பிரசித்திப்பெற்ற பேராவூர் தீமிதித் திருவிழா.. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
பிரசித்திப்பெற்ற பேராவூர் தீமிதித் திருவிழா.. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
பேராவூர் தீமிதித் திருவிழா
Peravur theemithi thiruvizha | குத்தாலம் அருகே பிரசித்திப்பெற்ற தீமிதி திருவிழாக்களில் ஒன்றான பேராவூர் தீமிதித்திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் சாத்தினர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்...
குத்தாலம் அருகே பிரசித்திப்பெற்ற தீமிதி திருவிழாக்களில் ஒன்றான பேராவூர் தீமிதித்திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் சாத்தினர். ..
மயிலாடுதுறை மாவட்டத்தில் தீமிதித்திருவிழாக்களில் புகழ்பெற்ற பேராவூர் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. குத்தாலம் அருகே பேராவூர் கிராமத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீகாமாட்சி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இவ்வாலயத்தின் தீமிதி திருவிழா கடந்த 6ஆம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் துவங்கியது.
தீமிதி திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் அம்மனுக்கு பேராவூர், கருப்பூர் கிராமவாசிகளால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன. 9ஆம் நாள் திருவிழாவாக தீமிதி திருவிழாவை முன்னிட்டு ஆற்றங்கரையிலிருந்து சக்தி கரகம் புறப்பட்டு ஆலயம் வந்தடைந்தது.
தொடர்ந்து ஆலயம் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் சக்திகரகம் இறங்கியது. தொடர்ந்து நூற்றக்கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மஞ்சள் உடையனிந்த பக்தர்கள் அம்மனின் பாதுகாப்பு ஆயுதமான சுக்குமாந்தடிகளை கையில் ஏந்தியபடி பக்தி பரவசத்துடன் ஆனந்த நடனமாடினர்.
அதன் பின்னர் பெண்கள் மாவிளக்கு படையலிட்டு வழிபாடு செய்தனர். இவ்விழாவில் கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதி திருவிழாவை கண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாளை மஞ்சள் நீராட்டுவிழாவுடன் விழா முடிவடைகிறது.
செய்தியாளார்: கிருஷ்ணகுமார்
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.