முகப்பு /செய்தி /ஆன்மிகம் / G என்பதை முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் இப்படி தான் இருப்பார்கள்!

G என்பதை முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் இப்படி தான் இருப்பார்கள்!

G முதல் எழுத்து

G முதல் எழுத்து

Alphabet G - Characteristics | இயற்கையாகவே இந்த எழுத்தில் பெயர் வைத்திருப்பவர்களுக்கு எளிமையான, நேர்மறையான தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு தேவையில்லாத எந்த விஷயத்திலும் தலையிட மாட்டார்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒவ்வொரு எழுத்துக்கும், ஒவ்வொரு எண்ணும், அதற்குரிய தன்மைகளும் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு, அதை சார்ந்த எழுத்தை முதல் எழுத்தாக வருமாறு பெயர் வைத்தால் அதிர்ஷ்டமாக இருக்கும் என்று குழந்தைக்குப் பெயர் சூட்டுவதில் பல விஷயங்கள் இருக்கின்றன.G என்ற எழுத்தில் பெயர் வைத்திருப்பவர்களுக்கு என்று தனிப்பட்ட சில குணங்கள் இருக்கும். அதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

G என்ற ஓசையின் ஈர்ப்பு சக்தி:

ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு எண் சார்ந்த கிரகத்தின் காரகம் பொருந்தும். ஆனால், இந்த எழுத்து கொஞ்சம் ஸ்பெஷல். 7 ஆம் எண்ணான கேதுவின் ஆதிகத்தில் இருக்கும் இந்த எழுத்துக்கு, குருவின் தன்மையும் உள்ளது. இயல்பாகவே இந்த ஓசைக்கு ஈர்ப்பு சக்தி உள்ளது. எனவே, இந்த எழுத்தை பெயரின் முதல் எழுத்தாக வைத்திருப்பவர்கள் ஈர்ப்பு சக்தி கொண்டவர்களாக, மற்றவர்களிடம் இருந்து தனித்து தெரிபவர்களாக இருப்பார்கள்.

Read More : மொபைல் நியூமராலாஜி: உங்கள் மொபைல் எண்ணில் 7 ஆம் எண் இருந்தால் இதைப்படிங்க.!

எண் கணித ஜோதிடத்தில் கேதுவின் ஆதிக்கம் பெற்ற G எழுத்து

எண் கணித ஜோதிடத்தில் ஜாதகத்தில் G என்ற எழுத்து 7 ஆம் எண்ணைக் குறிக்கும். இது அறிவு, ஞானம், நேர்மை, பிரிவு, ஆன்மிகம், பற்றின்மை, நம்பகத்தன்மை, நிதானம் மற்றும் பக்தி ஆகியவற்றை குறிக்கும் எண் ஆகும். கேதுவின் அனைத்து தன்மைகளும் இந்த எழுத்தில் பெயர் கொண்டவர்களுக்கு பொருந்தும்.

G என்ற எழுத்து முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்களின் குணாதிசியங்கள் மற்றும் பலம் : 

இயற்கையாகவே இந்த எழுத்தில் பெயர் வைத்திருப்பவர்களுக்கு எளிமையான, நேர்மறையான தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு தேவையில்லாத எந்த விஷயத்திலும் தலையிட மாட்டார்கள்.
நேர்த்தியான, சீரான சிந்தனைகள் கொண்டிருப்பார்கள். சிக்கலில் மாட்டிக் கொள்ள மாட்டார்கள். அனைவரையும் மதித்து நடக்க வேண்டும் என்ற குணம் அடிப்படையில் மாறாவே மாறாது. இவர்கள் நட்புக்கு மதிப்பு கொடுப்பார்கள்.
குடும்ப வாழ்க்கையில் அன்பாக, அனைவரையும் அரவணைத்து செல்லும் குணம் கொண்டவர்கள். எந்த இடத்தில் இருந்தாலும், அதற்குரிய பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.படிப்பு, அலுவலக வேலை, வணிகம் என்று பெரும்பாலும் மிகவும் அர்பணிப்புடன் செயல்படுவார்கள்.
பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருப்பதால், அறிவை மேம்படுத்திக் கொண்டே, வாழ்வில் பெரிய நிலைகளை அடைகிறார்கள். எவ்வளவு விஷயம் தெரிந்தாலும், மற்றவர்கள் கூறும் ஆலோசனையை தட்ட மாட்டார்கள்.
அறிவு, அன்பு, சிந்தனை, செயல், நடத்தை, வளர்ச்சி என்று தனிப்பட்ட வாழ்விலும், பொது வாழ்விலும், மற்றவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவீர்கள்.அமைதியானவர்கள், எல்லாவற்றையும் அனுசரித்துசெல்வார்கள். கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆர்வம், பொறுப்பு மற்றும் பொறுமை அதிகம்.
யாரையும் இழிவாக நினைக்காத தன்மை, சுயநலம் இல்லாதவர்கள்,வயதை விட அதிக முதிர்ச்சியும் பக்குவமும் கொண்டவர்கள்.தலைமை பண்புகள் நிறைந்தவர்கள், அற்புதமான வழிகாட்டி,சிறந்த பெற்றோராக இருப்பார்கள்,பிரச்சனைகளை சரியாக கையாள்வார்கள்.
G என்ற எழுத்து முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்களின் பலவீனங்கள் : வாழ்க்கை சீராக, நேர்கோட்டில் பயணிப்பதை மற்றவர்கள் பார்க்கும் போது, மிகவும் கடுமையாக இருக்கும் நபரோ என்று தோன்றும். கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் ஆஃபீசர் போலக் காட்சி அளிப்பார்கள்.
மற்றவர்கள் செய்யும் விரும்பத்தகாத விஷயங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டமைப்பை மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்று விரும்புவார்கள். இது தன்னுடைய கருத்தை பிறர் மீது திணிப்பது போல இருக்கும்.
காதல், ரொமான்ஸ் என்று வரும் போது, ‘ரொமான்ஸ் என்றால் கிலோ என்ன விலை’ என்று இவர்கள் கொஞ்சம் பின்தங்கி தான் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் அன்பை வெளிப்படுத்த ஒவ்வொரு பாணி இருக்கும். சில நேரங்களில் அன்பை சரியாக வெளிப்படுத்தத் தெரியாமல் தடுமாறுவார்கள்.
எவ்வளவு நெருக்கமான நண்பர்களாக அல்லது உறவாக இருந்தாலும், தனக்கு பிடிக்காதவற்றை அல்லது தன்னால் ஏற்றுக்கொள்ளாதவற்றை செய்தால், அவரிடம் இருந்து விலகி விடுவார்கள். குடும்பத்தில் இது நடந்தால், பேச்சு வார்த்தையை குறைப்பார்கள் அல்லது தவிர்ப்பார்கள்.
உண்மை மட்டுமே பேச வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, சுற்றி வளைத்து பேசுவது பிடிக்காது,அதீத நேர்மை,செலவு செய்வதில் கொஞ்சம் கறார்.உடனடியாக முடிவுகளை எடுக்க முடியாது, எல்லாவற்றுக்கும் திட்டமிட்டு செய்வது சில நேரங்களில் தாமதமாகும்.
First published:

Tags: Letter, Numerology, Trending News, Viral