Home /News /spiritual /

எண் கணித பலன்கள்: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று ( 03-09-2022) ஆதரவற்றோர் இல்லத்தில் ஆடைகளை தானம் வழங்குங்கள்

எண் கணித பலன்கள்: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று ( 03-09-2022) ஆதரவற்றோர் இல்லத்தில் ஆடைகளை தானம் வழங்குங்கள்

எண் கணித பலன்கள்

எண் கணித பலன்கள்

Numerology | செப்டம்பர் 3-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று சொத்து வாங்குவது மற்றும் சொத்துக்களை விற்பது இரண்டுமே சிக்கலானதாக இருக்கும். போட்டிகளில் பங்கேற்பதற்கு முன் ஆசிரியர் அல்லது பயிற்சியாளரின் ஆலோசனையை பெற்று அவர்கள் கூறுவதை அப்படியே பின்பற்றுங்கள். ஆளுமை காரணமாக உங்கள் ஆக்கப்பூர்வ பலம் இன்று மேம்படும். நிதி, கலை, எழுதுபொருட்கள், கட்டுமானம், விவசாயம், புத்தகங்கள், மருந்துகள் மற்றும் இசை உள்ளிட்ட வணிகங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் லாபம் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - ஞாயிறு

அதிர்ஷ்ட எண் -1

தானம் - பிச்சைக்காரர்களுக்கு மஞ்சள் கடுகு எண்ணெய் தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

மனநிலை மாற்றங்கள் இன்று உங்கள் மனதை அலைபாய வைக்கும் என்பதால் உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்துங்கள். சட்டப்பூர்வ கடமைகள் இருந்தால் அதை இன்று தாமதமின்றி நிறைவேற்றுவீர்கள். ஆலோசனை நிறுவனங்கள் மற்றும் வழக்கறிஞர்கள் இன்று அதிக நன்மைகளை பெறுவார்கள். நேரம் கிடைக்கும் போது சந்திரன் மந்திரத்தை உச்சரிக்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - பீச்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்

அதிர்ஷ்ட எண் - 2 மற்றும் 6

தானம் - கோவிலில் தேங்காய் தானம் செய்யுங்கள்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும் என்றாலும் நிதானமாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பொது பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள், சமையல் கலைஞர்கள், தையல் கலைஞர்கள், ஒப்பனை கலைஞர்கள், அரசியல்வாதிகள், வங்கியாளர்கள், சிஏ அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் இன்று சிறந்த வருமானம் பெறுவார்கள். இன்று குடிக்கும் தண்ணீரில் துளசியை சேர்த்து கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

அதிர்ஷ்டமான நாள் - வியாழன்

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

தானம் - பிச்சைக்காரர்களுக்கு மஞ்சள் அரிசி தானம் செய்யுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

சில திட்டங்களை இன்று நீங்கள் யோசித்தாலும் அதனை உடனே செயல்படுத்தி விடாதீர்கள். அதற்கான நேரத்திற்காக காத்திருங்கள். பிறரின் ஆக்கப்பூர்வ யோசனை மற்றும் அணுகுமுறையை ஏற்றுக்கொள்ள மனதளவில் தயாராக இருங்கள். மென்பொருள், தகவல் தொழில்நுட்பம், காகிதங்கள், மரம், கட்டுமானம், இயந்திரங்கள், உலோகங்கள் மற்றும் தரகர்கள் போன்ற வணிகங்களில் உள்ளோர் இன்று தொழிலை விரிவாக்கம் செய்யலாம்.

அதிர்ஷ்ட நிறம் - பீஜ்

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - ஆதரவற்றோர் இல்லத்தில் ஆடைகளை தானம் வழங்குங்கள்

#எண் 5 (நீங்கள் 5,14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களின் பிராக்டிக்கல் நடைமுறை சில சமயங்களில் மற்றவர்களை காயப்படுத்தலாம். எனவே கவனமாக நடந்து கொள்ளுங்கள். உங்கள் செயல்திறனுக்கேற்றஅங்கீகாரம் இன்று கிடைக்கும். விளையாட்டு வீரர்கள், நடிகர்கள், மாடல்கள், திரைப்பட இயக்குனர்கள், நடன இயக்குனர்களுக்கு இன்று நல்ல நாள்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - புதன்

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - ஆதரவற்றோர் இல்லத்தில் பால் தானம் செய்யுங்கள்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களது எதிர்காலம் நிச்சயம் சிறப்பாக இருக்கும் என்பதால் இன்று நீங்கள் இருக்கும் நிலையை பற்றி அதிகமாக சிந்திப்பதைத் தவிர்க்க வேண்டும். இன்று நீங்கள் எதிர்காலத்தை நினைத்து மகிழ்ச்சியாக இருங்கள். அரசு அதிகாரிகள், பாதுகாப்புப் பணியாளர்கள், விமானிகள், நகைக்கடைக்காரர்கள், நடிகர்கள் மற்றும் மருத்துவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் நாள்.

அதிர்ஷ்ட நிறம் - பிங்க்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - ஆசிரமங்களுக்கு வெள்ளை மாவு அல்லது உப்பு தானம் செய்யுங்கள்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்தில் உங்களுக்கு நன்மை தரும். தனிப்பட்ட வாழ்க்கையில் சில தொந்தரவுகள் ஏற்படலாம். பணியிடத்தில் மேலதிகாரி அல்லது சீனியர்களிடம் உண்மைகளை மட்டுமே இன்று சொல்ல வேண்டும். ஆன்மீகப் பள்ளிகள், விவசாயம், தானியங்கள் ஆகியவற்றில் பணிபுரிபவர்களுக்கு இது ஒரு சிறந்த நாள். வணிக உறவுகள் ஆரோக்கியமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்

அதிர்ஷ்ட எண் - 7

தானம் - வீட்டில்வேலை செய்பவர்களுக்கு மஞ்சள் துண்டு தானம் செய்யுங்கள்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை தவிர்க்கவும். ஆன்மீகம் மற்றும் காதல் உறவுகளில் நம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரத்தில் பரிவர்த்தனைகள் வெற்றிகரமாக இருக்கும் என்றாலும் அனைத்தையும் நேரத்திற்கு முடிக்க வேண்டும். உங்களுடன் பணியாற்றும் சீனியரின் பேச்சை கேட்டு நடங்கள். இன்று குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - கால்நடைகளுக்கு தானியங்களை தானம் செய்யுங்கள்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

சொத்து வியாபாரிகள் மற்றும் கலைஞர்களுக்கு இன்று நம்பிக்கை நிறைந்த நாள். பழைய நண்பர்கள் அல்லது சக நண்பர்களின் உதவியுடன் வேலை அல்லது தொழிலில் அதிகாரம் பெறுவீர்கள். இன்று கோபத்தை கட்டுப்படுத்த நினைவில் கொள்ளுங்கள். உங்கள் திருமணத் திட்டத்தை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள நல்ல நாள்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்

அதிர்ஷ்ட எண் - 9 மற்றும் 6

தானம் - ஏழைகளுக்கு பழங்களை தானம் செய்யுங்கள்

செப்டம்பர் 3-ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: விவேக் ஓப்ராய், சத்குரு ஜக்கி, சக்தி கபூர், உத்தம் குமார், சாக்ஷி மாலிக், கோவிந்த் நாம்தேவ்
Published by:Ramprasath H
First published:

Tags: Astrology, Numerology

அடுத்த செய்தி