னவென்றால், இவர்கள் தோற்றத்தை பார்த்து மற்றவர்களை எளிதாக எடை போடுவார்கள் அல்லது தோற்றத்தினால் காதல் வயப்படுவார்கள். ஒரு நபர் அழகாக இருந்தால் அவர் உடனே நல்லவர் அல்லது திறமையாளர் என்பதே கிடையாது. எனவே தோற்றத்தை வைத்து ஒருவரை எடை போடுவதை 23 ம் தேதியில் பிறந்தவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.

23 ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் தருபவை

அதிர்ஷ்டமான நிறங்கள் – பச்சை மற்றும் நீலம்

அதிர்ஷ்டமான எண்கள் – 5 மற்றும் 6

ராசியான கிழமை – புதன்

  • ஐந்து முகம் கொண்ட ருத்திராட்சம் அணியலாம்
  • விநாயகருக்கு தினசரி பூஜை செய்யலாம்
  • காலையில், வெறுங்காலில் புல் மீது நடக்கலாம்
  • புதன்கிழமைகளில் கால்நடைகளுக்கு பச்சை இலை தழைகளை உணவளியுங்கள்
  • மாமிசம், மது, புகையிலை, விலங்குகளின் தோல் பொருட்களை ஆகியவற்றை தவிர்க்கவும்

ஆலோசனை: வாழ்க்கை சம்மந்தப்பட்ட எந்த முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றாலும், புதன் கிழமை அன்று எடுக்கவும்.

Published by:Selvi M
First published:

Tags: Astrology, Numerology, Tamil News